LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி விருதுகள் விவரம் பின்வருமாறு.

சிறந்த தமிழ் திரைப்படம் :

அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிறந்த துணை நடிகர் :

'ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிறந்த பாடல் ஆசிரியர் :

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படத்தொகுப்பாளர் :

'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் :

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பாடகி :

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

பிரைட் ஆஃப் தமிழ் சினிமா :

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும்  பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் :

கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார்.

சிறந்த நடிகை :

'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் :

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த படம் :

மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத்  தேர்வு செய்யப்பட்டுள்ளது

by Swathi   on 24 Mar 2015  0 Comments
Tags: தேசிய விருதுகள்   தமிழ் சினிமா   காக்கா முட்டை   குற்றம் கடிதல்   பாபி சிம்ஹா        
 தொடர்புடையவை-Related Articles
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி.... தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....
தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா.... தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....
காக்கா முட்டை திரை விமர்சனம் !! காக்கா முட்டை திரை விமர்சனம் !!
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க... சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.