LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - துலாம் லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்

எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கும் உங்கள் துலா லக்னத்திற்கு 12ம் இடத்தில் குருவும் 2 மற்றும் 3ம் இடத்தில் சனியும் 5ம் இடத்தில் கேதுவும் 11ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது ஓரளவு நற்பலன் ஆகும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன விஷயங்கள் இனிதே நடந்தேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கும் புதிய காரியங்கள் வெற்றியில் முடியும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பேச்சில் இனிமை கூடும். அதனால் நன்மை ஏற்படும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். பத்திரங்கள் நகைகள் பணங்கள் இவைகளைப் பத்திரமாகப் பாதுகாத்தல் வேண்டும்.

3ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் அடிக்கடி சிறுபயணங்கள் செல்ல சந்தர்ப்பங்களை உருவாக்குவார். அதனால் தேவையற்ற மன உலைச்சல்களும் வருத்தங்களும் ஏற்படும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு தவணை முறையில் வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். தேவையற்ற நண்பர்களின் பழக்கங்களைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும். தாயாரால் நன்மையேற்படும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்.

வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். பெண்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தந்தையின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. போக்குவரத்து வண்டிவாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அறுவை சிகிச்சைக்கான காலமிது. மனைவியின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.


வேலை, உத்யோகம் (JOB)

இதுவரை வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் காரணமாக ஒரு சிலக்கு அலைச்சல்களும் அதனால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியது வரும். எனவே வேலையில் கவனம் தேவை. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. புதிய வேலைக்கு உத்தரவாதம் பெற்ற பின் வேலையை விடுதல் வேண்டும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் மனைமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். உயரதிகாரிகளிடம் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இராது.


தொழில் (BUSINESS)  வியாபாரம் (TRADE)

புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அது லாபகரமாகவும் அமைய வாய்ப்பு அமையும். தொழிலில் பெரிய அளவில் முதலீடு கூடாது. சிறுதொழில்களின் உற்பத்தி அதிகரிக்கும். அதனால், லாபம் ஏற்படும். அதே போல் உற்பத்தி சார்ந்த துறையிலும் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சுயதொழில் புரிபவர் சற்று கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். பார்ட்னர்ஷிப்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் தேவையில்லாத மனவருத்தங்களும் மனக்கசப்பும் வந்து சேரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம் லாபகரமாக இருக்கும். ஓட்டல், உணவு, உடை, ஆபரணம், பிளாஸ்டிக் தொழில்கள் லாபகரமாக அமையும். கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கன்சல்டன்ஸி போக்குவரத்து தகவல்தொடர்பு பத்திரிக்கை கல்வித் துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். இரும்பு, சிமெண்ட், கனிமவளங்கள் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். சாலோயோர வியாபாரம் நல்ல லாபகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.


விவசாயம்

விவசாயம் லாபகரமாக இருக்கும். நிலங்கள் ஒத்திக்கு விடவும் ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். மேலும் பூக்கள், பழங்கள் காய்கறி பயிர்களால் லாபம் கிட்டும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். இருப்பினும் பணப்புழக்கம் சரளமாக இருந்து கொண்டிருக்கும்.


அரசியல்

அரசியல் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்து வரும். பொதுவாழ்வில் பெயர் புகழ் அந்தஸ்து கூடிக் கொண்டிருக்கும். அதே சமயம் வழக்குகள் சாதகமாக இராது இழுபறியாகவே இருந்து வரும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும்.


கலை

கலைத்துறை லாபகரமாக இருந்து வரும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம் அழகுக்கலை இவற்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும், புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அமையும். பணவரவு சுமாராக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது.


மாணவர்கள்

அறிவும் ஆற்றலும் அதிகரித்துக் காணப்படும். அதே சமயம் தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். கல்விக்கடன் எளிதாக ஒரு சிலருக்கு கிடைக்கும்.


பெண்கள்

அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும் அதனால் அலைச்சல்களும் சோர்வும் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவால் உற்சாகம் கூடும். இதுவரை தள்ளிப்போன திருமண விஷயங்கள் ஒரு சிலருக்கு நல்லபடியாக அமையும். காதல் விஷயங்கள் இனிமையாகவும் மகிழ்ச்சிகாரமாகவும் அமையும். குழந்தை பாக்யத்திற்கான காலமிது. வேலையில் அதிகக் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். தேவையற்ற பேச்சுகளால் அசிங்கம் அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சற்று சுமாரகவே இருந்து வரும். சளி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு விலகும். சுறுசுறுப்பு குறையும். அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விடவேண்டியது வரும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். கணவனின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.


உடல் ஆரோக்கியம்

உடலில் நரம்பு சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கண், அடிவயிறு சிறுநீரகப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.


பரிகாரம்

சனிக்கிழமை “சனிபகவானுக்கு” விளக்கேற்றி அர்ச்சனை செய்து வரவும். வாய்ப்பிருந்தால் “குருவாயூர்” சென்று குருவாயிர் அப்பனை தரிசித்து வர நன்மைகள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: துலாம் லக்னப் பலன்கள்   2016 துலாம் லக்னப் பலன்கள்   துல ராசி பலன்கள்   துலாம் ராசி பலன்கள்   2016 குருப்பெயர்ச்சி துல ராசி பலன்கள்   2016 குருப்பெயர்ச்சி பலன்கள்   Thula Rasi Palangal  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 துலாம் ராசி(Thulam Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 துலாம் ராசி(Thulam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - துலாம் லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - துலாம் லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - துலாம் லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - துலாம் லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.