LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள உதவும் 21 வழிகள் !!

இன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்டது. இந்த இயந்திர வாழ்க்கையில் எளிதாக பணத்தை சம்பாதிக்க முடிந்த நாம்மால், வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வது என்பது கடினமாக ஒன்றாக உள்ளது.

நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழிகள் ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய புத்தகம் தான் “The way to happiness”. இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்த, இந்த புத்தகம் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 21 வாழ்க்கை சூத்திரங்களை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம் என்கிறார் ரான் ஹப்பார்ட்.

இதோ அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ஏனென்றால், சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. 'சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும்போது சிறிதும் அள்ளிச்செல்ல முடியாது

by Swathi   on 26 Oct 2015  1 Comments
Tags: வாழ்க்கை   சந்தோஷம்   வழிகள்   மகிழ்ச்சியான வாழ்க்கை   மகிழ்ச்சி   Happy   Life  
 தொடர்புடையவை-Related Articles
மாதத்தின் முதல் நாள் மாலை பொழுது மாதத்தின் முதல் நாள் மாலை பொழுது
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள உதவும் 21 வழிகள் !! வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள உதவும் 21 வழிகள் !!
இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !! இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !!
இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !! இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !!
ஆஸ்கர் நூலகத்தில் ஹேப்பி நியூ இயர் !! ஆஸ்கர் நூலகத்தில் ஹேப்பி நியூ இயர் !!
மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !! மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !!
மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்
மகிழ்ச்சியில் சமந்தா !! வருத்தத்தில் நஸ்ரியா !!! மகிழ்ச்சியில் சமந்தா !! வருத்தத்தில் நஸ்ரியா !!!
கருத்துகள்
23-Nov-2016 02:30:13 பேரின்பராஜ் said : Report Abuse
என்னுடைய எண்ணமும் மேலே கொடுத்துள்ள கருத்தும் கொஞ்சம் சமமாக உள்ளது. இது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும். சூப்பர்... நன்றி !!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.