LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (19 – 11 – 2017 முதல் 25 -11 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் 99948 11158

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி
இந்த வாரம் குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அரசு வகை  ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலமாகக் கிடைக்கும்  உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது.
பரணி
இந்த வாரம் பயண சுகம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். குடும்பத்தில் நடக்க இருக்கிற சுபகாரியங்களுக்காக அலைந்து திரியம் நிலை ஏற்படும். சகோதரர்களின் தீய நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். அரசுப் பணியாளர்களுக்குப் பணி இடங்களில் வேலைப்பளு அதிகமானாலும், அதிகாரிகளின் அரவணைப்பு இருக்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் ஒரு சிலருக்கு அதிக உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். தொழில் வகையில் எதிர்பார்த்த இலாபங்கள் இல்லை என்றாலும் ஒரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே, மற்றவர்களின் வேலையையும் தானாக முன்வந்து பொறுப்போடு செய்வீர்கள். உண்மை உழைப்பின் காரணமாக பணியிடத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு, புத்திர பாக்கியம் ஏற்படும்.  நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள். கலைஞர்கள் இலக்கியவாதிகள் ஆகியோருக்குப் புதிய பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும்.  வெளியூர்ப் பயணங்கள் செல்லும் போது வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும். குடும்பத்தில் இதுநாள்வரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி
இந்த வாரம் மனைவி, குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்கள் மனம் மகிழச் செய்வீர்கள். உங்களின் தீரம் மிக்க செயல்களால், அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் காட்டும் உண்மையான அன்பு கண்டு உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்துவிடுவர். நவீன வசதிகளுடைய புதிய  வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள். ஒருவருக்கொருவர் எவ்வளவு அனுசரித்துச் சென்றால்  வீட்டில் ஏற்படும் சிறு சச்சரவுகளைச் சமாளிக்க முடியும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் பலவழிகளிலும்  அதிக தனவரவு ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின்  இனிய நட்பால் உங்களுக்கு வளமான எதிர்காலம், வாழ்க்கை முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குப்.  பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஆகியோர், உங்கள் அசாத்தியத் தொழில் திறமைகளைக் கண்டு பொறாமை கொள்ளுவர்.  

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் எறும்பு போன்ற உங்கள் வேகமான, சுறுசுறுப்பு மிக்கப் பணித்திறமைகளை வெளிக்காட்டி அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த நபர்களிடமிருந்து, எதிர்பார்த்தபடி  தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வேலை விஷயமாக வெகு நாளாக எதர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். உறவுகளின் இல்ல விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும்போது மனதில் ஒரு திருப்தி ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று சுப விரையங்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவிக்கு குழந்தைப் பேறு உண்டாகி இருக்கும் சேதி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு கைச்செலவுகளைக் குறைத்து சேமிப்புக்களை அதிகரிப்பது நல்லது. நீங்கள் ஆற்றிய பொதுச் சேவை காரணமாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். இறைத் தொண்டில் ஈடுபாடு அதிகரித்து, பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய முற்படுவீர்கள். தெய்வத்தின் கருணையால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் தாய்வழி உறவுகளின் உதவிகள் கிடைக்கும்.  அரசு வகையில் வரி பாக்கிகளை  உடனே கட்டவேண்டிய கெடுபிடி இருக்கும். அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். அரசுப் பணியாளர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் பணியில் முன்னேற்றங்களைத் தரும். இரவுப் பயணங்களின் போது பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்கள் வாழ்க்கைப் பாதையில் வசந்த மலர்கள் பூக்க  தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்பது நல்லது.  அதன் காரணமாகக் கவலைகள் மறைந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் தாராளமாக இருக்கும். உறவினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உல்லாசமான பொழுது போக்குகளால் உள்ளம் மகிழும்.  தாய், மனைவி, தோழி போன்ற  பெண்ணினத்தால் இலாபம் ஏற்படும். ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.
பூசம்
இந்த வாரம் இதுநாள் வரை பிரிந்திருந்த தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, மீண்டும் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  கல்வி முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். சிலருக்கு அவர்களின் சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு எரிச்சல்  ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முன்னேற்றம் இருக்கும்.
ஆயில்யம்
இந்த வாரம் தந்தையின் உறவுகள் மூலமாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். பணியில், விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் உங்கள் தோற்றத்தில் புதுப்பொலி ஏற்படும். சுற்று வட்டாரத்தில் பெயரும், புகழும் ஓங்கும். படிப்பில் தீவிர முயற்சியின் காரணமாக அறிவுத்திறன் கூடும். சிலர் போலிக் கம்பெனிகளை நம்பி முதலீடு செய்து, பணவிஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய அதிகாரமும், பொறுப்பும் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  
பூரம்
இந்த வாரம் அன்றாட வருமானத்தில் அளவற்ற வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும்.  வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்குப் புதிய சொத்துக்கள்,  மனை வாங்கும் யோகம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரிய அனேகக் கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும். எழுத்தாளர்களுக்குத் தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்ப ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் ஒத்துழைப்பால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் விரும்பிய பெண்ணுடன் திருமணம் நடக்கலாம். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மனமகிழ்ச்சி கிடைக்கும். உடன் பிறப்புக்களால் நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதிகாரம் மிக்க தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டு, புகழும் ஓங்கும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு வெப்ப சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு வெளியூரில் இருந்து இனிக்கும், நல்ல செய்திகள் வரும். வீட்டில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.திருமணவாழ்க்கை திருப்திகரமாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும் அமையும். அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறும்.  அதன் மூலமாக பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.   உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலருக்குத் தங்கள் பகைவர்களால்  பயம் ஏற்படலாம்.
ஹஸ்தம்
இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளை பாசத்தோடு அணுகி, அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசுப் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடை, தாமதங்கள் ஏற்பட்டு டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு ஏற்படும் இலாபத்தால், தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி, அதன் காரணமாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். அதற்குத் தக்க  செலவுகளும் கூடும்.  கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்.  அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதுப் பதவிகளும் அதனால் சம்பள உயர்வும் ஏற்படும். வியாபார சம்பந்தமாகச் செல்லும்  வெளிநாட்டுப் பயணங்களல் ஆதாயங்கள் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள். அரசு மரியாதை கிட்டும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் பெண் குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் கவனம் எடுங்கள், அவர்கள் போக்கில் விடாமல் அடக்கி வைப்பது நல்லது. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், வெற்றிகரமாக முடியும். குழந்தைகள்  விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்.  குடும்பத்தில் சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.
சுவாதி
இந்த வாரம் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவே இருக்காது.. புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும்..
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். தொழில் தொடங்க, அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.  பெரிய மனிதர்கள் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் அனைத்து வசதிகளும் பெருகும். பங்களாப் போன்ற பெரிய வீடும் அமையும். வீட்டில் ஏற்படும் புதிய வசதிகளால் மனம் மகிழும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். நல்ல பண்பாளர்களின் தொடர்பால் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிவீர்கள். பெரிய இடத்துப் பெண்  மனைவியாக அமைவாள்.
அனுஷம்
இந்த வாரம் இனிய பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். அன்னையின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  பல புண்ணியத் தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும்.
கேட்டை
இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, ஓரளவு இலாபமும் அதிகரிக்கும். அரசு உயர் அதிகாரிகளின் சிபாரிசால் அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சிலருக்குத் தலைவலி / கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல தேர்ச்சி ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும்.  புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.
பூராடம்
இந்த வாரம் திருமண வயது வந்தும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேர்ந்தாலும், அதனால் இலாபம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.  குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரித்து, அதன் காரணமாகக் குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு  எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. இந்த வாரம் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
திருவோணம்
இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் வரவு ஏற்படும்.  தங்கள் வாக்கு வன்மை காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். தேர்வுகளுக்காகப் படிக்கும்  மாணவர்கள் கவனமாகப் படித்தால், கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சேவை செய்யும் முகமாக பொது நலத்தில் ஈடுபட்டுப் புகழ் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் தங்களுக்கு  உடல் உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி கூர்மை மற்றும் செயல்திறன் அதிகரித்து, உங்கள் செயல்பாடுகள் போற்றும்படியாய் இருக்கும்.. அனைத்து முக்கிய காரியங்களிலும் எறும்பை ஒத்த சுறுசுறுப்புடன்  செயல்படுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய வாகன வசதிகள் மேம்படும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  அதிக இலாபம் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில்  தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்குக் காரியத் தடைகளும், வழக்கு வியாஜ்ஜியங்களும் ஏற்படலாம். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆசையே துன்பத்துக்குக் காரணம். எனவே, வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது.  பெண்களின் வாழ்க்கையில் சுயமான முன்னேற்றம் நிலவும்.
சதயம்
இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.  தனச்சேர்க்கை உண்டு. பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் புதிய உயர்தரமான வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான வாரமாக இருக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்பட்டு மகிழ்வுண்டாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. தொழில் தொடர்பாக எடுத்த  புதிய முயற்சிகள்யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வார எதிர்பார்ப்புக்கு மேல் தாராளமான தனவரவு ஏற்படும்.  தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தத்துவ உபதேசங்கள், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகமும் அமைதியும் பெருகும். நவநாகரீக உடைகள், ருசியான உணவு வகைகள் ஆகியவை கிட்டும்.  தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். சினத்தை அடக்கினால் சிக்கல்கள் தீரும்.  புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் ஆரம்பத்தில் வீட்டுக்கான செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப்  பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய சொகுசு வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பலவழிகளில் உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைஞ்சல்கள் ஏற்படும் அல்லது திணருவார்கள். ஓய்வின்றி, அடிக்கடி ஏற்படும் வெளியூர்ப் பயணங்களால் அசதி ஏற்படும்.
ரேவதி
இந்த வாரம் அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொள்வர். மனைவியிடம் மட்டுமல்லாமல்  நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்தால் நிம்மதி பிறக்கும். பெண்களால் முழுமையான சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்.

by Swathi   on 18 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.