LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழர்கள் வெளிநாட்டு பொறுப்புகள் -International positions

திருமதி. நவநீதம்பிள்ளை -Navanethem Pillay

 திருமதி. நவநீதம்பிள்ளை அவர்களின் பிறந்த நாள் 23, செப்டம்பர் , 1941


நவநீதம் பிள்ளை (Navanethem Pillay), 
பிறப்பு: செப்டம்பர் 23, 1941)

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் ஆகஸ்ட் 2014 வரை 6 (ஆ) ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் பணியாற்றினார்.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த இந்தியகுடிவழித் தமிழரானநவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர்.

ஜனவரி 1965 இல் இவர் காபிபிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார் 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கு இவரும் இவவரது கணவரும் இணைந்து நெல்சன்மண்டேலா உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் பாதுகாவலராகக் கடமையாற்றினர்.

புவியிடம் அடிப்படையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

1973 இல் நெல்சன்மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப்பெண்மணி இவரே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர். ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார்.

ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது , என்றும் அது மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு 2014 வரை பணியாற்றினார்.

இவருக்குப் பெண்கள் உரிமைக்கான முதலாவது  குரூபர் பரிசு 2003-ல் வழங்கப்பட்டது

தமிழ் ஈழப் படுகொலை பற்றி இவர் விசாரணை மேற்கொண்டு ஓர் அறிக்கை வெளியிட்டார்.

 

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.