LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

நிலவின் ஒளியில்…

 

இருள் கவ்விய இரவில்

உடலை வருத்தி

நடுக்கும் குளிரில்

நிலமகளைக் காக்க

நீராடை போர்த்தி

சலனமற்று அமைதியாக 

உறங்கும் சிற்றோடை


மேற்குக் கரையில் 

கரையும் காகமும்

இக்கரை விடுத்து

அக்கறை தேடி

அக்கரை போய்விட

மேகத்தோடு

கேசத்தைத் தாலாட்டி

சோகத்தைச் சொல்லி

தாகத்தை மறைத்து

தாபத்தை தன்னுள் புதைத்து

தன் நிழல் தாங்க

துணை தேடி தனிமையில்

நிற்கும் நாவல் மரம்


வானத்தை அளந்த

களைப்பில்

தலைவன் தூங்கத்

தலைதூக்கிப் பார்த்து 

மலைமேல் தாவி

காற்றை ஏணியாக்கி

வானத்தில் ஏறிட


நின்றிருந்த மரத்தின் 

நிழலுடை விலகி

நீரினில் மிதந்து

நீச்சல் அடித்திடும்

சிற்றாடை கண்டு

சிற்றோடை சிலிர்த்து

சிக்கிய நிழலோடு

சில்மிஷம் செய்திட

மாலை வேலையில்

சோலை மலர்களின்

அழகில் மயங்கி

தன்னழகு காண

கண்ணாடி தேடி

சலனமற்ற ஓடையில்

நிலவோ முகம் பார்க்க


நாவல் மரமோ

நிலவோடு பொறாமை கொண்டு

காற்றிடம் தூதனுப்பி

தென்றலை அழைத்து வர

நிலையான நீரில் 

அலைகள் கிளம்பிடச்

சிலையாய்த் தெரிந்த

கலையான நிலவு முகம்

வளைந்து நெளிந்து 

கலைந்து தெரிய

அசைந்த மரமும்

இசைக்கு இணங்கி

நர்த்தனம் ஆடியது..!!!!



நிலவின் ஒளியில்…



வாஞ்சி கோவிந்த் கேட்டி, டெக்ஸாஸ்

by Swathi   on 08 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன் நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.