LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2012-ல் இந்திய நிகழ்வுகளின் சிறப்பு கண்ணோட்டம்

2012 ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றன.அந்த நிகழ்வுகளை கோர்வைகளாக கோர்த்து வரிசை படுத்தி இருக்கிறது வலைத்தமிழ்.காம் இணையத்தளம்.

ஜனவரி


2 : சீனாவில் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு இந்தியர்களை விடுவிக்க சென்ற இந்திய தூதரக அதிகாரி சீனாவில் தாக்கப்பட்டார்.

3 : முல்லை பெரியாறு ஆணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கேரளா அரசின் கோரிக்கையை கேரளா நீதி மன்றம் நிராகரிப்பு

14 : ஊதிய பிரச்சனை காரணமாக இந்திய விமானிகள் வேலைநிறுத்தம்.பல விமானங்கள் ரத்து.

25: இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர் அரசு பதவியில் இருந்து நீக்கியது மத்திய அரசு.

பிப்ரவரி


8:கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த மந்திரிகள் ராஜினாமா.

13 : வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் 24 லட்சம் கோடி என CBI இயக்குனர் அறிவிப்பு.

மார்ச்

3 : இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக விக்ரம்சிங் நியமனம்

6 : உத்திரபிரதேச சட்ட சபை தேர்தலில் முலாயம் சிங் வெற்றி

10 : உத்திர பிரதேச முதல் மந்திரியாக அகிலேஷ் யாதவ் பதவி ஏற்பு

14 : ரயில்வே பட்ஜெட்டில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது.

16 : வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சமாக உயர்வு.

18 :மம்தா-வின் எதிர்ப்பை அடுத்து ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி ராஜினாமா.

21 : ஓரின சேர்க்கையை  சுப்ரீம் கோர்ட் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

25 : டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டர் அன்னா ஹசாரே.

ஏப்ரல்

8 : டெல்லி வந்த பாகிஸ்தான் அதிபருடன் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.

9 : இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக சுஷ்மா தலைமையிலான எதிர்கட்சி குழு இலங்கை பயணம்.

19 : கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்க கூடிய அக்னி -5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்துமுடித்தது.

21 : சத்தீஸ்கர் மாநிலத்தில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் கலெக்டர் அலெக்ஸ் பால்மேணனை கடத்தி சென்றனர்.

26 : இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெல்லி மேல்சபை எம்.பி யாக  மத்திய அரசு நியமித்தது.

சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு.

மே

3 : மாவோஸ்டுகள் கடத்திய அலெக்ஸ் பால்மேனன்  விடுதலை.

4 : முல்லை பெரியாறு ஆணை உறுதியாக இருப்பதாகவும், மாற்று அணை தேவையில்லை என நீதிபதிகள் குழு அறிவிப்பு.

13 : பாராளுமன்றத்தின் 60 -வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

15 : 2ஜி வழக்கில் ராசாவுக்கு விடுதலை

22 : மத்திய அரசின் மீது நிலக்கரி ஊழல் புகார்.

23 : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்வு.

24 : ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

28 : டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக மறுப்பு.

31 : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஜீன்

3 : டெல்லியில் அன்னா ஹசாரேவுடன் பாபா ராம்தேவ் உண்ணா விரதம்.

5 : இரயில் பார்சல் கட்டணம் 25 % அதிகரிப்பு.

6: தலைமை தேர்தல் கமிஸ்னராக வி,எஸ். சம்பத் நியமனம்

8 : உத்திர பிரதேச பாராளுமன்ற இடைதேர்தல் அகிலேஷ் யாதவ் மனைவி போட்டியின்றி தேர்வு.

11. ராணுவ ஊழல் தொடர்பாக BEML தலைவர் நடராஜனை மத்திய அரசு பணி நீக்கம் செய்தது.

13 : தலைமறைவாக இருந்த நித்தியானந்தா சரண் அடைந்தார்.

15 : குடியரசு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அதிகாரபூர்வ அறிவிப்பு.

20 : தேசியவாத கட்சியில் இருந்து பி.ஏ. சங்கமா விலகல்.

25 : மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதி சவூதி அரேபியாவில் கைது.

26 : ஊழல் வழக்கி சிக்கிய மத்திய மந்திரி வீரபத்திர சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

28 : கச்சா எண்ணை விலை குறைந்ததை அடுத்து பெட்ரோல் விலை ரூ.3.13 குறைக்கப்பட்டது.

29 : தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

ஜூலை

5 : திருவனந்தபுரம் பத்மநாப கோவில் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு கோடிக்கணக்கான தங்க வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

16 : பா.ஜ.கா வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் அறிவிப்பு.

19 : இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான ஒட்டு பதிவு நடைபெற்றது.

20 : ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி  அமோக வெற்றி.

23 : சுதந்திர போராட வீராங்கனை லட்சுமி செகல் மரணம்.

25 : இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றார்.

29 : வலுவான லோக்-பால் மசோதாவை நிறைவேற்ற கோரி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்.

ஆகஸ்ட்


7 : துணை ஜனாதிபதியாக ஹமிது அன்சாரி வெற்றி.

9: ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் உண்ணாவிரதம்.

14 : மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்

ராம் தேவ் போராட்டம் வாபஸ் பெற்றார்.

17 : நிலக்கரி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை துறை அறிவிப்பு.

20 : வட மாநிலங்களில் ஏற்பட்ட வதந்தியை அடுத்து 250 இணைய தளங்கள் அரசால் தடை செய்யப்பட்டது.

21 : நிலக்கரி ஊழல் விவகாரத்தால் பிரதமர் பதவி விலக எதிர் கட்சிகள் போர்க்கொடி,பாராளுமன்றத்தில் இரு அவைகளும் முடங்கின.

24 : மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை தவறானது என மத்திய அரசு விளக்கம்.

26 : அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பிரதமர், சோனியா வீடுகளை முட்றுகையிட்டனர்.

29 : சுப்ரீம் கோர்ட் அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

31 : ராஜினாமா செய்யும் பேச்சிற்கே இடமில்லை என பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு.

செப்டம்பர்

4 : அரசு பணி பதவி உயர்வில் SC/ST இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

8 : இந்தியாவின் நூறாவது ராக்கெட் BSLV-C 21 வெற்றிகரமாக ஏவப்பட்டது.

13 : டீசல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது.

14 : டீசல் விலை உயர்வுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு மம்தா பானார்ஜி இரண்டு நாட்கள் கெடு.

17 : ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்ற அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

18 : ஐ.மு.க கூட்டணியில் இருந்து மம்தா பானார்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் விலகல்.

19 : டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் தரும்படி பிரதமர் உத்தரவு.கர்நாடக முதல்வர் வெளிநடப்பு.

இலங்கை அதிபர் வருகையை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் ஆர்பாட்டம் நடத்த சென்ற வைகோ மற்றும் அவரது கட்சியினர் அம்மாநில போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

20 : டீசல் விலை உயர்வு- காஸ் சிலிண்டர் கட்டுபாடு ஆகியவற்றை எதிர்த்து எதிர்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்.

இலங்கை அதிபருடன்,பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் சந்திப்பு.

28 : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை.

அக்டோபர்


2 : அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு.

4 : மத்திய நிபுணர் குழு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் - தமிழகத்தில் ஆய்வு.

5 : பிரியங்க கணவர் ராபர்ட் வதேராவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு.

ஊழல் புகார் காரணமாக கோவாவில் உள்ள இரும்பு தாது சுரங்கத்துக்கு தடை விதித்தது மத்திய அரசு.

11 : மன்மோகன் சிங்குடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்தித்தனர்.

15 : அந்நிய முதலீடுக்கு சுப்ரீம் கோர்ட் ஆதரவு தீர்ப்பு

27 : மத்திய மந்திரி சபையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு 22 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டனர்.

நவம்பர்

2 : மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் இலாக்க மாற்றப்பட்டு புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரி சக்தி துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

9 : சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

17 : சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே மரணமடைந்தார்.

18 : பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

20 : பால் தாக்கரே மறைவையொட்டி நடைபெற்ற கடை அடைப்புக்கு இணையதளத்தில் கருத்து தெரிவித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

24 : மத்திய அரசு பயனாளிகளின் மானிய தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை ஜனவரி - 1 முதல் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்தது.

27 : சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்பு கொண்டது.

28 : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியுரப்பா கர்நாடக ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் மரணம்.

டிசம்பர்


5 : சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டனி வெற்றி பெற்றது.

6 : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறப்பு.

7 : சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாக்கெடுப்பில் மேல் சபையிலும்  காங்கிரஸ் வெற்றி.

8 : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்.

10 : தமிழகத்துக்கு 12 tmc தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

வால் மார்ட் நிறுவனம் இந்தியாவில் கடைகளை திறக்க 125 கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட  அறிக்கையை அடுத்து மேல்-சபையில் எதிர் கட்சிகள் இதனை விசாரிக்க கோரினார்கள்.

16 : ஓடும் பஸ்ஸில் காம கொடுரன்களால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

20 : குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றார், இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

21 : உலகம் அழியும் என மாயன் கலான்டரின் கணிப்பு பொய்யானது.

24 : ரஷ்ய அதிபர் டெல்லி வந்தார்.இந்திய - ரஷ்யா இடையே பத்து ஒப்பந்தங்க கையெழுத்தாயின.

26 : ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட மாணவி மேல் சிகிச்சைக்காக சிங்கபூர் அனுப்பப்பட்டார்.

27 : தேசிய வளர்ச்சி குழுகூடத்தில் பேசுவதற்கு குறைவான நேரம் ஒதுக்க பட்டதாக கூறி தமிழக முதல்வர் வெளிநடப்பு.

29 : சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

by Swathi   on 29 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இரட்டைக் குழந்தைகளுக்கு  மருத்துவ உதவி தேவை கரம் கொடுப்போம்.. இரட்டைக் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவை கரம் கொடுப்போம்..
சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்.. சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்..
பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி
மோகமுள் - தி. ஜானகிராமன் மோகமுள் - தி. ஜானகிராமன்
கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?! கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?!
வேடிக்கையான உலகம் வேடிக்கையான உலகம்
(பெண்களின்) குடிப்பழக்கம் (பெண்களின்) குடிப்பழக்கம்
இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா? இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.