LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

1970 முதல் 1976 வரை அரசியல்

 

கட்சிகள்:1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் 
இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை 
எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு 
பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற 
முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் 
பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் 
கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக 
கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.
அரசியல் நிலவரம்:திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் 
கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. 
திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே 
போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், 
குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் 
போட்டியிட்டது.ஆட்சி அமைப்பு:இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். சி. பி. சிற்றரசு:திமுகவின் 
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் 
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் 
தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் 
இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 

கட்சிகள்:

 

     1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவுபட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது.

 

     இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.

 

அரசியல் நிலவரம்:

 

     திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.

 

ஆட்சி அமைப்பு:

 

     இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

 

சி. பி. சிற்றரசு:

 

     திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 

by Swathi   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.