LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2013 ல் உலக நிகழ்வுகள் ஒரு பார்வை !!

ஜனவரி 1 : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கடேஷ் மன்னாருக்கு கனடாவின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் கனடா' விருது வழங்கப்பட்டது.

 

ஜனவரி 3 : பாகிஸ்தானில் அமெரிக்க உளவு விமானம் குண்டு வீசி தாக்கியதில் தீவிரவாத இயக்க தலைவர் முல்லா நசீர் கொல்லப்பட்டார்.

 

பெண் கல்விக்கு ஆதரவாக போராடியதால், தாலிபான்களால் தாக்கப்பட்டு இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா, குணமடைந்து வீடு திரும்பினார்.

 

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பேரா, அமெரிக்க பார்லிமென்ட்டில் எம்.பி., ஆக பதவியேற்பு.

 

ஜனவரி 13 : ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டாராநாயகேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ராஜபக்சே அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

 

ஜனவரி 15 : பாகிஸ்தானில் குத்தகை மின் திட்ட ஊழல் வழக்கில் பிரதமர் அஷ்ரப்பை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.

 

ஜனவரி 17 : உலகம் முழுவதும் 50 டிரீம் லைனர் விமானங்கள் தரை இறக்கப்பட்டன. அதில் உள்ள எளிதில் தீப்பிடிக்கும் பேட்டரியை நீக்க பரிசீலனை. 

 

ஜனவரி 20 : அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் பதவி ஏற்றார்.

 

ஜனவரி 24 : மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க கோர்ட்டில் 35 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.

 

ஜனவரி 27 : பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 250 பேர் பலி.

 

பிப்ரவரி 11 : கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவர் பெனடிக்ட் திடீர் விலகல்.

 

பிப்ரவரி 12 : ஜனாதிபதி, பிரதமர் பயணம் செய்வதற்காக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து இந்தியா ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ.362 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு. இதுதொடர்பாக இத்தாலியின் 

பின்மேக்கானிக்கா நிறுவனத்தின் அதிபர் புருனோ ஸ்பாக்நாளினி கைது.

 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா சக்தி வாய்ந்த அணு குண்டை வெடித்தது. இதனால்5.1 ரிக்டர் அளவில் பூமி குலுங்கியது.

 

பிப்ரவரி 13 : நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்ததால் மாலத் தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்திய தூதரகத்தில் தஞ்சம்.

 

பிப்ரவரி 15 : ரசியாவில் எரிகல் ஒன்று திடீரென விழுந்ததில் 514 பேர் காயம் அடைந்தனர். 

 

பிப்ரவரி 19 : இலங்கை போரின் போது பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது அம்பலமானது. இது பற்றிய படங்களை சேனல் 4 டெலிவிசன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பிப்ரவரி 24 : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 85 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது டேனியல் டே லீவிஸ்க்கும், சிறந்த நடிகைக்கான விருது ஜெனிபர் லாரன்சுக்கும் வழங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லைப் ஆப் பை படத்திற்கு நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது.

 

பிப்ரவரி 25 : ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை கவுன்சில் மாநாடு தொடங்கியது. இலங்கையின் போர்க்குற்றத்து எதிராக அமெரிக்க தீர்மானம் தாக்கல்.

 

மார்ச் 5 : மாலத்தீவு முன்னால் அதிபர் முகமது நஷீத் கைது.

 

டெல்லியில் கற்பழித்து கொள்ளப்பட பெண்ணுக்கு வீர மங்கை விருதை அமெரிக்காவில் நடந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் அதிபர் ஒபாமா வழங்கினார்.

 

மார்ச் 6 : புற்றுநோயால் வெனிசுலா நாட்டு அதிபர் சாவேஸ் மரணம்.

 

மார்ச் 11 : கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் பாதுகாவலர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என இத்தாலி திடீரென அறிவித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்து.

 

இத்தாலி அரசு இரண்டு கப்பல் பாதுகாவலர்களையும் மார்ச் 22ந்தேதி டெல்லிக்கு அனுப்பி வைத்தது.

 

மார்ச் 13 : புதிய போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ போர்கொகிலியோ தேர்வு. மார்ச் 19 ந்தேதி பதவியேற்றார். அவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் என அழைக்கப்பட்டார்.

 

மார்ச் 14 : சீனா புதிய அதிபராக ஜீ ஜின்பிங் பாராளுமன்றத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மார்ச் 17 : முதல் முறையாக ஆறு ஆண்டு காலம் பதவி நிறைவு செய்த பாகிஸ்தான் பாராளமன்றம் கலைக்கப்பட்டது.

 

மார்ச் 19 : ஐநா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் தாக்கல் ஆனது. இலங்கைக்கு எதிரான வலுவான வாசகங்கள் இல்லை.

 

தமிழகத்தில் புத்த பிட்சுக்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவிடம் இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

 

மார்ச் 20 : ஐநா. மனித உரிமை கவுசிலில் அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்தது. ஆதரவு கேட்டு உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியது.

 

மார்ச் 21 : ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்பட 25 நாடுகள் ஆதரவு.பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 13 

நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது.

 

மார்ச் 24 : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்.

 

ஏப்ரல் 8 : இங்கிலாந்து முன்னால் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்.

 

பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷரப் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் உத்தரவு.

 

ஏப்ரல் 9 : தெற்கு சூடானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வரும் இந்திய வீரர்கள் மீது உள்ளூர் கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியா ராணுவ துணை தளபது உள்பட 5 வீரர்கள் பலி.

 

ஏப்ரல் 16 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி, 176 பேர் காயம்.

 

ஏப்ரல் 18 : பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓட்டம்.

 

ஏப்ரல் 19 : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கைது செய்யப்பட்டார்

 

ஏப்ரல் 20 : சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 156 பேர் பலி

 

ஏப்ரல் 24 : வங்காளதேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து 1000 பேர் பலி.

 

ஏப்ரல் 26 : பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்திய கைதி சரப்ஜித்சிங் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மே.1 ந்தேதி மரணம் அடைந்தார்.

 

மே 6 : மலேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கூட்டணி  வெற்றி பெற்றதையொட்டி பிரதமராக நஜிப் ரசாக் மீண்டும் பதவி ஏற்றார்.

 

மே 12 : பாகிஸ்தான் பாராளமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நாட்டில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் மீண்டும் 

ஆட்சியை பிடித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இமரான்கான் எதிர்கட்சி தலைவரானார்.

 

மே 23 : லண்டனில் ராணுவ வீரரை தலையை துண்டித்து கொலை செய்த 2 தீவிரவாதிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

 

ஜூன் 3 : சீனாவின் ஜிலின் மாகாணத்தில் மிஷாசி என்ற ஊரில் உள்ள கோழியை பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 119 பேர் கருகி பலி.

 

ஜூன் 5 : பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். 

 

ஜூலை 3 : எகிப்தில் ராணுவ புரட்சி ஏற்பட்டு அதிபர் முர்சி நீக்கப்பட்டார். பதவியை இழந்த முர்சி மறுநாள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இடைக்கால அதிபராக அட்லி முகமது மன்சூர் பதவி ஏற்றார்.

 

ஜூலை 10 : சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 40 பேர் பலி.

 

ஜூலை 22 : சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சூ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 89 பேர் பலி. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்.

 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 

ஜூலை 23 : நரேந்திரமோடிக்கு அமெரிக்க செல்ல விசா வழங்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்தியாவை சேர்ந்த 65 எம்பிக்கள் கடிதம் எழுதினர்.

 

ஜூலை 25 : ஸ்பெயின் நாட்டில் ரயில் கவிந்த விபத்தில் 77 பேர் பலி; 143 பேர் படுகாயம்.

 

ஜூலை 27 : எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முர்சி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதால் அந்த நாட்டில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 120 பேர் பலியானார்கள்.

 

ஆகஸ்ட் 27 : ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

செப்டம்பர் 3 : அமெரிக்க-இஸ்ரேல் நாடுகள் இணைந்து சிரியா அருகே கடலில் ஏவுகணை வீசி ஒத்திகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

செப்டம்பர் 5 : தலீபான்களிடம் இருந்து விடுதலை என்ற புத்தகம் எழுதி புகழ் பெற்ற இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி. ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது வீட்டில் தலீபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

செப்டம்பர் 8 : ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பதவி விலகினார்.

 

செப்டம்பர் 13 : ரஷியாவின் லூகா என்ற ஊரில் உள்ள மனநோயாளிகள் மருத்துவமனையில் தீப்பிடித்ததில் 37 பேர் பலியானார்கள்.

 

செப்டம்பர் 21 : இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்தேசிய கூட்டணி ஆட்சியை பிடித்தது.விக்னேஸ்வரன் புதிய முதல் அமைச்சராகினார்.

 

செப்டம்பர் 22 : கென்யாவில் உள்ள வெஸ்ட் கேட் என்ற வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 59 பேர் பலி.

 

பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயம் அருகே நடத்த தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

 

செப்டம்பர் 29 : நியூயார்க் நகரில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு.

 

அக்டோபர் 2 : அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி பிரச்சனையால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்ட தான் அரசு ஊழியர்கள் வீடுகளில் முடங்கினர்.

 

அக்டோபர் 7 : இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சராக விக்னேஸ்வரன்.அதிபர் ராஜபச்சே முன்னிலையில் பதவி ஏற்றார்.

 

அக்டோபர் 23 : இந்தியா-சீனா இடையே எல்லை பாதுகாப்பு உள்பட 9 ஓப்பந்தங்கள் பிரதமர் மன்மோகன் சிங் - சீனா பிரதமர் லீகேயாங் முன்னிலையில் கையெழுத்தானது.

 

நவம்பர் 1 : விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்த வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்தின் சானல் 4 நிறுவனம் வெளியிட்டது

 

நவம்பர் 3 : அமெரிக்க உளவு விமானம் தாக்குதலில் தலீபான் இயக்க தலைவர் ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு அமெரிக்க ரூ. 30 கோடி பரிசுத்தொகை அறிவித்து இருந்தது.

 

நவம்பர்  10 : பிலிப்பைன்ஸ் புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

 

நவம்பர் 15 : யாழ்ப்பாணம் பகுதியை பார்வையிட சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காரை வழிமறித்த தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடு பட்டனர்.

 

53 நாடுகள் அமைப்பான காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து ராணி எலிசபெத் சார்பில் இளவரசர் சார்லஸ் தொடங்கிவைத்தார். காமன்வெல்த் அமைப்பை நீதிமன்றமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என ராஜபக்சே பேச்சு.

 

நவம்பர் 16 : இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து மார்ச் இறுதிக்குள் நம்பத்தகுந்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கெடு 

 

நவம்பர் 17 : மாலத்தீவின் புதிய அதிபராக அப்துல்லா யாமீன் பதவி ஏற்றார். 

 

டிசம்பர் 5 : தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபரும், கறுப்பர் இன தலைவருமான நெல்சன் மண்டேலா காலமானார்.

 

டிசம்பர்  8 : சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் பஸ் விபத்தில் பலியானார். இதைப்பார்த்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 24 தமிழர்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 52 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

 

டிசம்பர்  9 : தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷின்வத்ரா பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம். இதையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு. ஆனால் பிப்ரவரி தேர்தல் நடக்கும் வரை பிரதமராக தொடர்வார் எனவும் அறிவிப்பு. 

 

டிசம்பர்  10 : தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி, ஜோகனஸ்பர்க் கால்பந்து மைதானத்தில் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

 

டிசம்பர்  12 : வங்கதேசத்தில் 1971ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில், பாக்., ராணுவத்துடன் சேர்ந்து, இனப்படுகொலை செய்த ஜாமத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்.

 

அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதர் தேவ்யானி கோப்ரகடே, தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாக, அமெரிக்காவில் பொது இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியா வந்த அமெரிக்க எம்.பி.,க்கள் குழுவை சந்திக்க மறுத்தது. 

 

டிசம்பர் 22 : உலகின் முதல் செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சை, பாரிசில் வெற்றிகரமாக நடந்தது.

 

டிசம்பர் 29 : உயிரி மின்னுற்பத்தி திட்டம்: இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்.

 

ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தியது சீனா

 

டிசம்பர் 30 : பெண் துணைத்தூதர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இரட்டைக் குழந்தைகளுக்கு  மருத்துவ உதவி தேவை கரம் கொடுப்போம்.. இரட்டைக் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவை கரம் கொடுப்போம்..
சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்.. சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்..
பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி பெருமைமிகு நம் ஊர்களின் அடையாள ருசிப்புகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி
மோகமுள் - தி. ஜானகிராமன் மோகமுள் - தி. ஜானகிராமன்
கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?! கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?!
வேடிக்கையான உலகம் வேடிக்கையான உலகம்
(பெண்களின்) குடிப்பழக்கம் (பெண்களின்) குடிப்பழக்கம்
இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா? இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.