LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது

சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10‑ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்;  பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.

 

அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)

உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகத் கீழக்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது டெல்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சை சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா,  செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தே.போ.மீனாட்சி சுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”

 

இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:

ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.

 

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வி.சி.குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்காவாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

 

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோமா இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019‑ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், மருத்துவர் சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராக  பணி புரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக்கு குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் பி மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரை குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாக பணிபுரிகின்றனர்.

 

மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சி தலைப்புகளும் (Topics)

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.

 

"தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்."

 

இந்த மாநாடு சிறப்புற அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளை தேர்ந்து எடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சி கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.

ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக்  கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்: www.iatrnew.org or http://icsts10.org or email iatr2019@fetna.org.

இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

 

அன்புடன்

 

புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து

பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்

தலைவர், ஆய்வுக் குழு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

மருத்துவர் சோமசுந்தரம் இளங்கோவன்

தலைவர், ஒருங்கிணைப்புக் குழு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

 

 

பிற செய்திகளுக்கு:

 

 

 

திரு சுந்தர் குப்புசாமி

தலைவர், தமிழ்ச் சங்கப் பேரவை

மின்னஞ்சல்:president@fetna.org

www.fetna.org

திரு மணி குணசேகரன்

தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

 

International Association of Tamil Research (IATR) is pleased to announce the 10th International Conference – Seminar on Tamil Studies on July 3 _ 7, 2019 in Chicago, Illinois, USA 

 

Chicago, IL., September 15, 2018. Greetings. For the first time in its history, IATR will be conducting its International Conference – Seminar on Tamil Studies in North America. This conference will be held in Chicago on July 3-7, 2019. Like all other Conference – Seminars, this 10th International Conference – Seminar on Tamil Studies is sponsored by the International Association of Tamil Research (IATR) and jointly organized by two major Tamil organizations, The Federation of Tamil Sangams of North America (FeTNA) and the Chicago Tamil Sangam (CTS). It is unique in the fact that this conference is organized by community organizations. In addition, we anticipate the support from all the major Tamil organizations in North America and around the world. We will also seek and accept the support from all governmental entities to successfully conduct the conference.

 

About IATR

IATR was founded by the internationally known Tamil scholar, the late Rev. Xavier S. Thani Nayagam in 1964 in New Delhi along with Dr. Jean Filliozat (France), Dr. Kamil V. Svelebil (Czechoslovakia), Dr. R. E. Asher (Scotland), Dr.T. Burrow and Dr. M. B. Emeneau (England), Dr. T. P. Meenakshisundaram, Dr. V.I. Subramaniam (India) and with other Tamil scholars from Europe and India who participated in the World Congress of Orientalists. IATR is a non- political and a not-for-profit organization. Its main goal is “to promote multi- disciplinary research on scientific lines in all aspects of Dravidian studies in general, and of Tamil studies in particular, and in allied fields with the active collaboration of international organizations and scholars interested in such studies.”

 

IATR Conferences

Rev. Xavier S. Thani Nayagam, who was the former professor and the Head of the Department of Indian Studies at the University of Malaya in the 1960’s, organized the first International Conference – Seminar on Tamil Studies in Kuala Lumpur, Malaysia in 1966. The second conference was held in 1968 in Chennai, Tamil Nadu under the leadership of Thiru. C.N. Annadurai, Chief Minister of Tamilnadu.  Subsequent conferences were held in Paris (1970), Jaffna (1974), Madurai (1981), Kula Lumpur (1987, 2015), Port Louis (1989) and Thanjavur (1995). These Conferences have been consistent with the objectives of IATR and offered a forum for the Tamil scholars around the world to discuss their research in Tamil language, literature and civilization. 

 

The 10th IATR Conference

The office-bearers of IATR and many scholars felt that the conference should give primary importance to research without any political interference. The well- known Scientist, poet and Tamil scholar and the former vice-President of IATR, the late Dr. V. C. Kulandaiswamy felt very strongly about a new way of organizing the IATR conferences. He expressed his desire that the Tamil community in the U.S.A. should take the lead to organize the next conference in North America. With his strong encouragement and the support of the Federation of Tamil Sangams of North America (FeTNA) and the Chicago Tamil Sangam (CTS), and with the support from Dr. Soma Ilangovan, a former President of FeTNA, Pulavar, Dr. Francis S. Muthu invited IATR at the 9th conference to hold the next conference in North America. TanSri Dr Marimuthu, President IATR and Dr. M. Ponnavaikko, Vice-President, IATR, graciously accepted the invitation and the 10th conference is now being organized to be held in Chicago during July 3‑7, 2019. Dr. Soma Ilangovan is the Chair of the IATR Conference Organizing committee which also includes Thiru. Sundar Kuppusamy, the President of FeTNA and Thiru. Mani Gunasekaran, the President of Chicago Tamil Sangam. On the Academics side, Pulavar, Dr. Francis S. Muthu is the Chair of the Academic Committee and Dr. P. Marudanayagam is the Co-Chair. Many International Tamil Scholars are on the Advisory Panel and in the Academic Committee. There are five Regional Vice-Chairs from Asia, Africa, Europe and North America.

Theme and Research Topic

 Consistent with the main goal of IATR, the following is the theme for the 10th conference:

“New Historicist, Scientific and Comparative Study of the Antiquity of the Tamils, Tamil Language, Culture and Civilization.”

Research papers on selected topics are invited from Tamil scholars around the world. For more details on the research topics and the procedure for submitting the papers, please visit the IATR website at www.iatrnew.org or http://icsts10.org or email iatr2019@fetna.org.

 

We cordially welcome all to attend and participate to have a great Conference.

 

Anbudan

 

Pulavar, Dr. Francis S. Muthu

Secretary General, IATR

Chair, Academic Committee

10th IATR Conference

Dr. Somasundaram Ilangovan

Chair, Organizing Committee

10th IATR Conference

 

 

For more information:

 

 

 

Mr. Sundar Kuppusamy

President, FeTNA

Email:president@fetna.org

www.fetna.org

Mr. Mani Gunasekaran

President, Chicago Tamil Sangam

Email:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

by Swathi   on 16 Sep 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
27-Sep-2018 08:38:38 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜுன் மாதம் நடைபெறுவதை அறிந்து மகிழ்ந்தேன்.மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன், இறைவனையும் வேண்டுகிறேன்.
 
21-Sep-2018 05:36:23 கே.வராகாகிரி said : Report Abuse
மனிதர்களுக்கு ஏற்படும் நோய் காலை இயற்கை உணவுகள் மூலம் குறைந்த செலவில் தீர்க்கலாம் எனது 37 ஆண்டுகள் மருத்துவ ஆவுகளை தங்களின் ௧௦ உலக தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்க விரும்புகின்றேன் மற்ற விபரங்கள் உங்கள் id முகவரிக்கு அனுப்பியுள்ளேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.