LOGO

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu pasupatheeswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் - 614 206. தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   பசுபதிகோயில்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 614 206
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் 
இதுவும் ஒன்று. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், 
தெட்சிணாமூர்த்தி, நேர்பின் புறத்தில் திருமால் பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இவ்வூர்க்கு அருகில் உள்ள 
புள்ளமங்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலும், தாழமங்கையில் சந்திரமௌலீஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்குள்ள துர்க்கை மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் 
சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் 
முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க, இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து 
இரத்த பலி தருவது போலவும் காட்சிதருகிறார். தரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் 
அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம்  இக்கோலம் இக்கோயிலுக்கே தனிச் சிறப்பைத் தருவதாகும். 

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன. கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், தெட்சிணாமூர்த்தி, நேர்பின் புறத்தில் திருமால் பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

காவிரியால் பேரழிவும் பராந்தக சோழன் திருப்பணியும்: காவிரியிலும், அதன் உப நதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டாவை வெள்ளம் அச்சுறுத்துகிறது. அவைகள் இல்லாத காலத்தில் காவிரி வெள்ளம் புயலால் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. காவிரி வெள்ளத்திற்கு பலியாகி சுவடழிந்து போன கிராமங்கள் இப்பகுதியில் ஏராளம்.

இப்படி காவிரி வெள்ளத்திற்கு இப்பகுதி பலியான தகவல்களை இவ்வூருக்கு கிழக்கில் உள்ள திருச்சக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. இவ்வூருக்கு வடக்கிலுள்ள திருப்புள்ளமங்கை சிவாலயத்தைக் கட்டிய, முதற்பராந்தக சோழன் பசுபதீச்சரத்தையும் திருப்பணி செய்துள்ளான்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    காலபைரவர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    ஐயப்பன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    அம்மன் கோயில்     மற்ற கோயில்கள்
    குலதெய்வம் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     விநாயகர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அய்யனார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சேக்கிழார் கோயில்     திவ்ய தேசம்
    சுக்ரீவர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்