LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !!

இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் என ஹெல்ப் ஏஜ் இந்தியா (Helpage India) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. 


வருடம் தோறும், ஜூன் மாதம் 15ஆ-ம் தேதி உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


இதனை முன்னிட்டு கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக கடந்த சனிக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இந்த பேரணியை, கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். 


முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டுகளாக நாட்டிலுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.


12 மாநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வு :


இந்த ஆண்டு நாட்டிலுள்ள டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம்.


அதில் 50 சதவீதமான முதியவர்கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 


இதில் ஆண்கள் 38 சதவீதமும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.


பெங்களூர் தான் முதலிடம் :


இந்தியாவிலேயே பெங்களூருவில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டில்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.


இதில் 77 சதவீதம் அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். 


நாட்டில் 61 சதவீதம் முதியவர்கள் தங்களுடைய மருமகளாலும், 59 சதவீத பெற்றோர் தங்களுடைய மகனாலும் அவமதிக்கப் படுகின்றனர். பெங்களூரை பொறுத்த வரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமகளாலும் அவமதிக்கப் படுகின்றனர்.


ஆண்டுதோறும் முதியவர்களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள் என்றார்கள்.


வேண்டும் துரித நடவடிக்கை :


முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான வர்களிடம் இல்லாததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மைய்யங்கள் திறக்கப்பட வேண்டும் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி

by Swathi   on 19 Jun 2014  0 Comments
Tags: Muthiyavarkal   Old Citizens   Old Citizens India   Help Age India   ஹெல்ப் ஏஜ் இந்தியா   முதியவர்கள்   முதியோர்  
 தொடர்புடையவை-Related Articles
50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !! 50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.