LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !!

ஆற்றுப்படுகைகளிலும் மற்றும் கடற்கரைகளிலும் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்திருப்பது, தவறானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.

 

டெல்லியில் நேற்று, பசுமை தீர்ப்பாய நீதிமன்ற புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது, சமீபத்தில், 'சில நீதிமன்றங்களும், சில தீர்ப்பாயங்களும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முழுமையான 100 சதவீதம் தடை விதித்து இருப்பது வருந்தத்தக்கது. இது தவறு என்று நான் கூறுகிறேன். ஏனெனில்,  ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்த பட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால், தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளர்ச்சியும் சம நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய அளவிலான மக்கள் நலன்கள், பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்கு விட்டுக்கொடுப்பது அவசியம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.

100% ban on sand mining wrong: Sathasivam

2 months after the National Green Tribunal banned sand mining from river beds and beaches across the country without environmental clearance, Chief Justice of India P Sathasivam Yesterday said 100 % ban on sand removal is "wrong".

by Swathi   on 18 Oct 2013  1 Comments
Tags: மணல் அள்ள   சதா சிவம்   உச்ச நீதிமன்றம்   பசுமை தீர்ப்பாயம்   மணல் அள்ள தடை   SC   SC Chief  
 தொடர்புடையவை-Related Articles
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !! முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !!
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !! பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !!
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !! பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!
வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !! வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !!
மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !! மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !!
கருத்துகள்
20-Oct-2013 10:56:25 வேங்கட சலபதி said : Report Abuse
அய்யா உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி தொடர்க உங்கள் பணி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.