LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கும்ப லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம் 1, பூரட்டாதி 1,2,3, பாதங்கள்

எப்பொழுதும் சுறுசுறுப்பும் எடுத்த காரியங்களில் வெற்றிபெற வலுவாக உழைக்கும் உங்கள் லக்னத்திற்கு 8ம் இடத்தில் குருவும், 11ம் இடத்தில் சனியும் லக்னத்தில் கேதுவும் 7ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் ஆகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபட வேண்டியதிருக்கும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் வெற்றியுடன் வந்து சேரும். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். அதே சமயம் குரு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தேவையற்ற விவாதங்களுக்கும் வீண்பழிச் சொல்லுக்கும் ஆளாக நேரிடும். பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருந்து வரும். பணங்கள் நகைகள் பத்திரங்கள் இவற்றை பத்திரமாகப் பாதுகாத்தல் வேண்டும். தேவையில்லாமல் பேசுவது பொறுப்பற்று இருப்பது கூடாது.

உடன் பிறப்புகளால் நன்மையேற்படும். உடன்பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேற சந்தர்ப்பம் அமையும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். புதிய உறவுகள் குடும்பத்தில் வந்து அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் கூடி வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். விருந்து கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அடிக்கடி ஆலய தரிசனம் மந்திர உபதேஷம் பெற சந்தர்ப்பம் அமையும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுக்கல் வாங்கள் சாதகமாக இராது.

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பார்க்கும் வேலையில் கவனம் தேவை. வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிட்டும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். புதிய கடனை வாங்கிப் பழைய கடனை அடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்கள் வலுத்து காணப்படுவர். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. வெளிநாட்டுத் தொடர்பால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். ஒரு சிலர் வெளிநாடு செல்வதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் சொத்துக்கள் ஒரு சிலருக்கு கிடைக்கும் அல்லது மூதாதையர்கள் சொத்துக்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துதல் வேண்டும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகளும் உதவிகளும் கிட்டும்.


வேலை உத்யோகம் (JOB)

இதுவரை வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கிடைக்கும் வேலை திருப்தியில்லாமல் இருந்து வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்படுத்தல் வேண்டும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. அடுத்த வேலை கிடைத்தபிறகே பார்க்கும் வேலையை விடுதல் வேண்டும். வேலையில் அடிக்கடி லீவு போட வேண்டியது வரும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் அமையும். வேலையின் காரணமாக இடமாற்றம் ஊர்மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு கிட்டும். சக ஊழியர்களின் அன்பும் ஒத்துழைப்பும் கிட்டும். உயரதிகாரிகளிடத்தில் தேவையில்லாமல் பேசுதல் கூடாது.


தொழில்  (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்றமான காலமாகும். சிறுதொழில்கள் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் பெரிய அளவில் முதலீடு கூடாது. பார்ட்னர்களுக்குள் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி சுமாரகவே இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகள் லாபகரமாக இருக்கும். பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்தல் வேண்டும். நடைபாதை தெருவோர வியாபாரங்கள் நல்ல லாபகரமாக இருக்கும். உணவு, ஆடை, ஆணிகலன்கள் ஏற்றமாகவும் இரும்பு, எஃகு, சிமெண்ட், கனிமவளங்கள் துறை நல்ல லாபகரமாகவும் அமையும். கல்வி செய்தி தகவல் தொடர்பு சேவைத்துறைகள் சிறந்து விளங்கும். பத்திரிக்கைகள் தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்றம் பெற்றாலும் கடுமையான தொழில் போட்டியை சந்திக்க வேண்டியது வரும். சுற்றுலாத்துறை ஏற்றமுடன் அமையும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்சி, கட்டுமானத்துறைகள் சற்று சுமாராக இருந்து வரும். ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் முதலீடு கூடாது. ரேஸ், லாட்டரி, கிளப் போன்றவைகள் லாபகரமாக அமையும். பொறியியல், மருத்துவம், விஞ்ஞனம் ஆராய்ச்சித் துறைகள் ஏற்றம் பெற்று காணப்படும்.


விவசாயம்

விவசாயம் ஓரளவு சாதகமாக வந்து சேரும். உணவு காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் நன்மைகள் ஏற்படும். புதிய வண்டி வாகன்ங்கள் கடனில் வாங்க வாய்ப்பு அமையும். தங்களது நிலத்தை ஒத்திக்கு விட வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். 


அரசியல்

தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து கொண்டே இருக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய பதவிகள் அல்லது பொறுப்புகள் ஒரு சிலருக்கு வந்து அமையும்.


கலை

சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஓவியம் ஏற்றம் பெறும். கதை, கவிதை கட்டுரை சம்பந்தமானவைகளில் தேவையற்ற குழப்பங்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். 


மாணவர்கள்

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வாய்ப்பு அமையும். விளையாட்டுகளில் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விக்கடன் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர தடைகள் ஏற்பட்டுப் பின் விலகும்.


பெண்கள்

சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் சற்று தடையேற்பட்டுப் பின் நடைபெறும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்படும். காதல் விஷயங்கள் சுமாராகவே இருந்து வரும். அடிக்கடி பயணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். வீட்டில் புதுவரவால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் பேசுவதும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதும் கூடாது. கணவன் மனைவி ஒற்றுமை சுமாராகவே இருந்து வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் வேண்டும். தேவையற்ற விரதத்தை கைவிடுதல் வேண்டும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அமையும். 


உடல் ஆரோக்யம்

தலை, அடிவயிறு, கால் போன்ற பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உனவுக்கட்டுப்பாடு அவசியம். உடலில் சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ணுதல் அவசியம். விரதத்தை தவிர்க்கவும்.


பரிகாரம்

புதன்கிழமை தோறும் “சிவனுக்கு” அர்ச்சனை செய்ய உத்தமம். வாய்ப்பிருந்தால் “திருப்பதி” சென்று சாமி தரிசனம் செய்து வர உத்தமம்.

by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: 2016 Kumba Rasi Palangal   Kumba Rasi Jupiter Transit Predictions   2016 Jupiter Transit Predictions for Kumba Rasi   Kumba Rasi Guru Peyarchi Palangal   Kumba Rasi Tamil Palangal   கும்ப ராசி பலன்கள்   கும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கும்ப லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கும்ப லக்னப் பலன்கள்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்னம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.