LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்னம்

 நல்ல அறிவும் புத்திக் கூர்மையும் உடைய உங்கள் லக்னத்திற்கு 3ம் இடத்தில் ராகுவும் 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது நன்மையானது ஆகும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்புகள் கூடும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய உறவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் அமையும்.

 இடமாற்றம் மனமாற்றம் ஊர்மாற்றம் அமையும். எதிர்பாராத செய்திகள் சாதகமாக வந்து சேரும். பணவிஷயங்களில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் சரளமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசாமல் இருத்தல் உத்தமம். அடிக்கடி கடன் வாங்க வேண்டியது வரும். நிலம், வீடு, வண்டி, வாகனங்கள் நல்ல வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும்.

புதிய வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாடுப் பயணம் ஒரு சிலருக்கு அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தெய்வ அனுகூலம் கிட்டும்.

உயர்கல்வி பயில வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும். விசா பாஸ்போர்ட் ஆகியவை வந்து சேரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணங்கள் சீக்கிரம் நிச்சயத்தில் முடிந்து திருமணமும் நடந்தேறும். வீட்டில் சுபகாரியங்கள் அடிக்கடி நடந்தேறும்.

 நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். பக்கத்து வீட்டு நண்பர்களின் ஆதரவு அமையும். எதிர்பார்த்த செய்திகள் எதிர்பாராத செய்திகள் இரண்டும் சாதகமாக வந்து சேரும். புதிய நட்பு வட்டம் உருவாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் ஆதரவும் கிட்டும். எதிரிகளால் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணம் நடந்தேறும் எதிர்பார்த்த டைவர்ஸ் கிடைப்பதில் குழப்பம் மிகுந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே அமையும்.

உத்யோகம், வேலை (JOB)

இங்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களை உத்யோகத்தில் இருப்பவர்கள் என்று குறிப்பிடுகின்றோம். வேலையில் ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த துறையில் வேலை அமையும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வேலையை விட்டு வேறு வேலைக்கு அவசரப்பட்டு செல்லுதல் கூடாது. பார்க்கும் வேலையை உற்சாகமாகச் செய்ய வாய்ப்பு அமையும். “ஆன்சைட்” கண்டிப்பாக அமையும். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் ‘ஆன்சைட்” மூலம் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)

உங்கள் லக்னத்திற்கு 7ம் அதிபதி குரு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் ஒரளவு நன்கு அமையும். சுயமாக அல்லது கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் அடைவர். புதிய தொழில்கள் தொடங்க ஆட்கள் வந்து சேர்வர். அதனால் நன்மையேற்படும். சிறுதொழில் புரிபவர்கள் ஓரளவு தங்கள் தொழில் லாபம் அடைவர். சாலையோர வியாபாரிகள் தலைச்சுமையாளர்கள் ஏற்றம் பெறுவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சாதகமாக இருக்கும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, கமிஷன், ஏஜென்சி, கான்ட்ராக்ட், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் தொழில்கள் லாபகரமாக அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். பெரிய தொழில்களில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. மருத்துவம், பொறியியல் துறைகள் ஏற்றம் பெறும், உணவு, உடை, ஓட்டல், அழகு சாதனப் பொருட்கள் சார்ந்த துறைகள் ஏற்றம் பெறும். மருந்து கெமிக்கல் துறை சற்று சுமாராக இருக்கும். இரும்பு எஃகு சிமெண்ட் உற்பத்தி சற்று சுமாராகவே இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் சற்று கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் சற்று சுமாராகவே இருக்கும்.

விவசாயம் :

விவசாயம் ஓரளவு சாதகமாக இருக்கும். பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காது. புதிதாக கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்த முயற்சி செய்வர். பணப் புழக்கம் சற்று சுமாராகவே இருக்கும்.

அரசியல் :

அரசியல் நிலைமை சற்று சாதகமாகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி அந்தஸ்து கிட்டும். அரசால் ஆதாயம் அமையும். சமூக வாழ்வும் பொது வாழ்விலும் அதிகக் கவனம் தேவை. எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். பொது மக்களின் ஆதரவு சற்று சுமாராகவே இருக்கும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன உலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து கொண்டேயிருக்கும்.

கலைஞர்கள் :

கலைஞர்கள் ஏற்றம் பெற்று வாழ்வர். பணப்புழக்கம் நல்லபடியாக இருந்து வரும். அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வலம்வர வாய்ப்புகள் அமையும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். இசை, சினிமா, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம் மகிழ்ச்சிகரமாக அமையும் சின்னத்திரை உற்சாகமாக இருக்கும்.

மாணவர்கள் :

விளையாட்டில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் விளங்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில வாய்ப்புகள் உருவாகும். கல்விக்கடன் ஒரு சிலருக்கு உடனே கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் உயர்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்புகள் அமையும். படித்துக் கொண்டே ஒரு சிலர் வருமானம் ஈட்ட வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள் :

தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருக்கும். அதே சமயம் கணவனால் சகாயமும் ஆதாயமும் ஏற்படும். அடிக்கடி அலைச்சல்கள் இருந்து கொண்டேயிருக்கும் உடலில் சோர்வு அசதி அடிக்கடி தோன்றி மறையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். இரண்டாவது திருமணம் செய்ய ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் மிகும். உடன் பணிபுரிபவர்களின் நட்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அமையும். இடமாற்றம் வீடுமாற்றம் அமைய சந்தர்ப்பங்கள் அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும்.

உடல் ஆரோக்யம் :

தலை, மார்பு, புஜங்கள், தோல்பட்டை இவற்றில் தேவையற்ற வலிகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் தோன்றி மறையும். சளித் தொல்லை இல்லாமலும் நோய் வருவதற்கு முன் நல்லவிதமாக உடல் நலனைப் பேணுதல் வேண்டும்.

 அதிர்ஷ்ட எண் - 8, 9

அதிர்ஷ்ட நிறம் - கருப்பும் சிவப்பு

அதிர்ஷ்ட நாள் - சளி, செவ்வாய்

அதிர்ஷ்ட ரத்னம் - கருநீலக்கல், பவழம்

பரிகாரம் :

வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெஷ்மியை” வணங்கி வருதல் நலம். சனிக்கிழமை “ஆஞ்சநேரையும்” “காயத்ரி” தேவியையும் வழிபடுதல் நற்பலன் அளிக்கும்.

- ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 21 Dec 2015  0 Comments
Tags: Ragu Kethu Peyarchi   2016 Ragu Kethu Peyarchi   Ragu Kethu Peyarchi Palangal   Meenam Rasi   ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்        
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீன லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீன லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்னம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.