LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    உலகத் தமிழ் மாநாடுகள் Print Friendly and PDF
- பத்தாவது உலகத் தமிழ் மாநாடு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குறிப்புகள் மற்றும் அமர்வுகள்

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (10th International Conference- Seminar on Tamil): நிகழ்ச்சி குறிப்பு களுடன் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் முகப்பு.

வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை (FeTNA), உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR), சிக்காகோ தமிழ் சங்கம் (CTS) ஆகியவை சேர்ந்து நடத்திய 10 ஆம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒரு வரலாற்று நிகழ்வாக கடந்த ஜீலை மாதம் 6, 7 தேதிகளில் நடந்து முடிந்தது. ஏறத்தாள 5000- த்துக்கும் மேல் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கமானது, தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல் என்பதாகும். செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்); தமிழரின் பழங்கால நாகரிகம்; தொல்காப்பியம்;திருக்குறள்; அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு; தமிழ் இசையும் கலைகளும்; தற்காலத் தமிழ் இலக்கியங்கள்; தற்காலத் தமிழ் இலக்கியங்கள்; தமிழ் மொழியும் மொழியியலும் என்ற பிரிவுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அறிஞர்களின் ஆய்வுக்கு (Academic Committee) உட்படுத்தப்பட்டு, மாநாட்டில் வாசிக்க கட்டுரைகள் தேர்வுச் செய்யப்பட்டது. 1964-ல் தனிநாயகம் அடிகளார் எனும் தமிழறிஞரின் தலைமையில் புது தில்லியில் தொடங்கப்பட்ட, IATR மன்றத்தின் நோக்கம் தமிழை ஆய்வு செய்வதாகவும், உலகலாவிய அளவில் தமிழ்மொழிக்குக் கவனம் பெற்றுத் தருவதாகவே ஆகும்.

தமிழக அரசின் சார்பாக, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு. மாஃபா. கே. பாண்டியராஜன் அவர்கள் ஒரு குழுவுடன் மாநாட்டுக்கு வந்து சிறப்பித்தார். மொரிசீயஸ் நாட்டின் அதிபர் மாண்புமிகு பரமசிவம் வையாபுரி, மற்றும் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர் முனைவர் நவநீதம் பிள்ளை அவர்களும் மாநாடு தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வாழ்த்தி இந்தியத் தலைமைஅமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோதி அவர்கள், “ இந்தியா பல்வேறு மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புக்குரியது. ஒவ்வொரு மொழியும் தனித்துவமும் பெருமையும் வாய்ந்தது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் விசையாக இம்மொழிகளே திகழ்கின்றன…. இந்த உலகத் தமிழ் மாநாடு பெருவெற்றி பெறட்டும்! தமிழ்மொழி புதிய உச்சங்களைத் தொட அது உதவட்டும்!” என்று வாழ்த்தி செய்தி அனுப்பியது நமக்கு பெருமை. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமிஅவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பி தந்தது மகிழ்ச்சி.

மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தலைப்புகளுடன் அதன் படைப்பாளிகளை யும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Ancient Tamil Civilization - Genetic & Genographic Studies, Kumari Coast & Kumari Coast Civilization (மரபியல் (Genetics), மரபியல் வழிமுறை (Genographics) அடிப்படையில் தமிழர் நாகரிகமும், குமரிக் கண்ட நாகரிகமும்}

1. Dr. Pitchappan Ramaswamy - Tamils, A Living Civilization of Yester-years, Genomic evidences from The Genographic
2. Dr. Siva Thiagarajah - Genetic origins of the Tamil speaking people
3. Dr. Francis Muthu - Kumari Coast and the Kumari Coast Civilization
4. Dr. P.Marudanayagam - Ancient Tamil Culture: It’s Uniqueness
5. Dr. SM. Ramasamy - Kumarikandam: Citations in Tamil literature and the geological perspective
6. K. Sachithananthan - Tamil based Script Reform for the Aboriginal languages
7. P.Pushparatnam - இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்.

Ancient Tamil Civilization - Archaeological Discoveries (தமிழரின் பழங்கால நாகரிகம் - தொல்லியல் கண்டுபிடிப்புகள்)

1. Dr. K. Rajan - Evolution of the Tamil Script: An Archaeological Perspective
2. Dr. R. Madhivanan - New methodology and key to decipher the Indus script with verification of correct reading
3. Dr. Nagamanickam Ganesan - Ox-Cart and Wheel: Technological Vocabulary from the Bronze Age India

III. Ancient Tamil Civilization - Archaeological Discoveries, Indus Valley Civilization / Tamil Music (தமிழரின் பழங்கால நாகரிகம் , சிந்துவெளி நாகரிகம், தமிழிசை ஆகியன குறித்து தொல்லியல் துறையின் புதிய கண்டுபிடுப்புகள்.)

Dr.M.Bavani - சங்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பானையோடுகளின் முத்துப்பொறிப்புகளும் காலமும் (அண்மைக்கால அகழாய்வுகளின் வழி)
Dr. G. Balaji - கோட்டு வடிவ மீன் குறியீடுகளும் சிந்துவெளி நோக்கிய பாண்டியர்களின் புலம்பெயர்வும்
Dr. Siva Ilango - சிந்துவெளி - அவிழும் முடிச்சுகள்
Dr. Amutha Pandian - Cenkötti yazh and the Cakota yazh
Tamil Classical Literature (தமிழ் இலக்கியம்)

1. Dr.M.Muthuvelu - Principles of modern law and classical Tamil literature
2. Prof. K. Nedunchezhian - ஆசீவகம் என்னும் அறிவியல்
3. Dr. A. Manavazhahan - சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை
4. Mr. C. Mahendran - தமிழரின், தொன்மையான அறிவுக்கோட்பாடு
5. Dr. V.Kavitha - ஓராவன் நாட்டார் கதைப் பாடல்களும் சங்க அகமரபுகளும் ஓர் ஒப்பீடு
6. Mrs. Selvampika - அகநானூறு - மன்யோசுப் பாடல்களில் அகமாந்தர் கூற்றுக்கள் - ஓர் ஒப்பாய்வு
7. M.Balasubramaniam -தமிழ்த் திணையியல் என்றும் உலக எதிர்காலத்திற்கான அறக்கோட்பாடு
8. Mr.Narainsamy Tiroumalechetty - The Core Ideas of Management in Ancient Literature with Special Reference to Thirukurral

Tolkappiyam (தொல்காப்பியம்)

1. Dr. V. Murugan Tolkappiyam – A futuristic World Classic
2. Dr. V. Ramasamy - Tholkapiar and Anandavardanar as exponents of suggestion in poetry
3. Prof. Nirmal Selvamony - A view od porul through the window of tolkappiyam
4. Dr. M. Kumaresan - A Study of parallels in the works of Tolkappiyar and Bernouli
5. Dr. R. Gurunathan - தொல்காப்பியக் கவிதையியல் ,சமஸ்கிருதம், கிரேக்கம் - ஓர் ஒப்பு
6. Manju Bashini, Kanniammal, Madan - பகுப்பாய்விகளுக்கான தொல்காப்பிய விதிகளின் சீர்க்கோவைகள்
7. Mr. T. Sethupandian - வீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம்
8. Dr. S. Alagesan - தொல்காப்பியம் - டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் எழுதிய 'மலையாள |மொழி இலக்கணம்' - நூல்கள் ஒப்பீடு

Tirukural (திருக்குறள்)

1. Dr. Ulaganayagi Palani - திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (The art of living)
2. Dr. Kalanidhi Bala, Sivakadadcham - வள்ளுவர் காலத்து மருத்துவமரபு
3. Dr. R. Santhanakrishanan - திருக்குறளில் சட்டவியல் கூறுகள்
4. Dr. Kartheges Ponniah - மலாய்மொழி பந்தூன் கவிதைகளில்

VII. திருக்குறள் கருத்துகள் Tirukural / Ancient Tamil Civilization (திருக்குறள்/ பழந்தமிழரின் நாகரிகம்)

1. Dr. T. Murugarathanam - வள்ளுவர் முப்பாலில் 'எழுபிறப்பு' எழுப்பும் குழப்பம்
2. Mr. Ponmuthu Shanmugam - வள்ளுவமும் ஆசீவகமும் (மாந்தர் அறநூல், பண்பாட்டுக் கருவூலம், வாழ்க்கை நெறி, வழிகாட்டி)
3. Dr. V. G Santhosam - திருக்குறளும் வாழும் வழி முறைகளும்
4. Mr. R. R. Srinivasan - ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் - கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும்.

VIII. Ancient Tamil Civilization - Indus Valley Civilization (பழந்தமிழரின் நாகரிகம்/ சிந்துவெளி நாகரிகம்)

1. Dr. S. Vasanthi -The study of antiquities from the excavations of Sangam age sites - special references to the territory of minor chieftans
2. Dr. S. Rajavelu - Who were the authors of Tamil-Brahmi inscriptions- the earliest script of the Tamils?
3. Dr. Mrs. S. Sridas - தென்னிந்தியாவில் உள்ள ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும்

Contribution of Scholars / Modern Literature (தமிழறிஞர்களின் பங்களிப்பு/ தற்கால இலக்கியம்)

1. Dr, Mrs. S.Kesavan - சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூலில் அறிவியல் வெளிப்பாடுகள்
2. Rev. Fr. Ruban Mariampillai - தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி
3. Rev. Fr. Pavilu Christhu Nesaratnam - தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்களிப்பு
4. Dr. Sarada Nambi Arooran -தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்

Tamil Music / Performing Arts (தமிழிசை / கலை நிகழ்ச்சியும்)

1. Dr. B. Raja - பரதம் - தமிழர் கலையே
2. Dr.S. Karpagam - நாட்டியப் பார்வையில் சிலப்பதிகாரம்
3. Dr. Sathiyavathi. S - குடுமியான்மலை தமிழிசைக் கல்வெட்டு|
4. Dr. P. K. Ponnusamy -ஞானசம்பந்தரில் பாடல்களில் தாள இசைக்கூறுகள்

Tamil Classical Literature / Modern Literature (தமிழ் இலக்கியம் / தற்கால இலக்கியம்)

1. Dr. G. Arasenthiran - Contributions of Tamil to Nostratic Studies (From the vantage of Tamil etymons advancing the hypothesis of Caldwell Gnanaprakasar and Devaneyan)
2. Mr. Kumaran Subramanian - மணிமேகலை உணர்த்தும் மனிதநேயம்
3. Dr. V. Sabapathy - மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள்
4. Dr. Rajeswari Karunakaran - தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்வி நிலை
5. Mrs. Manju Bashini, Kanniammal, Madan - தொல்காப்பிய விதிகளின்படி கணினியில் கூட்டுச்சொற்கள் - பிரிப்பதற்கான சீர்க்கோவைகள்
7. Dr.Saraspedee Tiroumalechetty - Seminar on Tamil Studies on Modern Tamil Literature, Computer Technology and its contribution to Tamil Studies (A Mauritian Perspective)
8. Mr. Mohana Dass Ramasamy - A Phonological Study of Tamil loanwords found in an Old Malay Historical Annals, the Sejarah Melayu
9. Ms. Zhang Qi (Niraimathi)-Tamil Teaching in China: Challenges and Strategies
10. Rev. Dr. Amudhan Adigal - தமிழில் அச்சேறிய முதல் அகரமுதலி
11. Mrs. Saraswathy Vijayakumar - தமிழர் கலைகளில் ஒப்பனைக்கலை (ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை)
12. Dr. K. Chellappan - The Tragiwesrc Ethos and Aesthetics in lanko and Aeschylus: A Comparison
13. Peter Yeronimuse - தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதென நினைத்தாளோ? குறுந்தொகைப் பாடல்களை ஒரு கதைச்சொல்லும் பாணியில் வரிசைப் படுத்தியமைத்த ஒரு காதல் புனைவு

XII. Tamil Classical Literature (தமிழ் இலக்கியம்)

Prof. Dr. Shri Lakshmi - சங்க இலக்கியங்களில் கொண்டி மகளிர்
2. Dr. Govindaswamy Rajagopal - Parattai: The other woman in the Sangam Tinai Poetry
3. Dr. A. Sanmugadas - பாண்பாட்டு - ஒரு மதிப்பீடு
4. Dr. P. Vellaichamy - சங்க இலக்கியங்களும் வேளண்மையில் நீர் மேலாண்மையும்
XIII. Tamil Linguistics / Tolkaappiyam / Moden Literature (தமிழ் இலக்கியம் / தொல்காப்பியம் / தற்கால இலக்கியம்)

Dr. K. Subhashini - ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ்
2. K. Kavimani - பழந்தமிழர் பண்பாட்டில் தோல் ஓவியத்தின் பயன்பாடு
3. Dr. A. Krishnan - அண்மைக்கால மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகப் போக்குகள்
4. Prof. lla. Sundaram - தற்காலத்தில் தொல்காப்பியத் தமிழிலக்கணக் கூறுகளின் பயன்பாடும் வளர்ச்சியும்
5. Dr. Manonmani Sanmugadas - புறநானூற்றுப் பாடல்களும் யப்பானிய மன்யோசுப் புறப்பாடல்களும் - ஓர் ஒப்பாய்வு
6. Prof. Dr. Shri Lakshmi - ஆற்றுப்படை மரபும் – பன்முகநோக்கு
7. Dr. SM. Ramasamy - Unfurling the mysteries behind ancient port city Poompuhar (India) and understanding the socio-cultural evolution of the Tamils
8. Dr. K. Thilagavathi - தொல்காப்பியத்தில் கலைக்கூறுகள்
XIV. Tolkaappiyam / Modern Literature (தொல்காப்பியம் / தற்கால இலக்கியம்)

Mr. I. Susai - தொல்காப்பிய இலக்கணக் கலைச்சொல் மொழிநிலை
2. Dr. Mu. Ilangovan - அடியார்க்கு நல்லாரின் தொல்காப்பியப் புலமை
3. Dr. S. Narendran - அறிவியல் தமிழ்வளர்ச்சிக்கு மேலைநாட்டுக் கிறித்துவப் பாதிரியார்களின் புதிய நூலாக்கமுறைகள்
4. Prof. V. Chockalingam - தமிழ் இலக்கியத்தில் மருத்து
Dr. K. Rajan , Dr. N. Ganesan, Dr.P. Marudanayagam, Dr.K.Nedunchezhian, Dr.M.Muthu Velu, Prof. E. Sundaramoorthy, Dr. V. Murugan, Dr. T. Murugarathanam, Justice Dr. M. Chockalingam, Dr. Sunil Amrith, Dr. G. John Samuel, Fr. Amudhan Adigal, Mr. A. R.Venkatachalapathy Dr.Amutha Pandian, Dr.Vasu Renganathan, Dr. E. Annamalai, Dr.V. Jeyadevan, Prof. Dr. Thomas Lehmann, Dr. K. Nedunchezhian, Dr. David Buck, Prof. Dr. Ulrike Niklas, Prof. KV Balasubramaniam, Dr. M. Muthu Velu, Dr. Jonas Buchholz, and Dr. E. Sundaramoorthy ஆகிய அறிஞர் பெரும் மக்கள் மாநாட்டின் கட்டுரை வாசித்தல் நிகழ்வுகளை நெறிப்படுத்தி சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள். கட்டுரைகள் முழுமையாக‌, ஒரு நூல் தொகுப்பாக வெளியிட ப்பட உள்ளது. மேலும் விரைவில் IATR இணையத் தளத்தில் கட்டுரைகள் வெளியிடப் படுவதாக தெரிகிறது. அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2021-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தகவல்: நாஞ்சில் இ. பீற்றர்

by Swathi   on 31 Mar 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை
இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா  ஆற்றிய உரையின் சுருக்கம் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை!
சிகாகோவில்  3.4 லட்சம் தமிழ் வார்த்தைகளைக் கொண்ட சொற்குவை இணையதள சொற்குவை  திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார். சிகாகோவில் 3.4 லட்சம் தமிழ் வார்த்தைகளைக் கொண்ட சொற்குவை இணையதள சொற்குவை திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை! உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.