LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

ஐந்து மாநிலத் தேர்தல்களில் தேர்வான 690 எம்.எல்.ஏ. க்களில் 252 பேர் (35 சதவீதம் ) குற்றப்பின்னணி உடையவர்கள்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தேர்வான 690 எம்.எல்.ஏ. க்களில் 252 பேர் (35 சதவீதம் ) குற்றப்பின்னணி உடையவர்கள்

   

     சமீபத்தில் உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து  மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்தது. இதில்  தேர்வு செய்யப்பட்டுள்ள 690 எம்.எல்.ஏ.,க்களில் 252 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். இது 35 சதவீதம் ஆகும்.  இதே போல, தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 66 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். மொத்தம் 457 பேர், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்டவர்கள். தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு இதே மாநிலங்களில் தேர்தல் நடந்த போது, 27 சதவீதம் பேர் தான், அதாவது 190 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். இதே போல, அப்போதைய தேர்தலில் 34 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் அதாவது, 235 பேர் தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். உ.பி., நிலவரம்:உத்தர பிரதேசத்தில் புதிதாகத் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 189 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். கடந்த தேர்தலில், 140 பேர் மீது மட்டும் கிரிமினல் வழக்குகள் இருந்தன. இம்மாநிலத்தில் தற்போது 271 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர்கள். ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில், பிகாபூர் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மித்ர சென் என்பவர் மீது, 36 கிரிமினல்வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில், சுவார் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள நவாப் காசிம்

     அலிகானுக்கு 56.89 கோடி ரூபாய் சொத்து உள்ளது. முபாரக்பூர் தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, ஷா ஆலம் என்பவருக்கு 54.44 கோடி ரூபாய் சொத்து உள்ளது. மணிப்பூர்: மணிப்பூரில் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. கடந்த தேர்தலின் போது ஒருவர் மட்டுமே கோடீஸ்வரராக இருந்தார். ஆனால், இந்த முறை 16 கோடீஸ்வரர்கள் தேர்வாகியுள்ளனர். பஞ்சாப்: பஞ்சாபில் 22 பேர் கிரிமினல் பின்னணியுடன் தேர்வாகியுள்ளனர். கடந்த முறை 21 பேர் மட்டுமே கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 86 சதவீதம் பேர் (117 பேர்) கோடீஸ்வரர்கள் தான். கடந்த தேர்தலில் 66 சதவீதமாக இருந்த (77 பேர்) கோடீஸ்வரர்கள் இந்த முறை அதிகரித்துள்ளனர்.கோவா: கோவாவில் 37 கோடீஸ்வரர்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகியுள்ளனர். 12 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.கடந்த தேர்தலில் தேர்வானவர்களில் ஒன்பது பேர் மட்டுமே குற்றப் பின்னணியுடன் இருந்தனர். உத்தரகண்ட்: உத்தரகண்டில் தேர்வாகியுள்ள சட்டசபை உறுப்பினர்களில் 19 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள்; 32 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த தேர்தலின் போது, 17 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர்; 12 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

by uma   on 06 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.