LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

2009ம் ஆண்டு தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்

 

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.நிலவரம்:2009ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் 
தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 2004 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் 
இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐந்தாண்டுகள் நீடித்தது. ஆனால் தமிழகத்தில் அக்கூட்டணியிலிருந்து 
சில கட்சிகள் வெளியேறிவிட்டன. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது. 2008ல் இந்திய அமெரிக்க குடிசார் 
அணுவாற்றல் உடன்பாடை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறின. 2009ல் தேர்தல் தேதி நெருங்கியபின் 
பாமக வெளியேறிவிட்டது. இக்கட்சிகள் அதிமுக தலைமையிலான மூன்றாவது முன்னணியில் இணைந்தன. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் 
கூட்டணியில் காங்கிரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எஞ்சியிருந்தன. தனிக்கட்சி:. நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 
தனித்து போட்டியிட்டது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் 
மக்கள் கட்சி, சுப்ரமணியன் சாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஏழு சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.நான்காம் ஈழப்போர் இறுதிக் 
கட்டத்தை எட்டியிருந்தால் ஈழப் போர் இத்தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்தது.தமிழக அமைச்சர்கள்:இத்தேர்தலில் வெற்றி பெற்ற ப. சிதம்பரம், 
மு.க.அழகிரி,தயாநிதி மாறன்,ஆ. ராசா,ஜி. கே. வாசன் முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

     இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

 

நிலவரம்:

 

     2009ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 2004 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐந்தாண்டுகள் நீடித்தது. ஆனால் தமிழகத்தில் அக்கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறிவிட்டன. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது.

 

     2008ல் இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறின. 2009ல் தேர்தல் தேதி நெருங்கியபின் பாமக வெளியேறிவிட்டது. இக்கட்சிகள் அதிமுக தலைமையிலான மூன்றாவது முன்னணியில் இணைந்தன. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எஞ்சியிருந்தன.

 

தனிக்கட்சி:

 

     நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்து போட்டியிட்டது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் 
மக்கள் கட்சி, சுப்ரமணியன் சாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஏழு சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நான்காம் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தால் ஈழப் போர் இத்தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்தது.தமிழக அமைச்சர்கள்:இத்தேர்தலில் வெற்றி பெற்ற ப. சிதம்பரம், மு.க.அழகிரி,தயாநிதி மாறன்,ஆ. ராசா,ஜி. கே. வாசன் முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்.

by Swathi   on 25 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.