LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

பூண்டின் 40 வகையான மருத்துவ பயன்கள் !!

பூண்டு தாவரம் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன.

 

பூண்டுகளில் ஓராண்டுத் தாவரங்கள், ஈராண்டுத் தாவரங்கள், பல்லாண்டுத் தாவரங்கள் என்னும் வகைகள் இருக்கின்றன. 

 

ஓராண்டுத் தாவர வகையைச் சேர்ந்த பூண்டுகள், ஓராண்டுக்குள் அவற்றின் வளரும் காலம் முடிவடைந்ததும் முற்றாகவே அழிந்து விடுகின்றன. 

 

ஈராண்டுத் தாவர வகைப் பூண்டுகளில், முதல் ஆண்டுப் பருவகால முடிவில் இலைகளும், தண்டுகளும் அழிந்தாலும், நிலத்துக்குக் கீழ் வேர்கள், கிழங்குகள் போன்ற பகுதிகள் உயிருடன் இருக்கின்றன. அடுத்த பருவகாலத்தில் அவற்றில் இருந்து தண்டுகளும் இலைகளும் வளர்ந்து பூத்து, வித்துக்களை உருவாக்கியபின் இறந்துவிடுகின்றன. 

 

பல்லாண்டுப் பூண்டுகளில், நிலத்தின் கீழுள்ள சில பகுதிகள் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஒவ்வொரு பருவகாலத்திலும் புதிதாகத் தண்டுகளும், இலைகளும் உருவாகின்றன. 

 

பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது. அடுத்ததாக பூண்டின் பயன்கள் குறித்து பார்ப்போமா......

 

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம். 

 

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.

 

கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேண்டும்.

 

பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

 

பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.

 

பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாப்பிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.

 

பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும். இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

 

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும். 

 

பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

 

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.

 

பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

 

பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

 

பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

 

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

 

வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். 

 

பூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.

 

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும். 

 

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

 

வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.

 

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.

 

பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.

 

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

 

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

 

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

 

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில் பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

 

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

 

அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

 

பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

 

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

 

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.

 

பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

 

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

 

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

 

பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

 

பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.

 

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும். 

 

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

by Swathi   on 04 Feb 2014  27 Comments
Tags: Garlic   Poondu   Garlic Benefits   பூண்டு   பூண்டின் பயன்கள்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
மிளகு - பூண்டுக் குழம்பு மிளகு - பூண்டுக் குழம்பு
பூண்டுக் குழம்பு பூண்டுக் குழம்பு
ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !! ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !!
பூண்டின் 40 வகையான மருத்துவ பயன்கள் !! பூண்டின் 40 வகையான மருத்துவ பயன்கள் !!
கருத்துகள்
09-Nov-2018 10:08:31 karthik said : Report Abuse
Kalaiyil verum vayirtril poondu kuda sudu thanni vachu kudikalama?
 
11-Mar-2018 05:59:50 Saraswathi said : Report Abuse
Cancer ah cure pannuma? Pannuma na athan eppadi use pannanum nu sollunga plz
 
11-Mar-2018 05:58:56 Saraswathi said : Report Abuse
Cancer ah cure pannuma? Pannuma na athan eppadi use pannanum nu sollunga plz
 
02-Jan-2018 04:37:35 குண செல்வி said : Report Abuse
கர்ப்பிணிப் பெண்கள் பூண்டு சாப்பிடலாமா?
 
12-Sep-2017 07:15:38 Rama Murugesan said : Report Abuse
Thanks for your tips
 
26-Jul-2017 18:02:12 abdul said : Report Abuse
இரவி உண்ணலாமா பூண்டை
 
15-Jul-2017 11:33:24 ரேகா said : Report Abuse
பூண்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.பூண்டில் இவ்வளவு மருத்துவம் உள்ளது என்று இப்பொழுது படித்து தெரிந்து கொண்டேன்.மருத்துவ பயணிகளுக்கு நன்றி.
 
07-Jul-2017 05:47:08 Babu said : Report Abuse
முடி வளரத்துக்கு பூண்டு யூஸ் பண்டலாமா முடி கொண்டன எடத்துல
 
23-Jun-2017 06:25:31 சு. வாசுதேவன் said : Report Abuse
மிகவும் நல்ல தகவல். இந்த மருத்துவம் அழியாமல் இருக்கவேண்டும்.
 
11-Jun-2017 05:48:24 Gayathri said : Report Abuse
பூண்டின் மருத்துவ குணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தகவலுக்கு மிகவும் நன்றி.
 
23-May-2017 05:19:53 சுதாகர் said : Report Abuse
Enaku thalai mudi kotti valukkai vara mari இருக்கு... so pls idhuku oru solution sollunga
 
26-Dec-2016 23:35:15 mohan said : Report Abuse
Super
 
13-Dec-2016 00:03:16 kabir said : Report Abuse
Eating one clove of raw garlic daily is good or bad
 
21-Nov-2016 03:27:29 MUTHAMILELAKKIYA .M said : Report Abuse
வெள்ளைப்படுதல் குணமாக வலி சொல்லுங்கள்.
 
14-Nov-2016 03:33:57 ibrahim said : Report Abuse
வனக்கம் அடிகடி தலவலி வருது டென்சன் அதிகம இருக்கு தூக்கம் வரல இதுக்கு மருந்து செல்லுங்க pl
 
06-Nov-2016 23:40:33 பெ.கதிரேசன் said : Report Abuse
பூண்டில் மருத்துவம் நிறைய உள்ளது! இரவு தூக்கும் போது பூண்டை வெட்டி இரு காதிலும் வைத்து தூங்க... தலைவலி,காதுவலி, குளிர் போன்றவை நீங்க பெரிதும் உதவுகிறது... இயற்கை வழங்கிய சிறந்த மருத்துவம் பூண்டு.
 
09-Oct-2016 12:27:27 Ramalingam TR said : Report Abuse
நான் பூண்டு சுட்டு சாப்பிடுவேன். என்னே டேஸ்ட்டு..
 
18-Apr-2016 02:02:45 விஸ்வசந்தோஷ் said : Report Abuse
கால் ஆணி குணமடைய ஒரு நல்ல மருத்துவம் சொல்லுங்கள்
 
22-Feb-2016 06:52:15 sasikumar said : Report Abuse
Ways and means to reduce blood pressure. And diet pattern to be followed.
 
04-Oct-2015 03:56:09 vignesh said : Report Abuse
i லைக் it
 
03-Aug-2015 08:57:02 அழகிரி said : Report Abuse
ஒருநாளைக்கு எந்தனை பூண்டு சாப்பிட்டா 40 நாட்களில் சரியாகும் வாவு தொல்லை ??????????
 
29-Jul-2015 08:49:32 Haris said : Report Abuse
பூண்டு மூட்டை ஒன்னு வாங்கி போட்டுட்டேன்
 
07-May-2015 08:12:25 ரபிக்குல்கான் said : Report Abuse
டாக்டரே தேவையில்ல
 
29-Jan-2015 09:40:22 R.sundaramoorthi said : Report Abuse
memari power
 
09-Jan-2015 05:48:38 sethuram said : Report Abuse

கலக்குறீக போங்க

 
01-Dec-2014 03:26:34 அம்ஜத் கான் said : Report Abuse
கிரேட் இன் நடுமருதுவம்
 
03-Sep-2014 05:06:21 Vijayalakshmi said : Report Abuse
வெரி usefulinformation
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.