LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF

ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!

பிறப்பு :


1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நேன்ஸி ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது காலமானார், குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர் நீல் ஆல்ன்ஸில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புகம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாக கொடுமை படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். அந்தக்கனமே அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 


தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்து பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து தபால்காரார் ஆனார் அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1834 ஆம் ஆண்டு தமது 25-ஆவது வயதில் (Illinois) இலினோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1833 ல் ஆண்ட் ரூட்லெஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்பட்டு இறந்தார். 


7 ஆண்டுகள் கழித்து லிங்கன் மறுமணம் செய்துகொண்டார். 1834 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் இலினோய் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார் லிங்கன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1854-ஆம் ஆண்டு லிங்கனை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம் புகைப்பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 


1859 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என நண்பர் ஒருவரு கேட்டபோது, அந்த தகுதி எனக்கு கிடையாது என்று பணிவாக பதில் கூறினாராம் லிங்கன். ஆனால் அப்படி கூறியவர் அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்ககூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862-ஆம் ஆண்டு அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர் அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.


அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம்பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தலையை அறுத்தெரியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.


நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. ஜனவரி 1865 ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். இரண்டாவது முறையும் முழுமையாக லிங்கன் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா மேலும் அமைதிபெற்றிருக்கும் உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும்.


ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1865-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் நாள் பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் அவர் 'அமெரிக்கன் கஸன்' என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 56 தான். 


மனிதகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தனத்தை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்துவிட்டு போவோம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. கருப்பினத்தவருக்கு சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பெற்று தந்திருக்க முடியாது. இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆபிரகாம் லிங்கன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


ஆபிரகாம் லிங்கனை பலமுறை வெற்றி கை விட்டிருக்கலாம், ஆனால் அவர் ஒரு முறைக் கூட முயற்சியை கைவிடவில்லை. 


வெற்றி - தோல்வி :


இதோ அவர் வாழ்க்கையில் அடைந்த வெற்றி தோல்விகளின் தொகுப்பு ஆண்டு வாரியாக.


1816 அவருடைய குடும்பம் தன் வீட்டை இழந்தனர். அவர் தன் குடும்பத்தின் கஷ்டத்தை சமாளிக்க வேலைக்கு அனுப்பப்பட்டார்.


1818 அவருடைய தாயார் காலமானார்.


1831 அவருடைய தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்தார்.


1832 மாநில தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.


1832 அவருடைய வேலையை இழந்தார். சட்ட படிப்பு மேற்கொள்ள சட்ட கல்லுரிக்கு விண்ணப்பித்தார் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


1833 தன் நண்பரிடம் கடன் வாங்கி ஒரு தொழில் தொடங்கினார். அந்த வருடத்தின் கடைசியில் அந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளானார். அவர் அந்த கடன் தொகையை அடைக்க 17 வருடங்கள் ஆனது.


1834 மீண்டும் மாநில தேர்தலில் போட்டியிட்டார் - இம்முறை வெற்றி.


1835 திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் அவருடைய காதலி இறந்து விட்டார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.


1836 மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் படுத்த படுக்கை ஆனார்.


1838 சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.


1840 தேர்தல் ஆணையராக போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.


1843 நாடாளுமன்ற பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.


1846 நாடாளுமன்ற பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார் - இம்முறை வெற்றி வாஷிங்டன் சென்று சிறப்பான முறையில் பணி புரிந்தார்.


1848 மீண்டும் நாடளுமன்ற தேர்தலில் களமிறங்கினார் - தோல்வி அடைந்தார்.


1849 தன்னுடைய சொந்த மாகாணத்தில் நில மேலாளர் பதவிக்கு முயற்சி செய்தார் - நிராகரிக்கப்பட்டது.


1854 செனட் உறுப்பினர் பதவிக்கு முயற்சி செய்தார் - தோல்வி அடைந்தார்.


1856 தன்னுடைய கட்சி துணை ஜனாதிபதியாக முயற்சி செய்தார் - 100 க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தது.


1858 மீண்டும் அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி 


1860 அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.


"ஆபிரகாம் லிங்கனின்" ஒரு வாரம்


ஆபிரகாம் லிங்கன் பிறந்தது - ஞாயிறு


முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்


இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்


வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன் 


பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன் 


லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி 


லிங்கன் உயிர் நீத்தது - சனி

 

by Swathi   on 11 Feb 2014  5 Comments
Tags: ஆபிரகாம் லிங்கன்   ஆபிரகாம் லிங்கன் வரலாறு   ஆபிரகாம் லிங்கன் சிந்தனைகள்   ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை   Abraham Lincoln History   Abraham Lincoln Quotes   Abraham Lincoln History Tamil  
 தொடர்புடையவை-Related Articles
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
கருத்துகள்
15-Apr-2018 07:02:30 ELayaraja said : Report Abuse
என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் ஒவ்வோரு தோல்வியின் போதும் என் தலைவன் லிங்கனையே நான் நினைத்து கொள்வேன் ...
 
24-Mar-2016 01:31:58 ஸ்.mohanraj said : Report Abuse
குட் one
 
03-Mar-2015 20:53:41 kanimozhi said : Report Abuse
when ever i get failure in my life i will go through his biography. he is great...me and ligan both born on sunday only...one day i belive that i will become a excellent like him.
 
18-Nov-2014 03:45:09 yalini said : Report Abuse
தி கிரேட் லிங்கன் அவர்கள். மன உறுதி படைத்தவர் .
 
14-Aug-2014 03:10:03 pushpa said : Report Abuse
வாழ்கையில் எ துவும் சருக்கல் இல்லை வாழ்கையை வாழ்ந்து பார் வாயிப்பு வரும்வரை காத்திராமல் வாய்ப்பை உருவாக்கு வெற்றி நிச்சயம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.