LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு !!!

     ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.


     அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
வல்லவனுக்கு வல்லவன் வல்லவனுக்கு வல்லவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.