LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

ஆரோக்கிய சமையல்

சமையல் கலைஞர் ஜி. குமரேசன், சேலம்

சிறுதானிய கந்தரப்பம்

தேவையானவை 

  • கம்பு அரை கப்
  • ராகி அரை கப்
  • உளுந்து 100 கிராம்
  • துவரம் பருப்பு 50 கிராம்
  • வெல்லம் பாகு காய்ச்சி அது தேவையான அளவு
  • ஏலக்காய் ஒரு சிட்டிகை
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை

கம்பு ராகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். ஆகியவற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிதளவு ஊற்றி கெட்டியான அளவு இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் காய்ச்சிய வெல்லப்பாகைச் சேர்த்து இட்லி மாவு பதம் அளவிற்குக் கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அதில் ஏலக்காயும் சேர்த்து, சூடான எண்ணெய்யில் ஒரு கரண்டி அளவு மணவை ஊற்றி கந்தர அப்பத்தைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

சாமை அரிசி தேங்காய் பருப்பு தோசை

தேவையானவை 

  • சாமை அரிசி ஒரு கப்
  • துருவிய தேங்காய் ஒரு கப்
  • கடலைப்பருப்பு அரை கப்
  • உளுந்து அரை கப்
  • வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்
  • பூண்டு நாலு நம்பர்
  • காய்ந்த மிளகாய் 5 நம்பர்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை

சாமை அரிசி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து இருக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் உளுந்து ஆகியவற்றைச் சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். துருவிய தேங்காய் மற்றும் சாமை அரிசி , காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும். கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பையும் கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.

இரண்டையும் ஒன்று சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாகப் புளிக்க வைக்க வேண்டும்.  ஜீரகம் , கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மாவைத் தயார் செய்து தோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவேண்டும். 

கொத்தமல்லி துவையல் மற்றும் சின்ன வெங்காயம் சட்னி சுவையாக இருக்கும்.

குறிப்பு:  அரிசியுடன் தேங்காய் சேர்க்கும் போது தண்ணீரை அளவு பார்த்து ஊற்ற வேண்டும் ஏனெனில் தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே அரிசி அரைப்பதற்குப் போதுமானதாக இருக்கும்.

by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராகி களி - Ragi  Kali ராகி களி - Ragi Kali
கம்மங்கூழ் -Kambu-Choola Koozh கம்மங்கூழ் -Kambu-Choola Koozh
சாமை வெஜிடபிள் பருப்பு சாதம் சாமை வெஜிடபிள் பருப்பு சாதம்
எண்ணெய்  பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல் எண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்
வரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji? வரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji?
சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)? சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)?
வரகு பொங்கல் -varagu pongal How to cook varagu pongal? (வரகு பொங்கல் செய்வது எப்படி?) வரகு பொங்கல் -varagu pongal How to cook varagu pongal? (வரகு பொங்கல் செய்வது எப்படி?)
சாமை பொங்கல் How to cook saamai pongal?(சாமை பொங்கல் செய்வது எப்படி?) சாமை பொங்கல் How to cook saamai pongal?(சாமை பொங்கல் செய்வது எப்படி?)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.