ஆதிரையும்,புனிதாவும் நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளியில் படித்துவந்தார்கள்.ஆதிரை எப்போதும் புனிதாவை பற்றிதான் தன் வீட்டில் பேசிக்கொண்டே இருப்பாள்.இவ்வாரக இருவருக்கும் பள்ளி நாட்கள் மகிழ்ச்சியாக போய்கொண்டிருந்தது.ஒரு நாள் ஆதிரை மிக வருத்தத்துடன் வீடு திரும்பினாள்.ஏன்டா கண்ணா உன் முகம் வாடிருக்கு என்று அம்மா கேட்க ,ஆதிரை அழ தொடங்கினாள்.புனிதா இனி மேல் என் தோழியே இல்லை என்றாள்.ஏன்டா செல்லம் என்று கேட்டார், இன்று பள்ளிக்கு மாறன் என்கிற புதிய மாணவன் சேர்ந்தான்.அவன் புனிதா வீட்டின் அருகில் வசிப்பதால் இருவரும் இப்போது நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.இருவரும் மட்டும் சேர்ந்தே விளையாடினார்கள் .
என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாள்.இதற்காகவா அழுகிறாய் நீயும் அவர்களுடன் சேர்ந்து விளையாட பழகு, அவர்கள் வரவில்லை என்றால் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து விளையாட பழகு அதன் மூலம் உனக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அம்மா கூறினார்.ஆதிரை மறுநாள் பள்ளிக்கு சென்றாள் .அன்றும் புனிதாவும் ,மாறனும் மட்டும் சேர்ந்தே விளையாடினார்கள் .ஆதிரைக்கு வருத்தமாக இருந்தது .அவர்கள் அருகில் போய் நின்றாள்.அவர்கள் விளையாடிகொண்டிருந்த ஆர்வத்தில் ஆதிரையை கண்டுகொள்ளவில்லை.
வருத்தத்துடன் ஆதிரை தனியாக மரத்தின் அடியில் போய் அமர்திருந்தாள்.அங்கு சில வகுப்பு தோழிகள் விளையாடிகொண்டிருன்தனர்.அதில் ஒரு தோழி ஆதிரையிடம் வந்து எங்களுடன் விளையாட வருகிறாயா என்று கேட்டாள். ஆதிரை முதலில் தயங்கினால்.சிறிது நேரத்தில் சரி நானும் வருகிறேன் என்றாள்.மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.
அன்று வீட்டிற்கு ஆதிரை மகிழ்ச்சியுடன் சென்றாள். அம்மாவிடம் போய் நீங்கள் சொன்னதை போல் நான் இன்று மற்ற நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினேன்.அவர்களும் என்னுடன் நன்றாக விளையாடினார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினாள்.அருமை கண்ணா நாம் எப்போதும் ஒருவர் மட்டும் தான் நண்பர் என்று இருக்காமல் எல்லோருடனும் சேர்ந்து பழகி கொள்ளவேண்டும்.அப்போதுதான் நிறைய நண்பர்கள் நமக்கு இருப்பார்கள் என்றார் .தினமும் ஆதிரை தன் புதிய நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தாள்.சில நாட்கள் கழித்து புனிதாவும் ,மாறனும் இவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.இப்போது ஆதிரைக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள்.
|