LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை விரைவாக கரைக்கும் 15 உணவுகள் !!

நாம் பெரும்பாலும் கடைகளில் விரும்பி வாங்கி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இந்தகைய உணவுகளால் உடலில் தங்கும் கொழுப்புகளை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நம்மில் பலபேருக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 25 வயதிலேயே வந்து விடுகிறது.


இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.


அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழுங்கள்.... மற்றவருக்கும் பகிருங்கள்......


ஆப்பிள் :


ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.


முழு தானியங்கள் :


முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. 


பார்லி :


தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.


கத்திரிக்காய் :


கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.


சிட்ரஸ் பழங்கள் :


சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.


மீன் :


மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.


நட்ஸ் :


நட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.


தேனீர் :


அனைவருக்குமே டீ-யில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


வெங்காயம் :


வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.


ஓட்ஸ் :


ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.


பசலைக் கீரை :


பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


பூண்டு :


பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.


வெண்டைக்காய் :


கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.


ரெட் ஒயின் :


ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.


பீன்ஸ் :


அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.


மிளகாய் :


மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது. 

by Swathi   on 25 Feb 2014  9 Comments
Tags: Cholesterol Decreasing Foods   Decrease Cholesterol   Cholesterol   Kolupu Kuraiya   கொழுப்பு குறைய   கொலஸ்ட்ரால்     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கொலஸ்டிரால் உள்ளதா உங்களுக்கு? கொலஸ்டிரால் உள்ளதா உங்களுக்கு?
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை விரைவாக கரைக்கும் 15 உணவுகள் !! உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை விரைவாக கரைக்கும் 15 உணவுகள் !!
கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !! கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !!
கருத்துகள்
26-Sep-2017 06:02:04 ஹரிப்ரசாத் said : Report Abuse
சார் நான் தினமும் காலையில் ௨ தோசை, மதியம் ௧ டிபன் பாஸ் சாப்பாடு சாப்பிடுறேன் . இருப்பினும் எனக்கு தொப்பை குறைய வில்லை. இவ்வாறு சாப்பிட்டால் தொப்பைய் குறையுமா. ப்ளீஸ் எனக்கு ஏஜ் 25 ஆகுது.
 
04-Apr-2016 00:19:46 Xavier Babu said : Report Abuse
sir enaku cholesterol atigam ullatu.kuripaga LDL cholesterol 223 ullatu. Ethan alavai kuraikum vali sollunga
 
01-Mar-2016 22:19:49 ர. solaiyammal said : Report Abuse
நல்ல கருத்துக்களை குருகிருர்கள் நான் உங்களை thotarpu கொள்ள மொபைல் நம்பர் தரிவிக்கவும் அன்னுடைய ஈமெயில் அனுப்பவும் தங்க யு
 
25-Feb-2016 01:02:30 veeramani said : Report Abuse
அருமையான மருத்துவ தவல்கள் உள்ள பயனுள்ள வலைதளமாக வலைத்தமிழ் உள்ளது
 
25-Oct-2014 01:11:34 mathavan said : Report Abuse
சார்,ப்ளீஸ் உங்கள் தொலைபேசி என் தேவை.ஒரு சந்தேகம் எனக்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்னை தொடர்பு கொள்ள 9789779189. தயவு செய்து உங்கள் தகவலை எனக்கு ஈமெயில் செய்யவும்.இப்படிக்கு ரா.மாதவன்
 
25-Oct-2014 01:09:29 mathavan said : Report Abuse
சார்,ப்ளீஸ் உங்கள் தொலைபேசி என் தேவை.ஒரு சந்தேகம் எனக்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்னை தொடர்பு கொள்ள 9789779189. தயவு செய்து உங்கள் தகவலை எனக்கு ஈமெயில் செய்யவும்.இப்படிக்கு ரா.மாதவன்
 
22-Sep-2014 10:20:10 umamaheswari said : Report Abuse
nandrga ullathu ennum உடல்பயிற்சி need
 
18-Jun-2014 00:11:28 உமவரதன் said : Report Abuse
அருமையான , இக்காலத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை. தேவை உங்களின் சேவை!!!!!!!!!!!!!
 
02-Mar-2014 08:37:32 balakrishnanpillai said : Report Abuse
சிறப்பாக உள்ளது. நன்று.சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.