LOGO

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu vamanapureeswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி - 607 401. கடலூர் மாவட்டம்.
  ஊர்   திருமாணிக்குழி
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 607 401
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு.மூன்று பிரகாரங்களுடன் ஐந்து நிலை 
ராஜகோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.உள்பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், 
பஞ்சமூர்த்திகள், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரிய, சந்திரன் சன்னதிகள் உள்ளது. திரிசங்கு மகாராஜா, 
அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது. தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை 
நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது.கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக 
இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது "உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். 
எனவே இறைவனுக்கு "உதவிநாயகன்', அம்மனுக்கு "உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத 
நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர்.பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது 
சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில்இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு 
திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. மூன்று பிரகாரங்களுடன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. உள்பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், பஞ்சமூர்த்திகள், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரிய, சந்திரன் சன்னதிகள் உள்ளது. திரிசங்கு மகாராஜா, 
அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக்கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.

தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக 
இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது "உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். எனவே இறைவனுக்கு "உதவிநாயகன்', அம்மனுக்கு "உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு.

மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர். பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது 
சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில்இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    சூரியனார் கோயில்     சித்தர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்
    சுக்ரீவர் கோயில்     அய்யனார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பிரம்மன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    பட்டினத்தார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     திவ்ய தேசம்
    அறுபடைவீடு     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்