LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !!

1. அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.


2. அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.


3. சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.


4. சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.


5. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.


6. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.


7. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.

8. சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.


9. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!


10. எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

 

நன்றி : மருத்துவர் ஆ.குமரேசன்

by Swathi   on 24 Sep 2014  8 Comments
Tags: Happy Married Life   Happy Married Life Tips   மகிழ்ச்சியான இல்லறம்   சந்தோஷமான வாழ்வு   மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை   மனைவியை சந்தோசமாக வைத்திருக்க     
 தொடர்புடையவை-Related Articles
மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !! மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !!
கருத்துகள்
15-Feb-2019 13:22:45 pandiyan said : Report Abuse
அருமையான பதிவு நன்றி என் மனைவி இருக்கு பொது மனைவியின் அருமை தெரியவில்லை இப்போ மன கஷ்டமா இருக்கு ஐ லவ் மை wife ஐ மிஸ் யு செல்லம்
 
28-Dec-2017 04:19:57 சுரேஷ் said : Report Abuse
சூப்பர் நல்ல கருத்துக்கள்
 
21-Jul-2017 13:39:41 க.முனுசாமி said : Report Abuse
ஹாய், மிகவும் பயனுள்ள அரவியூரை ஆல் கணவன் & மனைவி பின்பற்றவேண்டியது அவசியம். ஆனால், தற்சமையம் பிரிந்து வாழ்கிறேன் என் மனைவி கருது வேறுபாடு காரணமாக எவருக்கும் என் நிலை வரவேண்டுமென்று ஆண்டவரை வேண்டுகிறேன் நண்பர்களே
 
12-Jan-2016 02:41:16 மாதேஸ்வரன் said : Report Abuse
ரூம்ப சுப்பர் இருக்கு இது மக்களுக்கு ரொம்ப ஓரு நல்ல வீசியாம் தேங்க்ஸ்
 
14-Sep-2015 12:37:08 sudhakar said : Report Abuse
எச்செல்லேன்ட் டிப்ஸ் வில் ட்ரை டு இம்ம்ப்ளிமென்ட்
 
07-Mar-2015 08:22:32 KAMARAJ சத்யா said : Report Abuse
சூப்பர்......................
 
24-Feb-2015 07:38:48 RAMASAMY said : Report Abuse
நல்ல டிப்ஸ். பயனுல்லதாக இருக்கிறது
 
01-Dec-2014 21:20:21 tamil said : Report Abuse
Arumai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.