LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விழாவில் பேசியதாவது,

பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு இரண்டு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவற்றில் ஒன்று மதிப்பெண் சான்றிதழாகவும், மற்றொன்று உலகளாவிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழாகவும் இருக்க வேண்டும்.

இந்த இரண்டாவது சான்றிதழை வழங்குவதற்காக இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும்.

மேல்நிலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் பல்வேறு பாடத்திட்டங்களைப்  புகுத்தி தேவையற்ற பாடப்பிரிவுகளை அகற்றி தனித்திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து படிக்க மத்திய,மாநில அரசுகள் வழி செய்தால் பள்ளிக் கல்வி மேலும் சிறக்கும்.

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதி வாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

மேலும் அப்துல் கலாம் பேசுகையில், "கனவு என்பது  இளைஞர்களின் வாழ்வில் முக்கியமானது. கனவு தான் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தரக்கூடியது. ஒவ்வொரு இளைஞன் மனதிலும் லட்சிய விதை விதைக்கப்பட வேண்டும். அந்த விதை நாளைய வரலாற்றை உருவாக்கி இந்தியாவை வலிமை மிக்க தேசமாக மாற்றும் என அவர் பேசினார். 

by Swathi   on 13 Feb 2015  0 Comments
Tags: Abdul Kalam   Education System   அப்துல் கலாம்   தொழில்திறன்   செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி   கனவு     
 தொடர்புடையவை-Related Articles
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !! தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!
உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்)
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !!
பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !! பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.