|
|||||
ஆம்பள படத்தின் கதை இது தான் !! |
|||||
அரண்மனை படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இந்த படத்தில், ஹீரோவாக விஷால் நடித்துள்ளார். ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மத கஜ ராஜா படத்தை தொடர்ந்து, விஷால், சுந்தர்.சி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷால், ஹன்சிகா மோத்வானி தவிர ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா போன்ற மாஜி ஹீரோயின்களும் நடிக்கப்போகிறார்கலாம். இந்த படத்தின் கதை, தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவருக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்து விட்டால் அண்ணன் சொத்துக்கள் தங்களுக்கு வந்துவிடும் என்று தங்கைகள் திட்டமிடுகிறார்கள். தங்கள் மகளைத்தான் விஷால் காதலிக்க வேண்டும் என்று அத்தைகள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் போடும் திட்டங்களும் அந்த திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் விஷால் தப்பிப்பதும்தான் காமெடி கதை. கடைசியில் மூன்று அத்தைகளில் எந்த அத்தை மகளை விஷால் காதலிக்கிறார், கைவிடிக்கிறார் என்பது தான் படத்தின் கிளைமாக்ஷாம். |
|||||
by Swathi on 22 Sep 2014 0 Comments | |||||
Tags: Aambala Aambala Movie ஆம்பள ஆம்பள திரைப்படம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|