LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மகர லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

உத்ராடம் 2,3,4,, திருவோணம், அவிட்டம் 1,2

கடின உழைப்பும், தெய்வ நம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய உங்கள் லக்னத்திற்கு குரு 9ம் இடத்திலும் சனி 12ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும் ராகு 8ம் இடத்திலும் சஞ்சாரம் செய்வது சிறப்பானது ஆகும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன விஷயங்கள் இனிதே நடந்தேறும். தெய்வீக பயணங்கள் தெய்வீக விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் நிவர்த்தியாகும். அடிக்கடி ஆலய தரிசனம் நீண்டதூரப் பிரயாணங்கள் அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கையை விட்டுப் போன நகை, பணம், பத்திரங்கள் திரும்ப வீட்டிற்கு வந்து சேரும். பேச்சில் மிக நிதானம் தேவை. தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுதல் கூடாது.

சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களால் சுப விரயம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எதிர்பாராத செய்திகளும் சாதகமாக அமையும். இடமாற்றம் மனமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். அண்டை அயலாருடன் நட்பு மிகும். புதிய உறவுகள் வந்து சேரும். சொத்துக்களை விற்று சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். வீடு, வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

விருந்து கேளிக்கைகளில் அதிக அளவில் கலந்து கொள்ள வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் அதிகரிக்கும். பங்குச்சந்தையில் ஈடுபாடு கூடும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் வாங்கி கடனை அடைக்க வேண்டியது வரும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காமல் போகும். எனவே அவர்கள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. காலம் தவறாமல் உணவு உண்ணுதல் வேண்டும். எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் ஏற்பட்டாலும் போக்குவரத்து வண்டிவாகனங்களில் கவனமாகச் சென்றுவருதல் வேண்டும். அரசாங்க விஷயங்களில் தேவையற்ற தலையீடு கூடாது. வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அடிக்கடி வைத்யச் செலவுகள் ஏற்பட்டு விலகும்.


வேலை, உத்யோகம் (JOB)

தனியார் வேலை மற்றும் அரசு வேலை இரண்டையும் இங்கு வேலை என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிடப்படுகிறது. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் அமையும். பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு அவசரப்பட்டு மாறுதல் கூடாது. வேலையில் உத்யோக உயர்வு அமையும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு மட்டும் கிட்டும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். வேலையில் திருப்தியற்ற சூழிநிலை  நிலவும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு நன்கு அமையும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வருத்தங்களும் ஏற்பட்டு விலகும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

 சுய தொழில்கள் லாபகரமாக இருந்தாலும் ஏற்ற இறக்கங்களும் இருந்து கொண்டே இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி சுமாராகவே இருந்து வரும். உற்பத்திச் சார்ந்த துறைகள் ஓரளவு லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் ஏற்படும். பார்ட்னர்கள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். கூட்டுத் தொழிலில் முதலீடு லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். பங்குச்சந்தையில் கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். ரேஸ், லாட்டரி, கிளப்புகள் சாதகமாக இருந்து வரும். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் ஏற்றமுடன் அமையும். தகவல் தொடர்பு போக்குவரத்து சாதகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி பத்திரிகை ஏற்றமாக அமையும். நிதி, நீதி, நிர்வாகம், வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் சற்று சுமாராகவும் கட்டுமானம் கனிமவளம் இரும்பு, எஃகு, சிமெண்ட் துறைகள் நல்ல லாபகரமாகவும் அமையும். ஓட்டல், சுற்றுலா, உனவு, உடை, ஆபரணம், பிளாஸ்டிக், ஜவுளித் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். தெருவோர வியாபாரம் நல்ல லாபகரமாக இருக்கும்.


விவசாயம்

விவசாயம் ஓரளவு சாதகமாக இருந்து வரும். விளைச்சலுக்கேற்ற லாபம் ஒரளவு கிட்டும். ஒரு சிலர் நிலத்தை ஒத்தி அல்லது குத்தகைக்கு விட வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க வேண்டியது வரும். எனவே தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.


அரசியல்

நல்ல பெயர் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். நல்ல நட்பு வட்டாரம் உருவாகும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். வேலையாட்களும் தொண்டர்களும் சுமாராகவே நடந்து கொள்வர். தேவையற்ற மனக்குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அரசியலில் எதிர்கள் அதிகரித்த வண்ணம் இருப்பர்.


கலை

கலைத்துறை நல்லபடியாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் நன்கு அமையும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானமும் பயணங்களும் அமையும். இசை, நடனம், நாட்டியம், சினிமா, சின்னத்திரை, சிற்பம், ஜோதிடம் இவை நன்கு அமையும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.


மாணவர்கள்

அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும், கேட்ட இடத்தில் பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் எச்சரிக்கை தேவை.


பெண்கள்

இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கிட்டும். திருமணம் நடக்கும் காலமிது. குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். தேவையற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்தல் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் திருப்தியற்ற நிலை ஏற்படும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை வந்து சேரும். வேலையில் ஊதிய உயர்வு ஒரு சிலருக்கு அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும்.


உடல் ஆரோக்கியம்

முதுகு தோள்பட்டை இவற்றில் வலிவராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். இதயம் அடிவயிற்றில் பிரச்சனை வந்தால் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். சளித்தொல்லைகள் இல்லாமல் உடலைப் பேணுதல் வேண்டும்.


பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெக்ஷ்மியை”” வணங்கி வருதல் நற்பலன் ஆகும். வாய்ப்பிருந்தால் “ஸ்ரீரங்கம்” சென்று ரங்கநாதரை தரிசித்துவர நற்பலன்கள் அதிகரிக்கும்.



by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: Makara Rasi   2016 Makara Rasi Palangal   Makara Rasi Guru Peyarchi Palangal   2016 Guru Peyarchi Makara Rasi Palangal   Makara Rasi Jupiter Transit Predictions   2016 மகர ராசி பலன்கள்   மகர ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மகர லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மகர லக்னப் பலன்கள்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்னம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.