LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (22 – 10 – 2017 முதல் 28 -10 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம்.ஏ. (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு. புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாது. சுலபமாக வசூலாகிவிடும்.  தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.
பரணி
இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. பண விஷயமான சிந்தனைகள் எழும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு போன்ற  முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள் எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம். சிலர் காவல் துறைப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம். செய்யும் தொழிலில் இலாபம் குறைந்து, தடைகள் ஏற்படலாம். சிலருக்குக் குழந்தைகளால் அவமானமும், மனக் கலக்கமும் ஏற்படலாம். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும்.  புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.   வருமானம் அதிகம் வந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. தொழிலில் கூட்டாளியின் புதிய ஆலோசனைகள் வரவேற்கத் தக்கதாக இருக்கும். அவரது கடமை உணர்வும், திறமையும் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய முதலீடுகளைச் செய்ய முற்படுவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். கோடை வெப்பம் காரணமாக உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரலாம்.  உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீர்கள். மனைவியின் அரவணைப்பால் மனக் கவலைகள் மறந்து பறந்துவிடும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் விருந்தினர் வருகை வீட்டில் கொண்டாட்டத்தையும், கும்மாளத்தையும்  ஏற்படுத்தி மனதை குஷியாக வைக்கும். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும். புதிய சொத்துக்கள் சேரும். சுக சௌகரியங்கள் மேம்படும்.  சுப வார்த்தைகளைக் கேட்டு நல்ல குணங்களுக்கு மாற முயல்வீர்கள். சிலருக்கு எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம்.  செய்யும் தொழிலில் இலாபம் அதிகரித்து பொருளாதாரம் சீராகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.  

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும்.  அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும்.  புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். குடும்ப நண்பர்கள் அனுசரணையாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். பெண்கள் குடும்பத்தையும், வேலையையும் ஒருசேர பார்த்து சமாளிக்கத் திணர வேண்டிய சூழ்நிலை நிலவும். ஆயினும் தங்கள் திறமையால் சமாளித்துவிடுவர்.  
திருவாதிரை
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்பட்டு, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் மனதில் எழும் புதுப்புது ஆலோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, உங்களின் எதிர்பார்ப்பை விட தொழிலில் அதிக இலாபங்களை அள்ளித் தரும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குடும்பத்தில் சில நேரங்களில் அமைதி இன்மையும் நிலவும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு கோவில், குளம் புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் எனச் சென்று மகிழ்வீர்கள். வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பூஜா வழிபாடுகளாலும், பெரியோர் ஆசிகளாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.  சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தித்திறன் அதிகரித்து இலாபம் பெருகும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பெரியோர்களின் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். அறிவு விருத்தி ஆகும். மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீர்கள். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். விபத்தைச் சந்திக்க நேரலாம். கற்பனை வளம் பெருகும். சிலரது மனம் நண்பர்களின் சவகாசத்தால்  தீயவழி முறைகளை நாடும். எனவே, கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.
பூசம்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். தொலை தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும். வாழ்க்கையில் மனமகிழ்ச்சியையும், சுகானுபவங்களையும், அடைவீர்கள். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயங்கள் ஏற்படலாம். நல்லவர்கள் தொடர்பால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.

சிம்மம்(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பூஜா வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான தனவரவு இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நன்மைகள் அதிகம் ஏற்படலாம். புதிய தொழில் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் பணவரவு ஏற்படும். அரசு அதிகாரிகள் அனுகூலமாய் நடந்து கொள்வர்.
பூரம்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். உங்களுக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத் தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். தொழிலில் பொருட்களின் உற்பத்தி பெருகி, இலாபமும்  எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.
ஹஸ்தம்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பிறந்த நாள், திருமண விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் பேசப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கள் பிரகாசாமாய் இருக்கும்.

துலாம்(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  மிகமிக முக்கியமான பெரியோர்களின் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். புதிய வேலைகளை முடிக்கத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும்.
சுவாதி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்துமே விரைவில் கிடைக்கும்  சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். பொறுமையைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் இரவு விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்கப் பொழுதைக் கழிப்பீர்கள். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும்.  சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். எப்போதும் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில், நினைத்த இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வியாபாரிகள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து, இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
அனுஷம்
இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலருக்குப் பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்.
கேட்டை
இந்த வாரம் பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும்.
பூராடம்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு வீண்பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  சிலருக்குத் தாங்கள் கை வைக்கும் வேலைகளில் எல்லாம் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். உழைப்பே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். சிலருக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
திருவோணம்
இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். பக்திப் பெருக்கால் ஞானத் தன்மை எய்துவீர்கள். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பயணங்களால் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கலாம். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவுப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
சதயம்
இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். எப்போதும், உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகும்   சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும். தொழிற்சாலையில்  உற்பத்தியைப் பெருக்கி உன்னத நிலையை அடைவீர்கள். உங்கள் தொழில்வழி முன்னேற்றம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடைபெறும்.  சமயோஜிதமாகச் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்ட பெரும்  குழப்பங்கள் தீரும். புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் கலைஞர்களுக்குச் சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கை நிறைய முன் பணம் பெற்று மகிழ்வர்.  தொழிலில் உள்ளவர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனைக் கண்ட பனிபோல் விலகும், சிலருக்கு வருமானவரிப் பிரச்சனைகள் தலை தூக்கலாம் எனவே, கம்பெனிக் கணக்குகளை  சீராக எழுதி வைக்கவும். இல்லையெனில் சிக்கல்களைச் சந்திக்கலாம். வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம். இடம் சம்பந்தமான வழக்குகள் வெற்றி பெற்று, புதிய சொத்துக்கள் சேரும்.
ரேவதி
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

 

by Swathi   on 21 Oct 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (19 – 11 – 2017 முதல் 25 -11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (19 – 11 – 2017 முதல் 25 -11 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர் நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர்
இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ. இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ.
நட்சத்திர வார பலன்கள் (15 – 10 – 2017 முதல் 21 - 10 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (15 – 10 – 2017 முதல் 21 - 10 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர  பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (01 – 10 – 2017 முதல் 07 - 10 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (01 – 10 – 2017 முதல் 07 - 10 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.