LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!

வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. ஏனென்றால், அன்றைய தினம் மட்டும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு கொண்ட நான்கு படங்கள் வெளியாகிறது.

நண்பேன்டா

உதயநிதி ஸ்டாலின், சந்தானம், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நண்பேன்டா. யு சான்றிதழை பெற்ற இந்த படம் வரும் ஏப்ரல் 2 -ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

கொம்பன்

குட்டிப்புலி படப் புகழ் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க இவர்களுடன் ராஜ்கிரண், கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருந்த கொம்பன் படம் ஒரு சில காரணங்களால் ஏப்ரல் 2-ஆம் தேதியில் ரிலீசாகிறதாம்.

பூலோகம்

ஒரு குத்துச் சண்டை வீரனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவியும், திரிஷாவும் நடித்துள்ளார்கள். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்த படமும், ஏப்ரல் 2 -ஆம் தேதி ரிலீசாகிறது.

சகாப்தம்

நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'சகாப்தம்'. நாயகிகளாக 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நேகாவும், 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகம் ஆகிறார்கள். அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கி உள்ள இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள் இந்த படமும், ஏப்ரல் 2 -ஆம் தேதி ரிலீசாகிறது.

ஆக ஏப்ரல் 2 - ல் களம் இறங்கும் இந்த நான்கு படங்களில் எந்தப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி வாகை சூடப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  

by Swathi   on 17 Mar 2015  0 Comments
Tags: Nanbenda   Bhooloham   Sagaptham   Komban   நண்பேண்டா   பூலோகம்   சகாப்தம்  
 தொடர்புடையவை-Related Articles
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.