LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (05 – 03 – 2017 முதல் 11 – 03 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158                                                       


மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி 

இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். அரசுப் பணியாளர்களுக்கு மனதுக்குப் பிடித்த, புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து கௌரவம் உயரும்.  புதிய திட்டங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழிலில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள்.   

பரணி 

இந்த வாரம் சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்.

கார்த்திகை  1 ஆம் பாதம்

இந்த வாரம் உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. எனவே, கஷ்டங்கள் வந்தாலும் கலங்காதீர்கள்.


ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்.

ரோகிணி 

இந்த வாரம் கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்காலத் தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்

இந்த வாரம் சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள்.


மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்

இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். அரசுவகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலரின் உடல் நலிவுறும்.

திருவாதிரை

இந்த வாரம் சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள்.எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும்.சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதி நிலவும். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை எடுத்தல் அவசியம்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

இந்த வாரம் பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். வீண் அலைச்சல்கள் ஏற்படும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்

இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். தந்தைவழி உறவுகள் உதவி செய்வார்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும்.  வியாபாரிகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

பூசம்

இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தைகளால் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு வேறு இடத்துக்கு அல்லது பணிக்கு மாற முற்படுவர்.

ஆயில்யம் 

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சீரான பொருளாதார நிலையால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும். மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் கருத்துடன் படித்துப் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கவேண்டும். எந்தவொரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். சிலர் அரசுப் பணிக்கான  உத்தரவைப் பெறுவர். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாக்க் கிடைக்கும்.


சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்

இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும்.. மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

பூரம் 

இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.   சினத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துச் செல்வது நல்லது. தொழில் புரிபவர்களுக்கு ஏற்றமான காலம் ஆகும்.

உத்திரம்- 1 பாதம்

இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கற்பனை வளம் பெருகும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள்.  இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாது.  தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை,  ஏற்படும்.


கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்

இந்த வாரம் உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  அவர்களுக்கு தற்காலிகமாக இருந்த பணி நிரந்தரமாகும்.

ஹஸ்தம் 

இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள்.

சித்திரை – 1,2 பாதங்கள்

இந்த வாரம் தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். வாக்கு வன்மை ஓங்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் 

இந்த வாரம் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவர். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத் தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்..

சுவாதி 

இந்த வாரம் அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.  தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்.


விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். சந்ததி விருத்தி ஏற்படலாம்.

அனுஷம்

இந்த வாரம் திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

கேட்டை

இந்த வாரம் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும்.


தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்

இந்த வாரம் மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.  புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும்.

பூராடம்

இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்

உத்திராடம் –1 ஆம் பாதம்

இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்.


மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் 

இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.   எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்.  ஆயினும் முயற்சிகள் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். சிலருக்கு உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.

திருவோணம்

இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் 

இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். 


கும்பம்

(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். நண்பர்களும் பகைவர்களாவர். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு..

சதயம்

இந்த வாரம் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம்.


மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். . பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். வீண்செலவுகளைக் குறைத்து பணத்தை சேமித்து வைப்பது நல்லது. உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.  எதிர்பாராத தனவரவும் உண்டு.

உத்திரட்டாதி

இந்த வாரம் வாகன வசதிகள் மேம்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

ரேவதி

இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பெண்களுக்கு தற்போது உள்ள வேலையைக் காட்டிலும் நல்ல வேலை கிடைக்கும்.  எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள்.   

by Swathi   on 04 Mar 2017  1 Comments
Tags: Rasi Palangal   Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   27 நட்சத்திர பலன்கள்        
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
04-Mar-2017 12:14:44 Premnath said : Report Abuse
How can I contact u sir
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.