LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

கிரிமினல்கள் நிறைந்த பார்லிமென்டை நான் மதிக்க முடியாது: அன்னா ஹசாரே குழுவின் கெஜ்ரிவால்

கிரிமினல்கள் நிறைந்த பார்லிமென்டை நான் மதிக்க முடியாது: அன்னா ஹசாரே குழுவின் கெஜ்ரிவால்


     "கிரிமினல் பின்னணியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்டை நான் மதிக்க முடியாது,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 

     கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், "பார்லிமென்ட் எம்.பி.,க் களில், 163 பேருக்கு எதிராக, கொடூர குற்றங்கள் புரிந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கற்பழித்தவர்கள், கொலைகாரர்கள் மற்றும் கொள்ளையடித்தவர்கள் எல்லாம் பார்லிமென்டில் அமர்ந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், ஜன்லோக்பால் மசோதா எப்படி நிறைவேறும்' என, தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு பார்லிமென்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்கள் அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டது. . அதன்படி, கெஜ்ரிவாலுக்கு லோக்சபா செயலர் மூலம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

 

     நோட்டீஸ்களுக்கு பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கிரிமினல் பின்னணியுடன் கூடிய எம்.பி.,க்களைக் கொண்டிருக்கும் பார்லிமென்டை நான் எப்படி மதிக்க முடியும். எம்.பி.,க்களில் 163 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அவர்களை எம்.பி.,யாக்கி, பார்லிமென்டிற்கு அவமதிப்பை தேடித் தந்ததற்கு அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.ரயில் விபத்து ஒன்றுக்கு பொறுப்பேற்று, தன் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரைப் போன்றவர்கள் பார்லிமென்டில் இருந்த காலம் அப்போது. ஆனால், இப்போதைய நிலைமையோ வேறு.பொது சேவை பற்றி அறியாத தொழிலதிபர்கள் எல்லாம், இன்று அரசியல் கட்சிகளின் துணையுடன் எம்.பி.,யாகி விடுகின்றனர். தங்களின் வர்த்தக நலன்களுக்காக அவர்கள் பார்லிமென்டிற்கு செல்கின்றனர். இது பார்லிமென்டை தவறாக பயன்படுத்தும் செயல் அல்லவா? இது பார்லிமென்டிற்கு அவமானம் இல்லையெனில், எது அவமானம் என கேள்வி எழுப்பியுள்ளார்

 

     மேலும் காங்கிரஸ் எம்.பி., சாஜன்சிங் வர்மா, ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.,க்கள் ரஞ்ஜித் பிரசாத், ராம் கிரிபால் யாதவ் ஆகியோர், லோக்சபா செயலர் மூலம் எனக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களில், ரஞ்ஜித் பிரசாத், பார்லிமென்டில் லோக்பால் மசோதாவை கிழிந்து எறிந்தவர். அவர் பார்லிமென்டை அவமதித்தாரா அல்லது நான் அவமதித்தேனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர்களில், 14 பேர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான தகுந்த ஆதாரங்களுடன் கடிதம் ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அன்னா ஹசாரே குழுவினர் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தார். 

by uma   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.