LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

கார்த்திகை 2,3,4 ரோகிணி, முருகசீரிஷம் 1,2 

எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்பொழுதும் புன்சிரிப்புடன் விளங்கும் ரிஷப லக்ன காரர்களாகிய உங்கள் லக்னத்திற்கு 4ம் இடத்தில் ராகுவும் 5ம் இடத்தில் குருவும் 7ம் இடத்தில் சனியும் 10ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செயவ்து சிறப்பானது ஆகும். சுபகாரியங்கள் செய்ய உகந்த காலமிது. சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியமும் கூடும். எதிர்பாராத தனவரவுகள் பொருள்வரவுகள் அமையும்.

எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். அவை சாதகமாக அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். 4ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். தாயரின் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. 5ம் இடத்தில் குரு சஞ்சாரம் காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தெய்வீக தரிசனம் ஆலய தரிசனம் அடிக்கடி அமையும். கடன் வாங்க வேண்டியது வரும். வழக்குகள் வெற்றியடையும், சனிப்பெயர்ச்சிக்குப்பின் கணவன் மனைவி உறவு மகிச்சிகரமாக அமையும்.

அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலமிது. அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். முன்னோர்கள் சொத்து மனைவி மூலம் தனவரவு பொருள்வரவு கிட்டும். மூத்த சகோதர சகோதரர்களால் தேவையில்லாத மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பங்கள் அமையும். மனைவியின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டுப் பயணங்கள் ஒரு சிலருக்கு அமையும். நண்பர்களால் சகாயமும் ஆதாயமும் அதிகரிக்கும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிகக் கவனம் தேவை.


வேலை  (JOB)

சுக்ரன் 6ம் அதிபதியாகவும் இருப்பதால் இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் மனைமாற்றம் ஊர்மாற்றம் அமையும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் தேவையில்லாமல் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளுதல் கூடாது. சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராமல் கிட்டும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. வேறு வேலை கிடைத்து ஆர்டர் வந்தால் மட்டுமே பார்க்கும் கம்பெனியை விட்டுவிடுதல் வேண்டும். அரசு உத்யோகம் ஒரு சிலருக்கு கிட்டும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் கூடிவரும் கூட்டுத்தொழில் செய்ய சந்தர்ப்பங்கள் தானகா வந்து சேரும். கவனமாக தொழில் பார்ட்னரை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தேவையற்ற முதலீடு கூடாது. பங்குச்சந்தையில் அதிகக் கவனம் தேவை. சிறுதொழில் சுயதொழில்கள் லாபகரமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் சுயதொழில்கள் லாபகரமாக இருக்கும். இரும்பு சிமெண்ட் எஃகு சார்ந்த துறைகள் சற்று சுணக்கமாக இருக்கும். கட்டுமானம் ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்து காணப்படும். நிதி, நீதி, வங்கித்துறையில் லாபம் மிகுந்து காணப்படும். உணவு ஆடை ஆபரணத் தொழில்கள் சிறப்பாக இருந்து வரும். கமிஷன் ஏஜென்ஸி போக்குவரத்து தகவல்தொடர்புத்துறை ஏற்றமுடன் விளங்கும். மருத்துவம், விஞ்ஞனம், இரசாயனம், கப்பல், நீர், சம்பந்தமான தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். சிறு வணிகர்கள் லாபம் அடைவர். தெருவோர வியாபாரம் நன்கு லாபகரமாக அமையும். சுற்றுலாத்துறை ஆன்மீக சம்பந்தமான தகவல், பத்திரிக்கை, தொலைக்காட்சித் துறை லாபகரமாகவும் சாதகமாகவும் இருந்து வரும்.


விவசாயம் 

விவசாயம் சற்று சுமாராக இருக்கும். ஒரு சிலருக்கு புதிதாக இடம், நிலம் வாங்க வாய்ப்புகள் அமையும். இருக்கும் நிலத்தை குத்தகைக்கு விடவாய்ப்பும் சந்தர்ப்பங்களும் சேர்ந்து வரும். தோட்டப்பயிர்கள் லாபகரமாக இருக்கும். பழங்கள் உற்பத்தி நன்கு அமையும்.


அரசியல் 

அரசியலில் எதிர்பாராத பெயர், புகழ் அந்தஸ்து கௌரவம் கிட்டும். புதுப்புது பதவிகள் ஒரு சிலருக்கு வந்து சேரும். எதிரிகள் அதிகரித்த வண்ணம் இருப்பர். எப்பொழுதும் அலைச்சல்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.


கலை 

கலைத்துறை ஏற்றம் பெற்று விளங்கும், பணப்புழக்கம் நன்கு அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். அதனால் எதிர்பாராத புகழும் பணமும் வந்து சேரும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், சிற்பம், ஓவியம் சிறந்து விளங்கும்.


மாணவர்கள் 

உயர்கல்வி காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் குழப்பநிலை நீடிக்கும். கல்விக்கடன் எளிதாகக் கிடைக்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது கூடாது. போக்குவரத்து வண்டிவாகனங்களில் மிக அதிகக் கவனம் தேவை.


பெண்கள் 

இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் சேர்க்கை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். கணவன் மனைவி உறவும் ஒற்றுமையும் சற்று சுமாராக இருக்கும். குழந்தைகளால் தேவையற்ற மனஉலைச்சல்களும் குழப்பங்களும் ஏற்படும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் கிட்டும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் நன்கு அமையும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் ஏற்படும். உடலில் சளித்தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். தேவையற்ற மனக்குழப்பத்தை தவிர்க்கவும். உயரதிகாரிகளால் நன்மையேற்படும். உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகளும் அமையும்.


உடல் ஆரோக்யம் 

அடிவயிறு கல்லீரல், கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். நேரம் தவறி உணவு உண்ணுதல் கூடாது.


பரிகாரம் 

புதன்கிழமை தோறும் “சிவனை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். “சனி பகவானுக்கு” சனிக்கிழமை அர்ச்சனை செய்தல் நலம். வாய்ப்பிருந்தால் “திருக்கொள்ளிக்காடு” சென்று வயது தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  3 Comments
Tags: Rishaba Rasi Palangal   2016 Rishaba Rasi Palangal   Rishaba Rasi Guru Peyarchi Palangal   Rishaba Rasi Jupiter Transit Palangal   Rishaba Rasi Guru Peyarchi 2016 in Tamil   Guru Peyarchi Rishaba Rasi 2016   குருப்பெயர்ச்சி  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர் 2017-2018 ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்
சனிப்பெயர்ச்சி - ரிஷப ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - ரிஷப ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள்
கருத்துகள்
20-Sep-2016 21:35:47 ராஜகுமாரன் said : Report Abuse
நான் ரொம்ப பணம் கஷடத்தில் இருக்கிறேன் என் மகன் மேல் படிப்பு படிக்கிறார் பணம் பற்றா குறை
 
31-Jul-2016 21:18:09 prabhu said : Report Abuse
ஒர்க்
 
25-Jul-2016 19:15:40 Susela said : Report Abuse
நோட் அப்ளே டு உஸ் valaitamil இந்த iPhone ஆப்ஸ் ப்ளஸ் அஸ்சிஸ்ட் தேங்க்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.