இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தேவலோக மங்கை ரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி
சபிக்கப்பட்டாள்.அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில்
இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில்
சிலை வடிவில் உள்ளது.மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும்
பார்க்கலாம். இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான்.
இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர் என்றும் அழைக்கப்பட்டது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவலோக மங்கை ரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி சபிக்கப்பட்டாள். அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள்.
பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில் சிலை வடிவில் உள்ளது. மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும் பார்க்கலாம். இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர் என்றும் அழைக்கப்பட்டது. |