LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை மற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர், மிசோரம், ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, 

 

தேர்தல் தேதி :

 

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்(90 உறுப்பினர்கள்) - நவம்பர் 11 மற்றும் 19 தேதி

 

மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல் (230 உறுப்பினர்கள்) - நவம்பர் 25 தேதி

 

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்(200 உறுப்பினர்கள்) - டிசம்பர் 1 ந்தேதி

 

டெல்லி சட்டசபை தேர்தல் (70 உறுப்பினர்கள்) - டிசம்பர் 4 ந்தேதி

 

மிசோரம் சட்டசபை தேர்தல் (40 உறுப்பினர்கள்) - டிசம்பர் 4 ந்தேதி

 

தமிழகத்தின் ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும், குஜராத்தில், ஒரு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் - டிசம்பர் 4 ந்தேதி

 

தேர்தல் முடிவுகள் :

 

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே, முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

தேர்தல் செலவு கணக்குகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். 

 

சமீபத்திய உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும், தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதற்கான, பொத்தான், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின், மேல் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. 

 

தேர்தலின் சில முக்கிய அம்சங்கள் :

 

ஐந்து மாநிலங்களிலும், 11.3 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதனால், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையிலான, இலவச மற்றும் சலுகை அறிவிப்புகளை வெளியிடக் கூடாது.

 

தேர்தலில், பண பலத்தை தடுக்கும் வகையில், வங்கிகளில், சந்தேகத்திற்கிடமான முறைகளில் நடக்கும், பணப் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும். 

 

தேர்தல்களின்போது வாக்குபதிவு சதவீதம் குறைந்தால், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும்.

 

முதல் முறையாக, வாக்காளர்களுக்கு, வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

by Swathi   on 04 Oct 2013  0 Comments
Tags: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்   ஏற்காடு தொகுதி இடை தேர்தல்   5 State Assembly              
 தொடர்புடையவை-Related Articles
ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை மற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை மற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.