LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

நல்ல தமிழில் எழுதுவோம்

இரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடரும்ஆரூர் பாஸ்கர் ,அமெரிக்கா (aarurbass@gmail.com)

 

தமிழில் ஒற்றெழுத்துகள் மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டாகும் என்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்தக் கட்டுரையின் இறுதியில்  “உடல் நலம்பெற நாட்டு மருந்து கடை(ப்)பிடிக்கவேண்டுமா? இல்லை நாட்டு மருந்து(க்)கடை பிடிக்கவேண்டுமா ? “ கொஞ்சம் யோசிக்கவும் என்றும் கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்றாலும் அந்தக் கேள்வியில் இருக்கும் நுட்பத்தை வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். அதாவது, மருந்து(க்)கடை – மருந்து விற்கும் இடம். மருந்து கடை- மருந்தைக் கடை ( ஏவல்) – கடை பிடி – கடையைப் பிடி (வாடகைக்கு)- கடைப்பிடி- பின்பற்று.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் தமிழின் சிறப்பம்சமான இரட்டைக் கிளவி மற்றும் அடுக்குத்தொடரில் ஒற்றெழுத்து பயன்பாடு பற்றி பார்ப்போம்.  இரட்டைக் கிளவி என்றதும் பலருக்கு “சலசல சலசல இரட்டைக்கிளவி, தகதக தகதக இரட்டைக்கிளவி“ எனும் ஜீன்ஸ் படப்பாடல் நினைவில் வந்திருக்கலாம். அந்தப் பாடலினுடாகவே சலசல, தகதக, பளபள என்பது போன்ற இரண்டாக சேர்ந்து வரும் இரட்டைக் கிளவிச் சொற்களைத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை என்பதைக் கவிஞர் வைரமுத்து சொல்லி இருப்பார். அந்த இரட்டைக் கிளவி சொற்களுக்கு இடையே ஒற்றெழுத்து மிகாது என்பது விதி.

அதுபோல, இரட்டைக் கிளவியைப் பற்றிப் பேசும் இந்த நேரத்தில் அடுக்குத்தொடரைப் பற்றிப் பார்த்துவிடுவதும் சரியாக இருக்கும். இரட்டைக் கிளவி என்றதும் மளமளவென சொல்லிவிடக் கூடிய பலர் அடுக்குத் தொடர் என்றதும் திருதிரு என விழிக்க வாய்ப்பிருக்கிறது. அச்சம் தவிர்ப்போம். இன்று இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்துவிடுவோம்.

முதலில் வேற்றுமை- சொல்ல சொல்ல, மெல்ல மெல்ல என்பது போன்ற அடுக்குத் தொடர் சொற்களைத் தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும்.  அதாவது சொல்ல சொல்ல எனும் அடுக்குத்தொடரில் ‘சொல்ல‘ எனும் சொல் தனியாக இயங்கும் பொருளும் தரும். இரட்டைக் கிளவி சொற்களில் அது நடக்காது.

ஆனால், அடுக்குத் தொடர் சொற்களுக்கு இடையேயும் ஒற்று மிகாது.

அந்த வகையில் ‘திகுதிகு‘- வும், ‘மெல்ல மெல்ல‘-வும் எனக்குப் பிடித்தவை, தமிழில் பேசுவது குறைந்து ஆங்கில வார்த்தைக் கலப்போடு பேசுவது நாகரீகம் எனக் கருதும் இன்றைய சூழலில் அடுக்குத் தொடரையும், இரட்டைக் கிளவிகளையும் தினப்பேச்சில் கேட்பது அரிதாகி வருகிறது. 

அதனால், சமீபத்தில் நீங்கள் கேட்ட ரசித்த இரட்டைக்கிளவி அல்லது அடுக்குத்தொடர்கள் எதாவது இருந்தால் கொஞ்சம் பகிருங்களேன். கேட்போம்.

by Swathi   on 08 Feb 2020  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
26-Feb-2020 08:18:44 sankaranarayanan said : Report Abuse
வல வல என்று பேசுதல்
 
26-Feb-2020 08:16:44 sankaranarayanan said : Report Abuse
கள கள என்று சிரித்தார்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.