LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

கருமையா அக்குள்களில் இருந்து விடுபட 10 பயனுள்ள குறிப்புகள் !!

இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத்தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிக பணம் செலவளிகின்றனர். இந்த மாதிரியான சிகிச்சையை பணம் இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவே பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அத்தகையவர்களுக்காகதான் குறைந்த செலவில், இயற்கையான முறையில், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் பத்து இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துங்கள், கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்...

 

அதிமதுர வேர்

 

அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

 

எலுமிச்சை

 

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

 

கற்றாழை

 

கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்டுகளுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்

 

குங்குமப்பூ

 

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்துவந்தால், அக்குளில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகி விடும்.

 

மஞ்சள், தயிர்

 

இயற்கையாகவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போகிவிடும்.

 

தயிர், எலுமிச்சை

 

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 

வெள்ளரிக்காய்

 

வெள்ளரிக்காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல முன்னேற்றம் தெரியும்.

 

சந்தனப்பவுடர், பால்

 

சந்தனப் பவுடரை பால் ஊற்றி குலைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

 

உருளைக்கிழங்கு

 

உருளைக் கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

 

கடலைமாவு, பால், மஞ்சள்

 

கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும். 

by Swathi   on 19 Nov 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.