LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

டோனிக்கு 16–வது இடம் சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் போர்ப்ஸ் பத்திரிகை தகவல்

டோனிக்கு 16–வது இடம் சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் போர்ப்ஸ் பத்திரிகை தகவல்
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆண்டுக்கு 3.15 கோடி டாலர் (சுமார் ரூ.180 கோடி) வருமானம் ஈட்டி வருகிறார். இதன் அடிப்படையில் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அவர் 16–வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
100 விளையாட்டு வீரர்கள்
வணிக பத்திரிகை அமெரிக்காவின் போர்ப்ஸ் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் அதிக வருமானம் ஈட்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை அவ்வப்போது தயாரித்து வெளியிட்டு வருகிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களை தற்போது இந்த பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. பரிசுப் பணம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்பதை வெளியிட்டுள்ள இப்பத்திரிகை, 2012–ல் டோனி 31–வது இடத்தில் இருந்தார் என்றும், தற்போது 15 இடங்கள் முன்னேறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
37 வயதான டைகர் உட்ஸ் (கோல்ஃப்) போர்ப்ஸ் பட்டியலில் 7.81 கோடி டாலர் (ரூ.445 கோடி) வருமானத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளார். டென்னிஸ் ஸ்டார் ரோஜர் பெடரர் 7.15 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க கூடைப் பந்தாட்ட வீரர் கோபி பிரயன்ட் 6.19 கோடி டாலர் சம்பாத்தியத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
2012–ஆம் ஆண்டில் பெடரர் முதலிடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரிய ஷரபோவா
போர்ப்ஸின் 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மூன்று வீராங்கனைகள்தான் இடம் பெற்றுள்ளனர். டென்னிஸ் ராணி மரிய ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ், சீனாவின் லீ நா ஆகியோரே அந்த மூன்று பிரபலங்களாவர். மரிய ஷரபோவாவின் வருமானம் தற்போது 2.90 கோடி டாலராக உள்ளது. இதன்படி இவர் 22–வது இடத்தில் உள்ளார். செரீனா பரிசுப் பணம் உள்பட 2.05 கோடி டாலர் வருமானத்துடன் 68–வது இடத்தை பிடித்துள்ளார். லீ நா 1.82 கோடி டாலர் வருவாயுடன் இந்த பட்டியலில் 85–வது இடத்தில் உள்ளார்.

by Swathi   on 08 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !! ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !!
7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !! 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!
பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !! பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!
அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !! அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !!
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !! டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !!
உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !! உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !!
இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !! இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.