LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் 26 – 02 – 2017 முதல் 04 - 03 – 2017 வரை

ஜோதிட இமயம் அபிராமி சேகர் .எம். ஏ., (99948 11158)

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
பரணி
இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.சிலருக்கு எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் ஏற்பட்டு  பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் நல்ல மனிதர்களின் தொடர்பால் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கையில் உங்கள் திறமையால் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி இலாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள். தொழிலில் புதிய விரிவாக்க  நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். அடிக்கடி கோபப்படுவதைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா,  பொழுது போக்குதல் எனச் செலவுகளுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளுக்குச் செலுத்த  வேண்டிய கல்லூரிக் கட்டணங்களுக்கான வங்கி உதவிகளுக்கு முயற்சித்தால் தேவையான கடன் உதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். அரசாங்கத் துறையின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.
ரோகிணி
இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தன வருமானம் கூடும். வியாபாரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அரசு அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக் களிப்புத் தரும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.  புதிய முயற்சிகளால் தனவரவு அதிகரித்து எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிகரித்து மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனமும் கிடைக்கும். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்தி மயமாகக் கழியும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் இறை தரிசனத்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகளால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க தாமதம் ஏற்படும். சிலருக்கு பூமி, வீடு என அசையாச் சொத்துக்கள் சேரும்.  காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் பல சாகஸங்களை நிகழ்த்துவர். அரசுப் பணிபுரியும் பெண்கள்  முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
திருவாதிரை
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.   பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  சிலருக்கு அரசு வகைத் தொல்லைகள் ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  எறும்பையொத்த, உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளைக் கண்டு அனைவரும் பாராட்டுவர்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் தடங்கலின்றி வந்து சேரும். சினிமா, கேளிக்கை விடுதிகள் என ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது.  தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும்.
பூசம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்.  மனதுக்குப் பிடித்த மங்கையுடன் நட்பு ஏற்படும். கோடை விடுமுறையில் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அனுகூலமாய் முடியும். தொடர் முயற்சி காரணமாக, வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும்.
ஆயில்யம்
இந்த வாரம் தொலை தூரச் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் உதவியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை  எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.  சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.  சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.  ஆயினும், எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். அரசுப் பணியில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். உறவுகளால் எவ்வித  உதவியும் இருக்காது.
பூரம்
இந்த வாரம் உங்களுக்கு பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் பல ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும்  சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம். உங்கள் தேவை அறிந்து, நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும்.

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள்யாவும் வெற்றிகரமாக முடியும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின்   ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  பணிபுரியும் பெண்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். சிலருக்குப் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.  அதன் காரணமாக சுபச்செலவுகள் கூடி, அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பரிபூர்ண ஓத்துழைப்புக் கிடைக்கும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.  தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வாடிக்கையாளரிடம், நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.
சுவாதி
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும், வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட்டுக் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.  அதன் காரணமாக தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
அனுஷம்
இந்த வாரம் திருமணம் கைகூடி வரும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
கேட்டை
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு.   வியாபாரத்தில் கடின உழைப்பால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம்.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். ஏமாற்றத்தைத் தவிர்க்க வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பூராடம்
இந்த வாரம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். உயர்ந்த மனிதர்களின் நட்புக் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் உழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும்.  சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு எனும் காற்று உங்கள் பக்கம் வீசும். துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபடி, உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். வீட்டில் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளின் எதிர்பார்ப்புப்படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்.
திருவோணம்
இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நெருங்கிய உறவுகள், அன்பு நண்பர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்திற்குச் சென்று  மனம் மகிழ்வர்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பும் உற்சாகத்தைத் தரும். சிலர் கோடைக் கொண்டாட்டமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று மகிழ்வர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிலருக்கு அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்குக் கீழே பணிபுரிபவர்களைக் கட்டளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
சதயம்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க, அனுசரித்துச் செல்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம்  உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம்  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். வியாபாரிகள் நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.  
உத்திரட்டாதி
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  
ரேவதி
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான புதிய கல்லூரிக் கனவுகளில் திழைப்பர். விடுமுறைக் காலத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவர்.  அரசியல்வாதிகள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாகப் புகழ் பெறுவர்.

by Swathi   on 23 Feb 2017  0 Comments
Tags: Natchathira Palan in Tamil   Natchathiram Rasi Palan   Nakshatra Palan in Tamil 2017   நட்சத்திர வார பலன்கள்   நட்சத்திர பலன்கள்   வார நட்சத்திர பலன்கள்   27 நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 – 12 – 2017 முதல் 09 -12 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 – 12 – 2017 முதல் 09 -12 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.