LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் - (99948 11158)

வலைதள நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்

நிகழும் சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாள், செவ்வாய் கிழமை, 12 – 9 – 2017 அன்று கன்னி இலக்னத்தில், கார்த்திகை – 4 ஆம் பாதத்தில், தேய்பிறை சப்தமி திதியில், ஹர்ஷண யோகத்தில், விஷ்டி கரணத்தில் காலை 06 மணி 50 நிமிடத்துக்கு குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

2017 - 2018 Guru Peyarchi


 கிரகங்களின் பாதாசார விவரங்கள்

2017 - 2018 Guru Peyarchi - Patha sara Vivarangal


 குரு ஸ்தோத்திரம்

தேவானா ம்ச ரிஷினாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரி லோகேசம்
தம் நமாமி பிரகஸ்பதிம்.

குரு காயத்ரி

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்

. ஓம் பரவரஸாய வித்மஹே
குரு வ்யக்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் குரு தேவாய வித்மஹே
பரம குருப்யோ தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் குரு தேவாய வித்மஹே
பரப்ரம்மாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் ஆங்கிராய வித்மஹே
சுரசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.


 மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018

ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம் (தங்கம்) ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்.

கிரகப் பெயர்ச்சியன்று

ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.

2017 - 2018 Guru Peyarchi Free


குரு இம்முறை பொது விதிப்படி கன்னி (2), தனுசு (11), கும்பம் (9), மேஷம் (7), மிதுனம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார். ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.

(i). கன்னி-ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.(2) 90%

(ii). தனுசு - சுவர்ண மூர்த்தியாவதால் அவர் நன்மை அளிக்கிறார். (11) 100%

(iii). கும்பம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9) 75%

(iv). மேஷம் - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7) 90%

(v). மிதுனம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (5) 90%

சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி, தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை கடகம், சிம்மம், துலாம் விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் ரிஷபம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்

(i). கடகத்திற்கு – சுவர்ண மூர்த்தியாகி அசுபபலன் பெரும்பாலும் குறையும். (4) 70%

(ii). சிம்மத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 60%

(iii). துலாத்திற்கு - சுவர்ண மூர்த்தியாக சுமாரான பலன்கள் ஏற்படும். (1) 70%

(iv). விருச்சிகத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%

(v). மகரத்திற்க்கு - ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிதளவு குறையும். (10) 65%

(vi). மீனத்துக்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் குறையும். (8)60%

(vii). ரிஷபத்திற்கு – சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6). 70%

மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது, ரிஷபம் மற்றும் துலாம் இராசிக்காரர்களுக்கு 1, 6 மற்றும் 4 இல் சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம்.

(i). ரிஷபம், கடகம், தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

(ii). மேஷம், கன்னி, மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

(iii). சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

(iv). மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

 

மேஷ ராசி பலன்கள்

ரிஷப ராசி பலன்கள்

மிதுன ராசி பலன்கள்

கடக ராசி பலன்கள்

சிம்ம ராசி பலன்கள்

கன்னி ராசி பலன்கள்

துலாம் ராசி பலன்கள்

விருச்சக ராசி பலன்கள்

தனுசு ராசி பலன்கள்

மகர ராசி பலன்கள்

கும்ப ராசி பலன்கள்

மீன ராசி பலன்கள்

by Swathi   on 10 Aug 2017  0 Comments
Tags: 2017 குருப்பெயர்ச்சிப் பலன்கள்   2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்   2017 குருப்பெயர்ச்சி பரிகாரங்கள்   அபிராமி சேகர்   தமிழ் ஜோதிடர்   குருப்பெயர்ச்சிப் பலன்கள்   தமிழ் குருப்பெயர்ச்சிப் பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை)
2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்  - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர் 2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்
இந்த வார நட்சத்திர பலன்கள் (25 – 06 – 2017 முதல் 01 - 07 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (25 – 06 – 2017 முதல் 01 - 07 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (30 – 04 – 2017 முதல் 06 - 05 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (30 – 04 – 2017 முதல் 06 - 05 – 2017 வரை)
நட்சத்திர பலன்கள் (23 – 10 – 2016 முதல் 29 - 10 – 2016 வரை) நட்சத்திர பலன்கள் (23 – 10 – 2016 முதல் 29 - 10 – 2016 வரை)
நட்சத்திர பலன்கள் (25 – 9 – 2016 முதல் 01 - 10 – 2016 வரை) நட்சத்திர பலன்கள் (25 – 9 – 2016 முதல் 01 - 10 – 2016 வரை)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.