LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!

ஆதர் அடையாள அட்டையை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி அந்நியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் நீதிபதி பி.எஸ்.சவுகான், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறும்போது, ''இந்தியாவில் சட்ட விரோதமாக அந்நியர்கள் குடியேற்றம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டையால் சட்ட விரோத குடியேற்றங்கள் குறையவில்லை. ஆதார் அட்டையை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது.

 

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒரு கோடி பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். வெளிநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வருபவர்களால் எல்லையோர மாநிலங்களான அசாம் போன்ற மாநிலங்களின் கலாச்சாரங்கள் சீரழிந்து வருகிறது.

 

அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும், தாங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்ல என்றும் கூறுகின்றனர். அத்தகைய குற்றவாளிகளை உரிய ஆதாரங்கள் சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும்'' என்றனர்.

by Swathi   on 05 Feb 2014  1 Comments
Tags: Aadhaar Card   Illegal Migrants   Supreme Court   Aadhaar Card Illegal   ஆதர் அட்டை   உச்ச நீதிமன்றம்   அன்னியர்கள் ஊடுருவல்  
 தொடர்புடையவை-Related Articles
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !! முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !!
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !! மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது
கருத்துகள்
06-Feb-2014 06:03:52 saranraj said : Report Abuse
நல்ல நியூஸ் குட் மருத்துவ குறிப்பு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.