LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியின் 18 நிபந்தனைகள் !!

காங்கிரஸ் - பா.ஜனதா ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வேண்டுமெனில், தங்களது 18 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவ்விரு கட்சிகளுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

 

ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகள் பின்வருமாறு,

 

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், 

 

டெல்லியில் விஐபி-க்கள் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்; எம்.எல்.ஏ., அமைச்சர், டெல்லி அதிகாரிகள் சுவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; 

 

ஜன் லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே சொன்ன வடிவத்திலேயே நிறைவேற்ற வேண்டும்; 

 

மின்சார மீட்டர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்; 

 

டெல்லியில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்காது; 

 

டெல்லியில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியங்களை அளிக்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது; 

 

டெல்லியில் 500 அரசு பள்ளிகளை திறக்கவும், தனியார் பள்ளிகளில் நன்கொடை கொடுப்பதற்கு முற்றுப்புள்ளிவைத்து, கல்விக்கட்டணத்தை வெளிப்படையாக செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்தும் உங்களது கட்சியின் நிலையை தெளிவாக தெரிவிக்க வேண்டும்; 

 

டெல்லியில் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் 3 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.

 

ஒவ்வொரு காலனி உட்பட அனைத்து நிலைகளிலும் மொஹல்லா சபாக்கள் உருவாக்கப்பட்டு அவையே தீர்மானிக்க வேண்டும். 

 

ஒருநாளைக்கு 220 லிட்டர் நீர் வழங்கப்பட வேண்டும்.

 

ஒழுங்குபடுத்தாத காலனிகள் முறைப்படுத்துதல் அவசியம். 

 

குடிசைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும். 

 

தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும். 

 

ஒவ்வொரு சாதாரண வர்த்தகருக்கும் சாலைகள், மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.  

 

நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் திறப்பது 

 

அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் தீர்வு காணும் வகையில் நீதித்துறையை மேம்பாடு செய்தல்.

by Swathi   on 14 Dec 2013  0 Comments
Tags: ஆம் ஆத்மி கட்சி   Arvind Kejriwal Conditions   ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகள்   Aam Aadmi Party Conditions           
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !! நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !!
டில்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி முடிவு !! அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகிறார் !! டில்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி முடிவு !! அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகிறார் !!
காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா வாக்காளர்களிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி கட்சி !! காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா வாக்காளர்களிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி கட்சி !!
டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியின் 18 நிபந்தனைகள் !! டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியின் 18 நிபந்தனைகள் !!
போலிஸ் பாதுகாப்பை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் !! போலிஸ் பாதுகாப்பை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் !!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.