LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை வரும் அக்டோபர் மாதம் ரொம்ப விசேசமான மாதம் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த மாதத்தில் மட்டும் சுமார் 30 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. 


இந்த ஆண்டில் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 50 படங்களுக்கும் மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஐ, கத்தி, பூஜை ஆகிய மெகா படங்களால் நவம்பர் மாதம் ஒரு சில வாரங்களுக்கு எந்தப் படமும் வெளியாகாத சூழ்நிலை உருவாகலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த மூன்று படங்களுமே பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும் என்பதால்தான் பல படங்களை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.


அதனால் தான் அக்டோபர் மாதத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாம். இன்னும் சில நாட்களில் ஜீவா, துளசி நடித்துள்ள 'யான்' படம்தான் அடுத்த பெரிய படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து “உத்தம வில்லன், காவியத் தலைவன், அனேகன், மீகாமன், வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், தெரியாம உன்னை காதலிச்சிட்டேன், சுற்றுலா, அர்ஜுனன் காதலி, குபீர், சோக்கு சுந்தரம், நான் பொன்னொன்று கண்டேன், ஜமாய், வருச நாடு, யாவும் வசப்படும், ஆ, அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2, கப்பல், நம்பியார், மகாபலிபுரம்,” என வெளியாக உள்ள படங்களைப் பற்றிய ஒரு நீளமான பட்டியல் உள்ளது. இவற்றில் சில படங்கள் அக்டோபர் மாதத்தில் வராமலும் போகலாம், இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு சில படங்கள் வந்தாலும் வரலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

by Swathi   on 29 Sep 2014  0 Comments
Tags: October Release Movie   2014 October Release   Kaththi   I   Poojai      கத்தி  
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
எந்திரனை முந்திய ஐ வசூல் .... எந்திரனை முந்திய ஐ வசூல் ....
200 கோடியை நெருங்கும் ஐ.... 200 கோடியை நெருங்கும் ஐ....
குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !! குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!
ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்.... ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்....
பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !! பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !!
தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி.... தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.