LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஆட்டுக்குட்டி ஆனாலும்....ஆலமரமானாலும்.....

            " வெள்ளிக் கிழமை வந்தாலே இந்த பெண்ணிற்கு தலை கால் புரியாது. " என்ற அலுவலக நண்பர் கிண்டலை நான் அலுவலகத்தில் நுழைம்போதே கேட்டேன். எரிச்சல் வரவில்லை.கைப் பையை மேஜையில் வைத்து விட்டு கை எழுத்திட மேல் அதிகாரி அறை சென்றேன். " காவேரி , இந்த பைலை நன்றாக படித்து அக்கௌன்டன்ட் ஸ்ரீ ராமுடன் கலந்து ஆலோசித்து தயார் நிலையில் வைத்து கொள்ளவ்கொள்ளவும். பார்ட்டி 4 மணிக்கு வருவார்கள்" என்று மேனேஜர் என்னிடம் பைலைக்  கொடுத்தார். அறையில் நுழைந்த ஸ்ரீ ராம் , "இன்று வெள்ளிக் கிழமை, காவிரியை விட்டு விடுவோம், நானே பார்த்து கொள்கிறேன்" என்னிடம் பைலை வாங்கிக் கொண்டார். எனக்கு கோபமே வரவில்லை.

                என் இடத்திற்கு அமைதியாக வந்தேன். வெள்ளிகிழமை என்ன விசேஷம் என்று  எல்லோருக்கும்  தோன்றலாம். விசேஷம் என்று சொல்ல முடிய விட்டாலும் விஷயம் உண்டு. நான் வாராவாரம் வெள்ளிக் கிழமை மாலை சிவாவை சந்திப்பேன். சிவாவை நான் விரும்புகிறேன். அவரும் என்னை விரும்புகிறார். விரைவில் திருமணம் நடக்கும். அதனால் இந்த கேலி , கிண்டல் , விமர்சனங்கள் என்னைக் கோபப் படுத்துவது இல்லை. மாறாக இவற்றைக் கேட்கவே ஒரு சுகம். இவை இல்லாது போனால் கேலி செய்ய மாட்டர்களா என ஏங்கிப் போய்விடுவேன்.

               சிவாவை நான் சந்தித்ததே தற்செயல்தான். ஒரு நாள் நான் ஆர்யா பவனில் காபி அருந்திக் கொண்டு இருந்த பொழுது   அடுத்த மேகையில் இவர் டிபன்  சாப்பிட்டு கொண்டு இருந்தார். குழப்பத்தில் முக்கியாமான ஆபீஸ் டாகுமென்ட்ஸ்களை விட்டுவிட்டு போய்விட்டார். நான் அவர் ஆபீஸ் தேடி போய் அவற்றை அவரிடம் கொடுக்க, ஏற்பட்ட பழக்கம். வெள்ளிகிழமைகளில் ஆர்யா பவனில் சந்திக்க தொடங்கினோம். அவர் தன்  பிரச்சனைகளை சொல்வார், புலம்புவார்.. என் பதில்  எதுவானாலும் .அவர்   தீர்வு   கிடைத்து போல் உணர்வார். அவருக்கு குடும்பத்தில் ஒரே பண பிரச்சனைகள். நான் ஒன்றும் பணக்காரி இல்லை. என்  வீட்டிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவரிடம் முறையிட எனக்கு தோன்ற வில்லை.  நான் அவர் துன்பங்களுக்கு வடிகால் என அவர் நினைத்து இருக்கும் பொழுது என் துன்பங்களை சொல்ல என் இறுமாப்பு இடம் கொடுக்கவில்லை. சிவாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் அவருக்கு  அடைக்கலம் கொடுக்கும் அவதாரமாக என்னை  நினைத்துக்கொண்டேன். சிவாவை இந்த இன்னல்களிலிருந்து  மீட்டு செல்லமாக வைத்து கொள்ள வேண்டும் என்று என் மனம் சொல்லிக்கொண்டே  இருக்கும். எனக்கு அவர் தேவையோ இல்லையோ அவருக்கு நான் தேவை என்று உணர தொடங்கினேன்.  அது  உண்மைதான். சிவா அடிக்கடி என்னிடம் " கிருஸ்த மதத்தில் பாதிரியாரிடம் பாவங்களை சொன்னால் மன்னிப்பு கிடைக்கும். என் பிரச்சனைகளை இந்த  காவேரியிடம்  சொன்னால் தீர்வு கிடைக்கும்." சொல்வார். நாளாக நாளாக சின்ன சின்ன விஷயங்களுக்குகூட என் ஆலோசனையைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. சிவா என் ஆட்டுக்குட்டி என நினைக்க தொடங்கிவிட்டேன். 


           "உங்களைப் பார்க்க ஒரு வயதானவர் வந்து இருக்கிறார் " என்று அட்டெண்டர் அண்ணாசாமியின் குரல் என்னை சிவா சிந்தனையிலிருந்து வெளி உலகிற்கு இழுத்து வந்தது. வெளியில் வந்து பார்த்தேன். யார் என்றே தெரிய வில்லை. என் தயக்கம் அறிந்து அவர் சொன்னார் " நான் சிவாவின் அப்பா ". பழைய சட்டை. மங்கலான வேட்டி , இரண்டு முன்று நாள் தாடி, சோகமே உருவாய் நின்றார். இன்னும் சுத்தமாக வந்து இருக்கலாம் என்று தோன்றியது. அவர் தன வீட்டு கஷ்டங்களை சொன்னார்.ஏனோ என் மனதில் அது பதியவில்லை. விஷயதிற்கு வந்தார். " தங்க நகை வியாபாரி வையாபுரி என் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தன் ஒரே  மகளை சிவாவிற்கு மணமுடித்து சிவாவை வீட்டு மாப்பிளையாக கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தார். இந்த கல்யாணம் நடந்தால் சிவாவிற்கு பணக்கார வாழ்க்கை ,  எங்கள் கடன் எல்லாம் தீரும். என் மற்ற பெண்களையும் நல்ல இடத்தில கல்யாணம் செய்து கொடுக்க முடியும் " அவர் பேச்சின் விபரீதம் என் மனதை உரசியது. அன்பு காட்டி வளர்த்த  ஆட்டுக்குட்டியை அவிழ்த்து விடு என்கிறார். எக்கே என்று இருக்கும் சிவாவை வையாபுரிக்கு கொடுத்துவிட வக்காலத்து செய்கிறார். மனம் உடைந்து போயிற்று. கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. பதில் சொல்லவே தோன்ற வில்லை.அவர் என் பதிலைக் கேட்கவே இல்லை. நான் விட்டுகொடுதுவிடுவேன் என எப்படி நினைத்தாரோ , போய்விட்டார். என் இடத்திற்கு திரும்பி வந்தேன். வேலையில்  மனம் லயிக்க வில்லை. அண்ணாசாமி , மேனேஜர், ஸ்ரீ ராம் எல்லோரும் தங்கள் வேலையில் மும்மரமாக இருந்தார்கள். இந்த விஷயம் கேட்டால் மிகவும்  நொந்து விடுவார்கள். நான்  இவர்களின் செல்ல பெண் . 

                     நேரம் ஆக ஆக என் இழப்பின் அதிர்ச்சி போய் சிவாவின் லாபம் கண்ணுக்கு தெரிய துவங்கியது. இந்த திருமணத்தால் சிவாவின் பண பிரச்சனைகள் தீரும். பிரச்சனைகள் இல்லாத சிவாவிற்கு ஒரு காவிரியே தேவை இல்லை துக்கம் நிறைந்த வாழ்வில் காவேரி சிவாவிற்கு ஒரு சுமைதாங்கி. துக்கமே இல்லாத வாழ்வில் காவேரி சிவாவிற்கு  தேவை இல்லை. தெய்வம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து இருக்க, நான் நல்லது சொல்லி இதை ஏற்க செய்யவேண்டும். என் சிவாவை நான் கரை ஏற்றவேண்டும். என் மனம் தெளிந்தது.  அப்பாவின் இரண்டாம் கல்யாணத்திற்காக தன் வாழ்வை  தியாகம் செய்த பீஷ்மர் நினைவு எனக்கு வந்தது. தெரிந்தே கிருஷ்ணருக்கு தானம் செய்த கர்ணன் நினைவு வந்தது. என் காதலை தியாகம் செய்ய முடிவு செய்தேன். மாலையில் சிவாவை சந்தித்து வரும் நல்வாழ்விற்கு வழி காட்ட வேண்டும்.வையாபுரி என் எதிரி அல்ல.

                   ஆர்யா பவனில் சிவாவை சந்தித்த பொழுது தோ சில்லறை பிரச்சனைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு இருந்தார். தங்க மாளிகை அவர் கதவைத் தட்டுவதை அவர் அறிந்து இருக்க வில்லை. விளையாட்டாக துவங்கி விவரமாக சொன்னேன். நான் என்னை கர்ணன் , பீஷ்மர் இவர்களுக்கு ஈடு என நினைத்துப் பார்த்தேன். 

                   சிவாவின் பதில் தெளிவாக வந்தது. " என் வீட்டில் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு தீர்ப்பேன். ஓஹோ என்று அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக என் காதலியை விட்டு கொடுக்க மாட்டேன். திடீரென கிடைக்கும் அதிர்ஷட்டத்தில் அவர்கள் தலை கால் புரியாமல் வாழ்வார்கள். அதில் அர்த்தமில்லை. முடிந்தவரை நான் என் குடும்பத்திற்கு உதவுவேன். நம் கல்யாணம் நடந்தவுடன் நீயும் உன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக்கு. நாம் இருவரும் நல்லபடியாக வாழ்வோம்.  நாம் நம் குடும்பங்களுக்கு  உழைத்து போதும். நம் கல்யாணத்திற்கு உடனடியாக  நாள் பார்போம். "

                     சிவா என் முன் விஸ்வருபம் எடுத்த பெருமாளாக தெரிந்தார். நான் என் ஆட்டுக்குட்டியை அரவணைத்து கொண்டு இருப்பதாக நினைத்து இருக்க அவர் எனக்கு ஆலமர நிழலாக நிற்கிறார். 

 ஆட்டு குட்டி ஆனாலும் ஆலமரமானாலும் அது என் சிவா தான். 

 

 author: S Ramakrishnan

attukuttiyo... alamaramo
by Ramakrishnan   on 03 Aug 2013  0 Comments
Tags: ஆட்டுக்குட்டி   ஆலமரம்   ராமகிருஷ்ணன்   Ramakrishnan           
 தொடர்புடையவை-Related Articles
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!! ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!!
என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !! என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !!
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !! லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !!
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (உயிரியல்) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (உயிரியல்)
துரை சிங் இயக்கும் ஆலமரம் !! துரை சிங் இயக்கும் ஆலமரம் !!
ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !! ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !!
ஆட்டுக்குட்டி ஆனாலும்....ஆலமரமானாலும்..... ஆட்டுக்குட்டி ஆனாலும்....ஆலமரமானாலும்.....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.