LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (15 – 01 – 2017 முதல் 21 - 01 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

99948 11158

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தி குறையும் வாய்ப்பு ஏற்படலாம். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்கு இடமாற்றங்கள், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.
பரணி
இந்த வாரம் வீட்டுக்கு விஜயம் செய்யும் விருந்தினரோடு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். பெண்களால் இலாபம் ஏற்படும். தாயார் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளுவார். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். பயணத்தின் போது பொருட்கள் தொலைந்து போகாது இருக்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் கடன், செலவு என பணம் பற்றிய சிந்தனைகளே அதிகம் ஓடிக்கொண்டு இருக்கும். வியாபாரத்தில் போதுமான அளவு தனவரவு இருக்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். நல்லவர்களின் தொடர்பால் சஞ்சலங்கள் தீர வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி,  அதிக இலாபம் பெற முயல்வீர்கள். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம்  வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சி பொங்கும் தருணங்களால் புதிய உறவுகள் ஏற்படும். நண்பர்களோடு வெளிவட்டாரங்களில் சுற்றுவதால் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தினால் தனவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு  பொருள்களின் இருப்புக் கூடுவதால் வியாபாரம் அதிகரிக்கும். பக்தி சொற்பொழிவுகளைக் கேட்பதால் ஞானம் பெருகும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.
ரோகிணி
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் மனம் ஈடுபடும்.  எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம். வாலிப நெஞ்சங்கள் விருந்து, சினிமா என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர். வாக்குவன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்.  பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தரலாம். சிலருக்குக் குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பள்ளிக் கல்வியில் வெற்றி பெற்று சந்தோஷத்தில் மிதப்பீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மையும் மனமகிழ்ச்சியும் ஏற்படும். வீட்டில் பெரியோர்களின் ஆசியோடு சுபகாரியங்கள் விமரிசையாக நடக்கும். ஆடை ஆபரண சேர்க்கையால் ஆனந்தம் பெருகும். சகோதரரிடம் அன்பாய் இருங்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் மேன்மை அடையலாம்.. சிலருக்கு சுறுசுறுபற்ற நிலை காரணமாகக் காரியத் தடைகள் ஏற்படலாம். வீண் அலைச்சல்களால் செலவும் அதிகரிக்கும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் தாயின் அன்பும், அரவணைப்பும் கவலைகளை மறக்கச் செய்யும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது. பெண்கள் அதிகாலையில் எழுந்து பூஜா காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைந்து, நிம்மதியும் பெறுவர். அரசு வகை வரிப் பாக்கிகள் செலுத்துவதற்குத் தேவையான  பணவுதவிகள் கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை
இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புத்தகப் பதிப்பாளர்களுக்குத் தொழிலில் ஏற்றம் ஏற்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக  அனுகூலங்கள்  வந்து சேரும். எவ்விதக் குறைகளும் இருக்காது. சிலருக்கு உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும்.  சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் கண்டிப்பாக இருக்கும். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  தொலைதூர நல்ல செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நண்பர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். வீட்டில் பிடிவாதங்களைத் தளர்த்தினால் பிணக்குகள் தீரும். இடம் சம்பந்தமான வழக்குகள் வெற்றி பெற்று, புதிய சொத்துக்கள் சேரும்.
பூசம்
இந்த வாரம் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய கொள்முதல் மூலமாகத் தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்கள் உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்க சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாதிருக்க ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு கட்டுவதற்கான வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். உறவினர் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம். தொழிலில் புதிய நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விதமாக இடமாற்றங்கள் ஏற்படலாம்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். சிலருக்குப் பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகளால் உதவி இருக்காது. சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  ஆகியவை ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் இந்த வாரம் சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் மனதில் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும். மேலதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.  அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் சகாயங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.  அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும்.

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் ஈடேறும். கவலை வேண்டாம். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். பொது இடங்களில் தீயவர்களைக் கண்டு விலகிச் செல்வது சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். குழந்தைகளிடம் அன்பாகப் பழகவும்.
ஹஸ்தம்
இந்த வாரம் சுப காரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இன்பம் நிலைத்திருக்கும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடிவரும். காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படுவதோடு தீரச் செயல்களுக்கான விருதும் கிடைக்கலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குப் பயணத்தின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் சகாயங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் புதிய இடத்திற்குப் பணிமாற்றங்கள் ஏற்படலாம்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் வாக்கால் வருமானம் பெருகும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தனவரவு தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். பேச்சாளர்களுக்கும், புத்தக வெளியீட்டாளர்களுக்கும் தொழிலில் வெற்றியும், பாராட்டுக்களும் கிடைக்கும்.
சுவாதி
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும்.   வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். தொய்வின்றி தங்கள் பணிகளைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு நிச்சியம் இருக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். வித்தைகளில் தேர்ச்சியும் அறிவுத்திறனும் கூடும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான்  அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும். சகோதர முன்னேற்றம், காரிய சித்தி, தலைமைப் பதவி ஆகியவை ஏற்படும்..

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். அரசியலில் சிலருக்கு மாவட்டப் பொறுப்புக்கள் தேடிவரும். உயர்அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் எளிதில் பணி உயர்வு கிடைக்கும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களால் கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கலாம்
அனுஷம்
இந்த வாரம் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் போது நெருங்கிய உறவுகளின் ஒத்துழைப்பால் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமையும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய வியாபாரத் தொடர்புகளால் வருமானம் பெருகி, வாழ்க்கையும் வளமாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.
கேட்டை
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பல வழிகளில் வருமானம்  கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். தந்தை வழி உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும். முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பூராடம்
இந்த வாரம் மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த அளவுக்கு மேல் உயர்வுகள் இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும்.  குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்.தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்
திருவோணம்
இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளின் தயவால் தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  பெரியோர்களின் ஆசியால் உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.  நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு அனைத்து சுக சௌகரியங்களும் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்.  புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். கல்வியைப் பொருத்தவரை பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  
சதயம்
இந்த வாரம் உங்கள் திறமைமிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். வீண்செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்கு சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம்  பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தங்கள் மனதிற்குப் பிடித்தபடி அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்தும் உயரும்.  பால்வளம் பெருகுவதால் ஆதயமும் பெருகும். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு   களிப்படைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள்  நடந்து முடியும். அதிகப்படியான வருமானங்கள் கிடைக்கும். உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆயினும்,  எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் முழுமையான ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும்.
ரேவதி
இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.   மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். பழைய புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி புதிய வேகம் பிறக்கும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும்.

by Swathi   on 11 Jan 2017  0 Comments
Tags: 27 Star Palangal   27 Nakshatra Palangal   Rasi Palangal   ராசி பலன்கள்   வார ராசி பலன்கள்   இந்த வார ராசி பலன்கள்     
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.