LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

புனர்பூசம் 4,பூசம், ஆயில்யம் 

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்கும் திறனும் உடைய உங்கள் கடக லக்னத்திற்கு 3ம் இடத்தில் குருவும் 2ம் இடத்தில் ராகுவும் 5ம் இடத்தில் சனியும் 8ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சுமாரான பலன் ஆகும். இதுவரை முடிவு காணாமல் தள்ளிப்போன விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே புதிய செயல்களில் இறங்க மனம் ஈடுபடும். அதற்கான வெற்றிகளைப் பெற கடுமையாகப் போராட வேண்டி வரும். சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். பேச்சில் அதிக எச்சரிக்கை தேவை. பத்திரங்கள் நகைகள் இவைகளை பத்திரமாகப் பாதுகாத்தல் வேண்டும். உடன் பிறந்தவர்களால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெறப் பாடுபட வேண்டியது வரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்கள் அமையும். அதனால் நன்மைகளும் ஏற்படும். இடமாற்றம் மனைமாற்றம் ஊர்மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். வீடு ஒத்தி அல்லது வாடகை மூலம் வருமானம் வர வாய்ப்பு அமையும். பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்க வேண்டியது வரும். புதிய ஷேர்களை வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வண்டிவாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் புதிதாக வாங்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். பாகப்பிரிவினை மூலம் புதிதாக சொத்துக்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

தாயாரின் உண்மையானா அன்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் வருத்தங்களும் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மனம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. விருந்து கேளிக்கைகளைத் தவிர்க்கவும். புதிய வேலை அமையும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். கடன் அடையும், அதே சமயம் புதிதாக கடன் வாங்க வேண்டியது வரும். வேலையாட்களால் எதிர்பாராத பிரச்சனைகளும் மனவருத்தங்களும் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. நண்பர்களால் நன்மையேற்படும். வழக்குகள் சாதகமாக அமையும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும். அறுவை சிகிச்சைக்கான காலமிதுவாகும்.


வேலை அல்லது உத்யோகம்  (JOB)

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். அரசாங்க வேலையும் ஒரு சிலருக்கு அமையக் கூடும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு நன்கு கிட்டும். பழைய கம்பெனியை விட்டுப் புதிய கம்பெனிக்குச் செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையின் காரணமாக இடமாற்றம் வீடுமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். போட்டித் தேர்வில் வெற்றி பெற சந்தர்ப்பங்களும் அமையும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் புரிபவர்கள் தேவையில்லாமல் முதலீடு செய்தல் கூடாது. புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் வந்தாலும் நன்கு யோசித்தே சுயதொழில் தொடங்குதல் வேண்டும். கூட்டுத் தொழிலில் அதிகக் கவனம் தேவை. ஏற்றுமதி சாதகமாக இருக்கும். சிறுதொழில் புரிபவர்கள் கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். அதிலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் கவனமாக பொருட்களை உற்பத்தி செய்தல் வேண்டும். அளவுக்கதிகமாக பொருட்களை உற்பத்தி செய்வது நல்லதல்ல. மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் ஏற்றமுடன் விளங்கும். ரியல் எஸ்டேட் கட்டுமானத் தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும். இரும்பு, சிமெண்ட், தாதுப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து லாபம் அதிகரிக்கும். கனிம வளங்கள் ஏற்றமுடன் இருக்கும். போக்குவரத்து தகவல்தொடர்பு சேவைத்துறை லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம் ஜவுளித் துறைகளில் நல்ல ஏற்றம் காணப்படும். கல்வி, நிதி, நீதி, வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். பங்குச்சந்தையில் முதலீட்டில் மிக அதிகக் கவனம் தேவை. ரேஸ், சூதாட்டம், கிளப் லாபகாரமாக இருக்காது. கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, கப்பல், நீர் போன்ற துறைகளில் நல்ல லாபம் கிட்டும். சாலையோர வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்.


விவசாயம்

விவசாயம் ஓரளவு சுமாராக இருக்கும். கரிப்பருவ விளைச்சல் அதிகமாகும்,. ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் லாபம் குறைவாகவே அமையும். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க வேண்டியது வரும். ஒரு சிலர் புதிதாக நிலைம் வாங்கவும் வாய்ப்புகள் ஏற்படும்.


அரசியல்

அரசியல் மகிழ்ச்சிகரமாகவும் லாபகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு புதிய பதவிகளும் பொறுப்புகளும் வந்து சேரும். தொண்டர்களால் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும். எனவே எதிலும் கவனம் தேவை.


கலை

கலைத்துறை ஏற்றமுடன் விளங்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். அதனால் தனவரவு பொருள்வரவு அமையும். இசை, நடனம், நாடகம், சினிமா, ஓவியம், சின்னத்திரை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.


மாணவர்கள்

படிப்பு நன்கு வரும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் சேர சந்தர்ப்பம் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதும் பேசுவதும் கூடாது. உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கும் அமையும்.


பெண்கள்

சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்பு அமையும். இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் குழந்தை பாக்யம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் ஆரோக்யம் சற்று பாதிக்கப்படும். பொருளாதார சூழ்நிலை சற்று சுமாராகவே இருந்தாலும் பணப்புழக்கம் தாராளமாக இருந்துவரும். கணவரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். காதல் விஷயங்கள் சந்தோஷகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பங்கள் கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை அமையும். வேலையில் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. உயரதிகாரிகளின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். அடிக்கடி உடல் அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும்.


உடல் ஆரோக்யம்

இதயம், அடிவயிறு, கால் போன்ற உறுப்புகளில் கவனம் தேவை. சர்க்கரை நோய் இருப்பின் கட்டுக்குள் வைக்கவும். உடம்பில் தேம்பல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.


பரிகாரம்

“செவ்வாய்கிழமை” தோறும் “முருகனை” வணங்கிவர நன்மையேற்படும். செவ்வாய்கிழமை “சரபேஸ்வரை” வணங்கிவருதல் வேண்டும். வாய்ப்பிருந்தால் வியாழக்கிழமை “திருச்செந்தூர்” சென்று முருகனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  1 Comments
Tags: கடக லக்னப் பலன்கள்   2016 கடக லக்னப் பலன்கள்   கடக ராசி பலன்கள்   2016 கடக ராசி பலன்கள்   குருப்பெயர்ச்சிப் பலன்கள்   குருப்பெயர்ச்சி கடக ராசி பலன்கள்   2016 குருப்பெயர்ச்சி கடக ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 கடக ராசி  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்  - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர் 2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடக லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடக லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள்
கருத்துகள்
09-Jul-2016 05:29:50 சு.டில்லிபாய் said : Report Abuse
காதல் விஷயம் கைகூடுமா NAME சு.டில்லிபாய் கார்த்திகேயன், கார்த்திகேயன் KU JOB AMAYUMA
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.