LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (26 – 11 – 2017 முதல் 02 - 12 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ.(99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் பொருளாதார நிலை சீராகி  மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் நடக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கும். பிறருக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
பரணி
இந்த வாரம்  நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். தாராளமான தனவரவு இருக்கும். உற்றார் உறவினரின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். காதல் மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நல்லவர்களுடனான தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால்  வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு முலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து  தொழிலில் நல்ல முன்னேற்றங்கள்  ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைமிக்க செயல்களால்  பாராட்டப்படுவீர்கள்.  வாழ்க்கையில் மனைவி நல்ல முன்னேற்றத்துக்கான ஆலோசனைகளைத் தருவார். வியாபார விஷயமான வெளியூர்ப் பயணங்கள் இலாபகரமாக அமையும் அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது.   உல்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். மனக் கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும்.  வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும்.
ரோகிணி
இந்த வாரம் குழந்தைகளின் விளையாட்டுகளைக் கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும். அனைத்து முயற்சிகளிலும் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். சிலருக்குப் புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. எனவே, கஷ்டங்கள் வந்தாலும் கலங்காதீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தை வேறு புதிய முதலீட்டுளில் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சியும் பொங்கும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.  எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் தெய்வீக  அருள் கிடைத்து, மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.  பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
 
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம்  பொருள் வரவு எதிர்பார்ப்புக்கு மேல் இருக்கும். நல்ல பண்புள்ள நண்பர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிட்டு, வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும்.
பூசம்
இந்த வாரம் வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்ப்புப்படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்புத் தேவைப்படும். புதிய விரிவாக்கத் திட்டங்களால் இலாபத்தைப் பெருக்குவர். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபத்தை அதிகரிப்பீர்கள்.
ஆயில்யம்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.  உறவுகளின் வருகையால் ஆனந்தம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். பொதுஜனத் தொடர்புகளால் புகழ் ஓங்கும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.  

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிரிகள் கை ஓங்கும் ஆதலால், எதற்கும், அவர்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. அரசு அலுவலத்தில் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். செலவுகளைக் குறைத்துப் பணத்தைச் சேமிப்பது , பிற்காலத்துக்கு உதவும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.. விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, அதில் வரும் இலாபத்தால் வீட்டில் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
பூரம்
இந்த வாரம் தாயின் அரவணைப்பு ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேவையற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குப் பிறருக்குக் கட்டளையிடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர்களால் பெற்றோர்களுக்குப் பெருமை சேரும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் கனிவாகக் கைகொடுக்கும், புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் கடன் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும்.

கன்னி(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்புத் தேவை. புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். கௌரவம், அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.
ஹஸ்தம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். பிறர் பாராட்டும்படியான மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் ஏறபடும். சம்பாதிக்கும் திறன் மேம்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, தொழில் வாய்ப்புக்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எப்போதும், எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்.
சுவாதி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் உங்கள் கடின உழைப்பால் சம்பாதியம் கூடும். உங்கள் செயல்திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கையுடன்  சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

விருச்சிகம்(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். அதன் காரணமாகச் செலவுகள் அதிகரிக்கும். வேலை விஷயமாகத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கோபத்தைத் தவிர்த்தால் வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்.  பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும்.
அனுஷம்
இந்த வாரம் உங்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கைச் சுலபமாக அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறுங்காலம் கனிந்து வரும்.
கேட்டை
இந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பீர்கள். எல்லாவகையிலும் சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.
பூராடம்
இந்த வாரம் அனைத்துக் காரியங்களிலும் மனைவியின் உதவிகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக   ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். வேலைகளில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.  
திருவோணம்
இந்த வாரம் எதிர்பாராதவிதமாகப் பல வழிகளிலும், தனவரவுகள்  வந்து சேரும். வந்த பணத்தை வீண்செலவுகள் செய்யாமல் செமிப்பது பிற்காலத்திற்கு உதவிகரமாக இருக்கும். வேலைகளில் சுறுசுறுப்பைக் கூட்டிச் சிறப்பாகப் பணிபுரிந்தால் அதிகாரிகளின் பாரட்டைப் பெறுவீர்கள். மனதில் மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் அதிகரிக்கும். வியாபார சம்பந்தமான பயணங்களால் எதிர்பார்ப்புக்கு மேல் அதிக இலாபம் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தானதருமங்கள் செய்து மகிழ்வீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அரசு உதவியால் அனுகூலமாய் முடியும். தொடர் முயற்சி காரணமாக, வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும்.  பணவிஷயங்களில் யாரை நம்பியும் ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வீக சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  சிறப்பான உடை, சிங்காரமான ஆபரணங்கள் ஆகியவை கிடைக்கும். எதிர்பார்த்தபடி தனவரவு ஏற்பட்டு பொருளாதார நிலை சீராகும். திறமை அதிகரித்து கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, அக்கறையுடன் ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
சதயம்
இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சிலருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறும்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குப் பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் உறவினர் வருகையால் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலை தூரச் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் நீங்கள் அரசுத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில நல்ல காரியங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது. விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் இருக்கும். வாக்குவன்மையால் பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசு அதிகாரிகளால் சிலருக்கு நன்மைகள் ஏற்படலாம். காரியத்தடைகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும்.  
ரேவதி
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.

by Swathi   on 25 Nov 2017  0 Comments
Tags: நட்சத்திர வார பலன்கள்   நட்சத்திர பலன்கள்   Natchathira Palangal   Vaara Natchathira Palangal   Weekly Natchathira Palangal   Abirami Sekar     
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.