LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

27 நட்சத்திரக் கோயில்கள் !

  இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் தான் பிறக்கிறார்கள். அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர் அவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலில் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் சென்று பூஜை செய்து வழிபடுவதும் நன்மை தரும். அந்த இரண்டு கோயில்களில் ஒன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் என்றும் அல்லது படம் பக்க நாதர் என்றும் அழைக்கப்படும் சிவன் கோவில் ஆகும். இது இந்து மதத்தில் வேத சாத்திர  முறைப்படி கட்டப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயிலாகும்.


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள், இறைவன் பெயர், கோயில் இருக்கும் ஊர் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 

 

நட்சத்திரங்கள்           இறைவன் இறைவி பெயர்              கோயில் இருக்கும் ஊர்    
அஸ்வினி  ஸ்ரீபவ ஔஸத ஈஸ்வரர் கோயில்   திருத்துறைப்பூண்டி
 
பரணி   ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில்  நல்லாடை மயிலாடுதுறை அருகில் 
 
கிருத்திகை  ஸ்ரீ காற்ற சுந்தரீஸ்வரர் கோயில்  கஞ்சனகரம் மயிலாடுதுறை அருகில் 
 
ரோகிணி  ஸ்ரீ பாண்டவ தூத கிருஷ்ணப்பெருமாள் கோயில்   காஞ்சிபுரம் 
 
மிருகசீரிஷம்  ஸ்ரீ ஆதி நாராயணர் கோயில்    என்கண் கொறடாச் சேரி தஞ்சாவூர் மாவட்டம் 
 
திருவாதிரை   ஸ்ரீ அபய வரதீஸ்வரர் கோயில்   அதிராம்பட்டினம் புதுக்கோட்டை 
 
புனர்பூசம்   ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயில்     வாணியம்பாடி வேலூர் மாவட்டம் 
 
பூசம்   ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் கோயில்    விளாங்குளம்  தஞ்சாவூர் மாவட்டம் 
 
ஆயில்யம்    ஸ்ரீ கற்கடகேஸ்வரர் கோயில் (நண்டான்கோயில்)  திருந்துதேவன்குடி கும்பகோணம் 
 
மகம்    ஸ்ரீ மகாலிங்கசுவாமி கோயில்  தவசிமடை திண்டுக்கல் 
 
பூரம்   ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்  திருவரங்குளம் பட்டுக்கோட்டை 
 
உத்திரம்   ஸ்ரீ மாங்கலேஸ்வரர்    கோயில்   இடையாற்று மங்கலம் திருச்சி மாவட்டம் 
 
ஹஸ்தம்    ஸ்ரீ கிருபகூபரேஸ்வரர் கோயில்    கோமல் கும்பகோணம் 
 
சித்திரை  ஸ்ரீ சித்ர ரத வல்லப பெருமாள் கோயில்  குருவித்துறை சோழவந்தான் மதுரை 
 
சுவாதி     ஸ்ரீ பிரசன்ன குந்தளாம்பிகை தந்த்ரீஸ்வரர்
 
                    மற்றும் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில்   சித்துக்காடு பூந்தமல்லி அருகில்
 
விசாகம்     ஸ்ரீ முருகன் கோயில்     திருமலை  தென்காசி  அருகில் நெல்லை மாவட்டம் 
 
அனுஷம்   ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர் கோயில்   திருநின்றியூர் மயிலாடுதுறை அருகில்  
 
கேட்டை  ஸ்ரீ வரதராஜர் கோயில்   பசுபதி கோயில் தஞ்சாவூர் மாவட்டம்
 
மூலம்   ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில்  மப்பேடு தக்கோலம் அரக்கோணம் அருகில் 
 
பூராடம்  ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில்   கடுவெளி தஞ்சாவூர் மாவட்டம் 
 
உத்திராடம்   ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் கீழப்பூங்குடி மேலூர் அருகில்
 
திருவோணம்   ஸ்ரீ அலர்மேல்மங்கை உடனுறை 
 
                பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்  திருப்பாற்கடல் காவேரிப்பாக்கம்
 
அவிட்டம்       ஸ்ரீ புஷ்பவல்லி உடனுறை பிரம்ம 
 
                       ஞான புரீஸ்வரர் கோயில்     கொருக்கை கும்பகோணம் 
 
சதயம்    ஸ்ரீ கருந்தார்குழலி உடனுறை 
 
                        அக்னீஸ்வரர் கோயில்      திருப்புகலூர் நன்னிலம் அருகில் 
 
பூரட்டாதி    ஸ்ரீ காமாட்சி உடனுறை 
 
                            அக்னீஸ்வரர் கோயில்     திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் மாவட்டம்
 
உத்திரட்டாதி   ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் கோயில்    தீயத்தூர்  புதுக்கோட்டை மாவட்டம் 
 
ரேவதி ஸ்ரீ கருணாகரவல்லி உடனுறை 
 
 ஸ்ரீ கைலாசநாதர் கோயில்   காருக்குடி தாத்தய்யங்கர்பேட்டை
 

இக்கோயில்களில்  இருக்கும் தெய்வங்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குவதன் மூலம் அவரவருடைய நட்சத்திர தெய்வங்களின் கருணைப்பார்வையைப்  பெற்று வாழ்வில் முன்னேறலாம், சிறப்படையலாம்.
 
by Swathi   on 24 Apr 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
01-Feb-2017 19:49:21 chokkalingam said : Report Abuse
Nice
 
18-Jun-2016 18:32:23 k.prabaharan said : Report Abuse
iya thangal thogupu migavom sirapaga ullathu melum nalla thangum vasathi konda tharamana matrum kurintha vadakil ulla thangum loadge hotel viparangali pathividunga
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.