LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2017-2018 மேஷ ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தைரியமும், துணிவும், சுறுசறுப்பு மிக்க மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், ஆவணி 27 இல் களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்யலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் மேன்மையடையும். புண்ணியத்தல யாத்திரைகள் ஏற்படும். பொதுவாழ்வில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். தெய்வீக வழிபாடுகள், பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு நன்மை அடைவீர்கள். ஆன்மீகம் டிரஸ்ட், சேவா டிரஸட், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் நல்வுயர்வை அடைவார்கள். குழந்தைகளினால் வீட்டில் எப்போதும் குதூகலம் திகழும். பெண்களாலும் நண்பர்களாலும் அதிக நன்மைகள் ஏற்படும்.

கல்வி, கலைத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கிப் பணியாளர்கள், சட்டத் துறை வ்ல்லுனர்கள், நீதியரசர்கள் ஆகியோர் பணிகள் சிறக்கும். கட்டுமானத் தொழில்கள் முன்னேற்றம் காணும்.

குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். மூத்த சகோதரர் மேன்மையடைவார். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தரும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், பணப் பயன்களும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும். இராசியைப் பார்ப்பதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். சமூகத்தில் உயர்வான இடத்தை அடைந்து, மதிப்பு, மரியாதையும் கூடும்உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் இலாபம் உண்டு. அடுத்து மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய உடன்பிறப்புக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகள் மூலமாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எந்தக் காரியமும் தடைபடாது சிறப்புற நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

மேஷ இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

வேலை என்றால் இங்கு அரசு மற்றும் தனியார் துறை அல்லது கம்பெனி இவற்றில் பணிபுரிவதைக் குறிக்கும். வேலையில் சற்று கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் வேலையில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் (V.R.S) வர வாய்ப்புகள் ஏற்படும். பார்க்கும் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனிக்கு ஒரு சிலர் மாற வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த வேலையில் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். ஊதிய உயர்வில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். வேலையில் மனம் ஈடுபடாது. ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு சிறிது காலம் வெறுமனே பொழுதைப் போக்க வேன்டியது வரும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)


சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். ஒரு சிலர் புதிதாகத் தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். சிறுதொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். சிறுதொழில் ஏற்றம் மிகுந்து தரும். உற்பத்தி சார்ந்த தொழில் சற்று சுமாராக இருக்கும். போக்குவரத்து, தகவல் தொடர்பு, கமிஷன் ஏஜென்சி, புரோக்கர்ஸ், கன்சல்டன்சி தொழில்கள் லாபகரமாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவே இருக்கும். பங்குச் சந்தையில் பெரிய் அளவில் முதலீடு கூடாது. இடம், வீடு, இவற்றில் முதலீடு செய்யலாம். இரும்பு எஃகு சிமெண்ட் சுமாராகவும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சற்று மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ஓட்டல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் நன்கு அமையும், சிறுவியாபாரிகள் சாலையோர வியாபாரிகள் ஏற்றம் பெறுவர். சுற்றுலாத்துறை சற்று சுமாராகவும், கப்பல், மீன்பிடித் தொழில் சுமாராகவும் மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றமுடன் விளங்கும். சுயதொழில் வீட்டில் வைத்து செயல்படும் தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும்.

விவசாயம்

விவசாயம் ஓரளவு சாதகமாக இருக்கும். பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காது. புதிதாக கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்த முயற்சி செய்வர். பணப் புழக்கம் சற்று சுமாராகவே இருக்கும்

அரசியல்

அரசியல் நிலைமை சற்று சாதகமாகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி அந்தஸ்து கிட்டும். அரசால் ஆதாயம் அமையும். சமூக வாழ்வும் பொது வாழ்விலும் அதிகக் கவனம் தேவை. எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். பொது மக்களின் ஆதரவு சற்று சுமாராகவே இருக்கும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன உலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து கொண்டேயிருக்கும்

பெண்கள்

தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருக்கும். அதே சமயம் கணவனால் சகாயமும் ஆதாயமும் ஏற்படும். அடிக்கடி அலைச்சல்கள் இருந்து கொண்டேயிருக்கும் உடலில் சோர்வு அசதி அடிக்கடி தோன்றி மறையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். இரண்டாவது திருமணம் செய்ய ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் மிகும். உடன் பணிபுரிபவர்களின் நட்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அமையும். இடமாற்றம் வீடுமாற்றம் அமைய சந்தர்ப்பங்கள் அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும்.

உடல் ஆரோக்யம்

தலை, மார்பு, புஜங்கள், தோல்பட்டை இவற்றில் தேவையற்ற வலிகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் தோன்றி மறையும். சளித் தொல்லை இல்லாமலும் நோய் வருவதற்கு முன் நல்லவிதமாக உடல் நலனைப் பேணுதல் வேண்டும்

மேஷம்
ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7) 90%

by Swathi   on 10 Aug 2017  0 Comments
Tags: Mesha Rasi Palan   mesha Rasi Palangal   mesha Rasi Guru peyarchi 2017   Guru peyarchi Palangal for mesham   Guru peyarchi Palangal for mesha Rasi   2017 - 2018 Mesha Rasi Guru Peyarchi   Tamil Gurupeyarchi Palangal  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மேஷ ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர் 2017-2018 மேஷ ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மேஷ ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மேஷ ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.